வியாழன், 8 ஏப்ரல், 2010

புவி வெப்பம் -3

கடந்த ஐம்பது வருடங்களில் புவி வெப்பத்தால் உலகில் ஏற்பட்டமாற்றங்களை பார்த்தால்,அதன் கோரத்தன்மையும் ,ஆபத்தும் நமக்கு நன்றாக புரியும்.புவி வெப்பத்தின் அடையாளமாக நமது வடதுருவத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றங்கள் நம்மை சிந்திக்கவைக்கும்.





வடதுருவத்தில் பெரும்பாலும் மலையில் வசிக்கும் எழுபது வகையான தவளைகள் போக இடமில்லாமல் அழிந்தே போய்விட்டன.




பனிவாழ் உயிரினங்கள் அழிந்து போகக்கூடிய சூழ்நிலையில் உள்ளன.அதிலும் குறிப்பாக வடதுருவத்தில் வசிக்கும் பனிக்கரடிகளும்,தென்துருவத்தில் வசிக்கும் பென்குயின்களும் முற்றிலுமாக அழிந்துபோகக்கூடிய நிலையில் உள்ளன.








இமாலயம்,கிரீன்லாந்து,அலாஸ்கா மற்றும் தென்துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.மேலும் கனடா,அலாஸ்கா,சைபீரியா போன்ற இடங்களில் உள்ள நிரந்தர பனிப்ப்ரதேசங்கள்அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில்உருகிவருகின்றன.





பறவைகள் அழிந்து போவதும்,பருவ காலத்திற்கு முன்போ அல்லது பின்போ பூக்கள் பூப்பதும்,கொசு போன்ற சிறு பூச்சிகள்அதிகமாக பெருகி வருவதற்கும் புவியின் வெப்பம் தான்காரணம்.



இதே போல் இங்கிலாந்து கடல்ப்பகுதியில் வாழும் உயிரினங்கள்,குளிர்பிரதேச பகுதியில் அதிக வெப்பம் காரணமாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக சீனா தான் பசுமைவாயுக்களை அதிக மாக வெளியிடுகின்றன .





இந்த சூழ்நிலையில் மேலும் நான்கு டிகிரி வெப்பம் அதிகரித்தால் என்னென்ன விழைவுகள் நேரும் என்பதை இப்போது பார்ப்போம்.

வறட்சி காரணமாக உணவு உற்பத்தி குறைந்து கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்ப்படும்.21 ஆம் நுற்றாண்டின்இறுதியில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது .



அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக கடல் மட்டம் 2 அடி வரை உயரும் .அதன் காரணமாக பங்களாதேஷ் ,வியட்நாம் ,மற்றும் கடலோரத்தில் உள்ள நகரங்களாகிய லண்டன் ,நியூயார்க் ,டோக்கியோ ,கொல்கத்தா ,கராச்சி போன்றவை மிகவும் பாதிக்கப் படும் .



ஆர்க்டிக் துருவத்தில் உள்ள பனி பாதிக்கும் மேல் உருகிவிடும் .நிலத்தில் வாழும் உயிரினங்களில் 20 முதல் 50 சதவீதம் வரை அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது .
உலகில் உள்ள பல நாடுகளை இப்போதைக்காட்டிலும் மிகுந்த வேகத்துடனும் பலத்த காற்றுடனும் சூறாவளிகள் தாக்கும் .2005 ஆம் ஆண்டுஅமெரிக்காவை தாக்கிய கத்ரினா புயல் இதற்கு மிக சிறந்த உதாரணம் .





கடந்த முப்பது ஆண்டுகளில் பத்து லட்சம் சதுரமைல் கடல் பனி மறைந்துவிட்டது.
இந்தியாவை பொறுத்தவரை இமையமலையில் உள்ள பனிப் பாறைகள் உருகி ஆறுகளில் சில காலத்திற்கு வெள்ளம் ஏற்படும்.பிறகு அவை வற்றி விடும் வாய்ப்பு உள்ளது .
மத்திய இந்தியாவை பொறுத்தவரை வருடம் தோறும் மழை அதிகரிப்பதால் பெருவெள்ளம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது .







மேலே குறிப்பிட்டுள்ளவை வெகு சில செய்திகளே.நிலைமை மிகவும் மோசமான பிறகு நடவடிக்கை எடுப்பதை விட வருமுன் காப்பதே மிகவும் சிறந்த செயல்.அளவுக்கதிகமான கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுப்பது,வறட்சியை சமாளிக்கக்கூடிய தாவரங்களை உருவாக்குவது,நீர் ஆதாரங்களை முறையாக பராமரிப்பது,ஆகியவை உடனடி அவசியம்.இந்த செயல்பாடுகள் பெரிதும் விரிவடைந்து அனைவரும் புவி வெப்பத்தை தடுக்க ஒன்று பட்டு செயல்படுவோம்.நமது சந்ததியினரை காத்திடுவோம்.வாழ்க வளமுடன்... நன்றி .

6 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

மிக நல்ல அவசியமான பதிவு

சுசி சொன்னது…

நல்ல பதிவு..

ரோஸ்விக் சொன்னது…

அக்கா, நிறைய விஷயங்களை சொல்லி இருக்குறீர்கள். எனது பதிவையும் வந்து படித்தமைக்கு மிக்க நன்றி.

malarvizhi சொன்னது…

மிக்க நன்றி ,அண்ணா

malarvizhi சொன்னது…

நன்றி சுசி

malarvizhi சொன்னது…

வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி
ரோஸ்விக்..

Pit