வெள்ளி, 29 ஜனவரி, 2010

இன்றைய தலைமுறையின் அவசர முடிவு ......

இன்றைய   காலகட்டத்தில்   சிறுவர்,  சிறுமிகளும்   , மாணவச்  செல்வங்களும்   தற்கொலை   செய்து கொள்வது   அதிகரித்து  உள்ளது.  மாடியிலிருந்து  குதிப்பதும் , மண்ணெண்ணெய்   ஊற்றி   தீ  வைத்துக்கொள்வது   அதிகமாக  உள்ளது. இதெல்லாம்  பார்க்கும்  போது  எங்கே  செல்கிறது  நம்  வருங்கால சந்ததியினரின்  பாதை  என்ற எண்ணம்  எனக்குத் தோன்றியது. ஏன்   இந்த  அவசர முடிவு ?   எது  அவர்களை  இந்த பாதைக்கு  தூண்டியது?

இளைய   தலைமுறையினரின்   இந்த   அவசர  முடிவு  மிகவும்   வருந்தத்தக்க ,  கவனிக்கப்பட  வேண்டிய   விஷயமாகிவிட்டது.   எதையும்   தாங்கக்  கூடிய  மனப்பக்குவமும் ,  தைரியமும்    இல்லாததே   இவர்களின் இந்த அவசர   முடிவுக்கு  காரணம்  என்பது   மட்டும்  புரிகிறது.

போன   தலைமுறையிடம்   இருந்த  பக்குவம், தைரியம்   போன்றவை   இப்போது   இல்லை  என்று   தான்  சொல்ல வேண்டும்.  உடனுக்குடன்   உணர்ச்சி    வசப்படுவதும் , எதற்கு   எடுத்தாலும்   கோபப்  படுவது  என்று   இவர்களின்  இந்த போக்கு  ஒரு  வித  அச்சத்தை   உண்டு  பண்ணுகிறது.

இன்றைய   நடைமுறை   வாழ்க்கையில்   பார்க்கும்  போது , பெரும்பாலான   குடும்பங்களில்   பெற்றோரும்  ,  குழந்தைகளும்   தனித்து   உள்ளார்கள்.  கூட்டுக்  குடும்பமாக   இருப்பதில்லை.  அதோடு   பெற்றோர்   இருவரும்  வேலைக்கு   செல்லும்  பட்சத்தில்   அந்தக்   குழந்தை   தனிமையில்   இருக்கும்   சந்தர்ப்பம்   அதிகம்  உள்ளது.  எனவே   அக்குழந்தை   தொலைக்காட்சியின்    துணையை   நாடுவதால் ,  அதன்  மூலம்  அக்குழந்தையின்   மனதில்  விதவிதமான  எண்ணங்கள்   உருவாகிறது.   அது  அந்த  குழந்தையின்  மனதில் ஒரு  சில   நல்ல  விஷயங்களை   பதித்தாலும்   பெரும்பாலான  நேரங்களில்  விஷ  விதைகளைத்   தூவுகிறது.

அது   மட்டும்   இல்லாமல்    இப்போது  அநேக   இல்லங்களில்  பெற்றோர்  இருவரும்  வேலைக்கு  செல்கிறார்கள்.  எனவே   பொருளாதாரப்   பற்றாக்குறை  என்பது   இப்போது  அனேக  வீடுகளில் அதிகம்  இருப்பதில்லை.  பெரும்பாலும்  ஒரு  குடும்பத்தில்  ஒன்று  அல்லது  இரண்டு   குழந்தைகள்   தான்  உள்ளன.   அப்படி  இருக்கும்   பட்சத்தில்  அந்த குழந்தை  தனக்கு   தேவை  என்று  நினைக்கும்  ஒரு பொருள் , அதற்கு   கேட்பதற்கு   முன்பே   கிடைத்து விடுகிறது. முந்தைய   நாட்களில்    அனேக  வீடுகளில்   குறைந்தது  மூன்று  அல்லது  நான்கு  குழந்தைகள்  இருக்கும்.  வருமானமும்   கம்மியாக   இருந்ததால்   அக்குழந்தைகள்  கேட்கும்   அனைத்தும்   கிடைப்பதில்லை .  எனவே   அதற்கு  இல்லை, கிடையாது  என்ற  வார்த்தைகள்   பழகிப்  போன ஒன்றாக   இருந்தது.
ஆனால்   தற்போது   எல்லாமே   உடனுக்குடன்  கிடைப்பதால்  அக்குழந்தைகள்   சற்றே  வளர்ந்த பின்  இல்லை   என்ற  வார்த்தையை   விரும்புவதில்லை .   அப்படி  இருப்பதால்  எந்த  ஒரு  சிறு  ஏமாற்றத்தையும்   அதற்கு  தாங்கும் சக்தி  இல்லாமல்   போய்  விடுகிறது.  இதுவே   அவர்களின்   வாழ்க்கையை   திசை  திருப்பி   தற்கொலை   என்ற   அவசர   முடிவுக்கு   அவர்களை  தள்ளுகிறது.

