வியாழன், 15 ஏப்ரல், 2010

குழந்தைகளும் ,அதன் விளையாட்டுக்களும் ....

                                                                                                                                                                                                         "ஓடி விளையாடு பாப்பா .நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா "
"மாலை முழுதும்விளையாட்டு .இதைவழக்கப்படுத்திக் கொள்ளுபாப்பா "



இவை குழந்தைகளுக்காக பாரதியார் பாடிய பாடல்கள் .
ஆனால் இன்று எத்தனை குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுகின்றன ?
குழந்தை பருவத்திலிருந்தே சில பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளிப்பது அதன் உடலுக்கு வலு சேர்க்கும் .
சில வருடங்களுக்கு முன் நடத்தப் பட்ட ஆய்வில் குழந்தைகள் வழக்கமாக இருக்க வேண்டியதை காட்டிலும் கொழுகொழுவென இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது .
அவர்களில் 24 சதவீதம் பேருக்கு வழக்கத்தை விட கூடுதல் ரத்தஅழுத்தம் இருந்தது
தெரிய வந்தது .41 சதவீதம் பேருக்கு கொலஸ்ட்ரால் கூடுதலாக இருந்தது .
மொத்தத்தில் 98 சதவீதம் குழந்தைகளுக்கு இருதய நோய் இருப்பது தெரியவந்தது .
முன்னேறிய நாடுகளில் நிலவும் இந்த நிலைமை நமது நாட்டிலும் உள்ளது .
இதற்கு காரணம் நமது இன்றைய வாழ்க்கை முறை .நாம் இன்று தாவறான உணவை குழந்தைகளுக்கு கொடுக்கிறோம் .அதனால் ஏற்படும் விளைவை நாம் குழந்தைகளின் இளம் பருவத்திலேயே காண்கிறோம் .

கிராமங்களில் வாழும் குழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லை .அவர்களுக்கு ஓடி விளையாட போதிய இடவசதி உள்ளது .
ஆனால் நகரங்களில் மிகவும் நெருக்கமான குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் பாவம் செய்தவை .போதிய இடவசதி அவர்களுக்கு கிடையாது மேலும் அவர்களை வெளியில் விளையாட பெற்றோர் அனுமதிப்பதில்லை .இதனால் அவர்களுக்கு போதிய உடற்பயிற்சி கிடைப்பதில்லை .இதுவே அவர்களின் ஆரோக்கிய குறைவுக்கு முக்கிய காரணமாகும் .



பெற்றோர் சிறிது நேரத்தையும் ,கொஞ்சம் சக்தியையும் செலவிட்டால் ,அதுவும் தீவிர அக்கறையுடன் கொஞ்சம் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்த முடியும் .



எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு சிறு சிறு பயிற்சிகளை கொடுக்கலாம் .சற்றே வளர்ந்த குழந்தைகள் எதன்மீதாவது ஏற விரும்பினாலோ ,குதிக்க விரும்பினாலோ அதை பெற்றோர் தங்கள் கண்பார்வையில் அனுமதிக்கலாம் .


பெற்றோர்களே ஒருசில உடற்பயிற்சி விளையாட்டுக்களை குழந்தைகளுடன் விளையாடலாம் .விளையாடும் போது சிறு சிறு விபத்துக்கள் ஏற்படலாம் .அதை சொல்லி அவர்களை பயமுறுத்தி கட்டுபடுத்தக் கூடாது .அவர்கள் விழுந்தாலும் பிறகு எழுந்து தன் போக்கில் விளையாடுவார்கள் .
அதை தடுக்கக் கூடாது .






சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு சமசீர் உணவு அளிக்க வேண்டும் .புரத சத்து நிறைந்தஉணவு வகைகள் ,கீரை வகைகள் ,காய்கறிகள் ,மீன் ,முட்டை ,பால் ,இவற்றை சரிவிகிதத்தில் கொடுக்கலாம் .எண்ணெய் பதார்த்தங்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும் .
.வளரும் குழந்தைகளுக்கு இந்த வகை உணவுகளை உண்ணும் பழக்கத்தை பெற்றோர் அவசியம் ஏற்படுத்தவேண்டும் .அதுவே அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த வழிகாட்டுதலாகும் .

4 கருத்துகள்:

தமிழினி சொன்னது…

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பின் பற்ற பட வேண்டிய தகவல்கள்!!
நன்றி தகவல்களுக்கு.

r.v.saravanan kudandhai சொன்னது…

நன்றி தகவல்களுக்கு நன்றி

மனோ சாமிநாதன் சொன்னது…

நல்ல, அவசியமான பதிவு.
இன்றைய குழந்தைகள் ஆரோக்கியமான விளையாட்டுக்களின்றி, தொலைக்காட்சியிலும் அளவுக்கதிகமான பாடச்சுமைகளிலும்தான் அமிழ்ந்திருக்கின்றனர். என் நெடுநாளைய மனக்குமுறல் இது.

Pit