சில நாட்களுக்கு முன் தொலைகாட்சியில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிய பொழுது ஒரு தொடர் என்னை இந்த கருத்து தெரிவிக்க தூண்டியது . அந்த காட்சியில் தொடரின் முக்கிய கதாபாத்திரத்திற்கு புது எதிரி உருவாகியுள்ளான் . அவனை நாயகியின் பழைய எதிரி சந்திக்கிறான் . அவன் தான் எப்படி அவள் குடும்பத்தால் பாதிப்படைந்தான் என்பதை மிகவும் கோபத்துடன் தெரிவிக்கிறான் . அவனிடம் புதிய எதிரி " உன் கண்ணில் நான் பழிவாங்கும் வெறியை பார்க்கிறேன் . நீ சொல்வது உண்மைதான் . உன்னை நான் நம்புகிறேன் ", என்று கூறி அவனுடன் கூட்டு சேர்கிறான் . கடவுளே !!!! . இன்னும் எத்தனை தொடர்கள் தான் இப்படி பழி வாங்கி கொண்டே போவார்கள் . தொடர்களை பார்ப்பதை நான் அடியோடு நிறுத்தியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் . எத்தனை குழந்தைகள் இந்த தொடர்களை பார்கின்றனர் . அவர்கள் மனதில் இந்த விஷ வித்துக்கள் விழ நாம் ஏன் வழிகாட்ட வேண்டும் . நல்ல கருத்துக்கள் நாட்டில் எவ்வளவோ உள்ளது . அதை எல்லாம் தொடர்களில் கூறலாமே . அதை விட்டு விட்டு பழிவாங்குவதும் , கொலைசெய்ய தூண்டுவதும் , குடும்பத்தை பிரிப்பதும் , சதி திட்டம் தீட்டுவதும் ... அப்பப்பா ... போதும் ... தொடரை தயாரிபவர்கள் இனியாவது இதை நிறுத்தினால் நல்லது . ஏற்கனவே நாட்டில் வன்முறை அதிகரித்து விட்டது . வரும் தலைமுறையையாவது நாம் இதிலிருந்து காப்பாற்றலாமே .
பெற்றோர்களே ! தயவு செய்து குழந்தைகளுக்கு நல்ல கருத்துள்ள விஷயங்களை மட்டும் பார்க்க அனுமதியுங்கள் .