எனவே   பெற்றோர்களே !    தயவு   செய்து   குழந்தைகளுக்கு    எதையுமே   கேட்டவுடன்   வாங்கி  கொடுப்பதை   நிறுத்துங்கள்.    அவர்களுக்கு   சற்றே  கசப்பையும்   காட்டுங்கள். வாழ்க்கை   என்பது  இன்பம், துன்பம்   இரண்டும்   நிறைந்தது  என்பது  நம்   கண்மணிகளுக்கு   தெரிய  வேண்டும்.  அதை  சரியான   விதத்தில்  புரிய  வைக்க  வேண்டிய  மிகப்  பெரிய கடமை  பெற்றோர்களாகிய   நம்   கையில்  தான்   உள்ளது.  இன்றே   செயல்படுத்தலாமா !!!!!!  

திங்கள், 25 ஜனவரி, 2010

வண்ணமிகு பூக்கள்

                             பூ  பூக்கும்   ஓசை   அதை  கேட்கத்  தான்   ஆசை !!!!!!!!
எந்தப்பூவிலும்     வாசம்    உண்டு
 

பூவே   செம்பூவே   உன்  வாசம்   வரும் ......செவ்வாய், 19 ஜனவரி, 2010

கடவுள் வழிபாடுநம்மில்   ஒவ்வொருவருக்கும்   ஏதாவது
ஒரு   பிரச்னை  இருந்து   கொண்டு 
தான்   இருக்கிறது .வாழும்  காலம்
முழுவதும்   தினமும்   ஏதாவது
ஒரு   பிரச்னையை  சந்தித்துக்
கொண்டு   தான்   இருக்கிறோம் .
கவலைகள்   இல்லாத  மனிதன்
என்று   யாராவது   இருக்கிறார்களா 
என்றால்   கிடையாது  என்பது  தான்
சரியான  விடை . ஆனால்
எல்லாவற்றிற்கும்   ஏதாவது   காரணம்
கற்பித்து   நல்ல   காலம்  பிறக்கும்
என்று   காத்திருப்பதும்  உண்டு .சில
நேரங்களில்  ஆன்மிக  வழியில் 
சில  பரிகாரங்கள்   செய்வதும்  உண்டு .
நமக்கும்   மேல்   ஏதோ   ஒரு
மகத்தான   சக்தி   உண்டு   என்பது
மட்டும்   நமக்கு   தெரிகிறது .
அதற்கு   கடவுள்   என்று   பெயர்
சூட்டியுள்ளோம் .இதுதான்   கடவுள்
என்று   குறிப்பிட்டு  சொல்ல  கடவுளுக்கு
எந்த  வடிவமும்  கிடையாது .
அனைத்து உருவங்களும்  மனிதனால் 
உருவாக்கப்பட்டவை  தான் . எப்படி
காற்றை   நம்மால்   பார்க்க
முடியாதோ   அதே  போல் 
கடவுளையும்  நம்மால்  பார்க்க
முடியாது . அதை  உணர  தான்  முடியும் .

இன்று  கோயில்களில்  காணப்படும்
அதிகப்படியான   கூட்டம்   நமக்கு
எதை   உணர்த்துகிறது   என்றால் 
மக்கள்   மனத்தில்   ஏற்ப்பட்டுள்ள
பயத்தை   காட்டுகிறது . நாட்டில்
தவறுகள்  பெருக  பெருக ,
அதை  மறைக்க  மனிதன்  கடவுளை
நாடுகிறான் . பிரார்த்தனை  ,
வேண்டுதல்கள்  மூலம்  அதை
நிறைவேற்றிக்  கொள்கிறான் .
கோயிலுக்கு  செல்லும்   அனைவரும்
ஏதாவது  ஒரு  கோரிக்கையுடன்
தான்   செல்கிறோம் . ஆனால்
நம்மில்   எத்தனை  பேர் 
கடவுளிடம்  நன்றி  என்று
சொல்வதற்காக  செல்கிறோம் ?
நல்ல  குடும்பம்  , குழந்தைகள் ,
வசதி  வாய்ப்புகள்   அனைத்தும்
இருந்தாலும்  நன்றி  கூறுவதில்லை .நம்மை   விட  வறியவர்களையும் ,
வசதி  இல்லாதவர்களையும்
தினமும்  நாம்   வாழ்க்கையில்  கடந்து 
போகிறோம் . ஆனால்   நாம்
அவர்களை  ஒரு  போதும்
கண்டுகொள்வதில்லை .

நம்மைச்  சுற்றி   இருக்கும்   ஏழை
மக்களுக்கும் , வயதானவர்களுக்கும் ,
ஆதரவற்றவர்களுக்கும்   நம்மால்
முடிந்த  சிறுசிறு   உதவிகளை
செய்யலாம் . பசிக்கு   சோறுகொடுப்பது
 என்பது   எல்லாவற்றையும்   விட
மிகவும்  சிறந்த  ஒரு  செயல் .
"தானத்தில்   சிறந்தது   அன்ன   தானம் "

நமக்கு   தேவையற்றது   என்று
நாம்   நினைக்கும்  சில   பொருட்கள்
வறியவர்களுக்கு  மிகவும்   அத்தியாவசிய
பொருளாக   இருக்கும் . அவற்றை
அவர்களுக்கு  கொடுத்து  உதவலாமே !
அதுவே   நம்மை   சுற்றி  இருப்பவர்களிடம்
நாம்  காட்டும்  ஆத்மார்த்தமான
அன்பு  ஆகும் .கடவுளை
வணங்குவதில்  தவறில்லை..
ஆனால்   அதோடு   சேர்த்து
வறியவர்கள்  , நோய்  தாக்கியவர்கள் ,
ஆதரவு  அற்றவர்கள்  மற்றும்  முதியவர்கள்
இவர்களுக்கு   உதவுவதும் , அவர்களை
அரவணைப்பதும்   தான்
உண்மையிலேயே   கடவுள்  வழிபாடு .

வெள்ளி, 8 ஜனவரி, 2010

சிதம்பரம் நடராஜர் ஆலயம்'கோயில்'    என்று   பொதுவாக    வழங்கினாலே
  சைவத்தில்    சிதம்பரம்   நடராசப் பெருமானின்  
  கோயிலைத்தான்   குறிக்கும்  . 
  ஊர்ப்பெயர்    தில்லை;   கோயிலின்  
பெயர்   சிதம்பரம்,   இன்று  ஊர்ப்பெயர்  
வழக்கில்  மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப்  
பெயராக   வழங்கி  வருகிறது.

தில்லைமரங்கள்    அடர்ந்த    காடாக   
இருந்தமையால்   தில்லைவனம்   என்று   
பெயர்   பெற்றது.   இம்மரங்கள் 
தற்போது   சிதம்பரத்தில்   இல்லை; 
ஆனால்   இதற்கு   அண்மையிலுள்ள   
 பிச்சாவரத்தில்   உப்பங்கழியின்
கரைகளில்   காணப்படுகின்றன.


 

 

சிதம்பரத்தில்  உள்ள   நடராஜர்  ஆலயம்   
எந்த   ஆண்டு   கட்டப்பட்டது   என்பதற்கு   
சரியான   ஆதாரம்   எதுவும்    இல்லை.

பஞ்சபூதத்   தலங்களில்   ஆகாயத்தலம்     
என்று   பெயர்   பெற்றிருக்கும்   தலம்   
தான்   சிதம்பரம்.    இந்த  கோவில்   
40 ஏக்கர்  நிலப்பரப்பில்    பிரம்மாண்டமாக
அமைந்துள்ளது.   கிழக்கு   ,மேற்கு   
கோபுரங்களில்  108    நடன   
பாவங்களையும்   அறிவிக்கும்   சிறபங்கள் 
அழகிய    முறையில்    அமைக்கப்பட்டுள்ளன. 

அப்பர்,    சம்பந்தர்,   சுந்தரர்   மற்றும்   
மாணிக்கவாசகர்   ஆகிய   நால்வரும்   
ஒவ்வொரு   வாயில்  வழியாக  

தில்லை   சிதம்பரம்   கோவிலுக்குள்   
எழுந்தருளினர்   என்று   வரலாறு   
கூறுகிறது.   மேற்குக்   கோபுர   வாயில் 
வழியாக   திருநாவுக்கரசரும்,   
தெற்குக் கோபுர   வாயில் 
வழியாக   திருஞானசம்பந்தரும்,   
வடக்கு   கோபுர   வாயில்    வழியாக   
சுந்தரரும்,   கிழக்குக்   கோபுர   வாயில் 
வழியாக மாணிக்கவாசகரும்    வந்து    
தில்லைச்   சிற்றம்பலத்திலுள்ள   
சிவபெருமானை   வழிபட்டுள்ளனர்.
நடராஜப்   பெருமானுக்கு   உள்ள   
திருச்சபைகள்   ஐந்தில்  சிதம்பரம்   
தலம்    கனகசபையாகும்.    மற்றவை 
1)   திருவாலங்காடு - இரத்தினசபை,   
2) மதுரை - வெள்ளிசபை,   
3) திருநெல்வேலி - தாமிரசபை,  
4) திருக்குற்றாலம் - சித்திரசபை.

சைவ,    வைணவ    சமய   ஒற்றுமைக்கு    
சிதம்பரம்   கோவில்    ஒரு   சிறந்த   
எடுத்துக்காட்டாக   திகழ்கிறது.  
108    வைணவ    திவ்யதேசங்களில்    
ஒன்றான  திருசித்திரக்கூடம்   
என்று    அழைக்கப்படும்   கோவிந்தராஜப்    
பெருமாள்    கோவில்    தில்லை   
சிதம்பரம்    கோவிலின்    உள்ளே    
அமைந்திருக்கிறது.  நடராஜப்   
பெருமானின்    சந்நிதிக்கு   நேர்   
எதிரே  நின்றுகொண்டு    நடராஜரை    
தரிசனம்    செய்தபிறகு  இடதுபுறம்    
திரும்பி    நின்றால்    கோவிந்தராஜப்    
பெருமாள்   சந்நிதியைக்   காணலாம்.   
இரண்டு   சந்நிதிகளும்   அருகருகே   
அமைந்திருப்பது    தில்லை கோவிலின்   
சிறப்பாகும்.
 ஆண்டுக்கு   இரண்டு  முறை   
நடக்கும்   பத்து  நாள்    உற்சவம்  
மிகவும்   பிரசித்திப்பெற்றது .   
ஆனி   மாதத்தில்   நடைபெறும்  
ஆனி   திருமஞ்சனமும்  ,    
மார்கழியில்   நடைபெறும்  
ஆருத்ரா   தரிசனமும்    இங்கு   
மிகவும்  பெயர்பெற்ற    திருவிழாக்கள்.பொதுவாக    எல்லாக்   கோவில்களிலும்   
மூலவர்   கருவறையில்   இருப்பார் .  
உற்சவர்    வெளியே  வருவார்.   ஆனால்  
இங்கு மட்டும்   மூலவர்   ஒன்பதாம்   
நாள்  அன்று   நடக்கும்  தேர்த்  
திருவிழாவில்   நான்கு   வீதியிலும்   
வலம்    வருவார்.

 இது   இங்கு  தனிச்  சிறப்பு   
வாய்ந்ததாகும்.

வியாழன், 7 ஜனவரி, 2010

உடல் ஆரோக்கியத்திற்கு சில தகவல்கள்

மாத்திரைகளை குளிர்ந்த நீரில் சாப்பிடக்கூடாது .
வெதுவெதுப்பான தண்ணீரில் சாப்பிடலாம் .

மாலை 5 மணிக்கு மேல் மிதமான உணவு
சாப்பிட வேண்டும் .

தொலைபேசியில் பேசும்போது இடது காதில் வைத்துப்
பேசவும் .

இரவை விட பகல் நேரத்தில் தண்ணீர் அதிகம்
குடிக்கவும் .


இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை
உறங்குவதற்கு மிகவும் சிறந்த நேரம் .


மாத்திரை உட்கொண்டவுடன் உடனே படுக்கக்
கூடாது .


இரவில் தயிர் சாப்பிடக் கூடாது .


காலையில் முதல் முறையாக உதிக்கும் சூரியனை
வெறும் கண்ணால் சிலநொடிகள் உற்று பார்த்தால் கண்பார்வை
நன்றாக இருக்கும் .


இரவு படுக்கும் முன் மிதமான சூட்டில் பால் அருந்தலாம் .
நல்ல உறக்கம் வரும் .


தூங்க போகும் முன் மெலிதான சத்தத்தில் நல்ல இசையை
கேட்கலாம் .செவ்வாய், 5 ஜனவரி, 2010

சிரிச்சிட்டு போங்க

வேட்டை ஆரம்பம் ஆயிடுச்சு டோய் .......விவேக் இரவு 12 மணிக்கு மு . க ஸ்டாலினை தொலைபேசியில்
அழைக்கிறார் .

விவேக் : ஹலோ மு. க. ஸ்டாலின் சார் தானே ?

ஸ்டாலின் : ஆமா ..,

விவேக் : நீங்க வெறும் மு . க வா , இல்ல நாக்க , மூக்க வா ?

ஸ்டாலின்: !!!!!
மனைவி -- முதலில் இந்த டிரைவரை வேலையை விட்டு துரத்துங்கள் . என்னை இரண்டு முறை கொல்லப் பார்த்தான் .

கணவன் -- டார்லிங் , பாவம், இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போமே .

மனைவி -- !!!!!!எந்த திரவத்தை கொதிக்க வைத்தால் கட்டி ஆகும் ?

"இட்லி மாவு " !!!!

பொது அறிவு மிகவும் அவசியம் தலைவா !!!!!

சனி, 2 ஜனவரி, 2010

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ..........

காலையில் வெறும் வயிற்றில் குறைந்தது 4 டம்ளர்
அளவு ஆறிய வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

அதிகாலையில் குறைந்தபட்சம் 2 கி .மீ தூரம் நடக்க
வேண்டும். உடலுக்கு நல்ல பிராண வாயு கிடைக்கும்.
முதல் கால் மணி நேரம் மெதுவாகவும், அடுத்த
அரைமணி நேரம் வேகமாகவும் , கடைசி கால் மணி
நேரம் மெதுவாகவும் நடக்க வேண்டும்.முடியாதவர்கள்
வீட்டிலேயே சின்னச்சின்ன உடற்ப்பயிற்சிகள் செய்யலாம்.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு
மிகவும் நல்லது. நெல்லிக்காயை காய வைத்து பொடி
பண்ணி அதனுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிடலாம்.நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் , கீரை வகைகள் , பயறு
வகைகள் உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
அசைவம் விரும்பினால் கடல் மீன்களில் சிறிய வகை
மீன்கள் , தோல் நீக்கிய கோழி இறைச்சி நிறைய சாப்பிடலாம்.
இவற்றில் புரதச் சத்து அதிக அளவில் கிடைக்கும்.

வயது 35 தாண்டியவர்கள் வருடம் ஒருமுறை மருத்துவரிடம்
சென்று உடல்நலத்தை பரிசோதித்து கொள்வது அவசியம்.

வெள்ளி, 1 ஜனவரி, 2010

Pit