வெள்ளி, 2 ஏப்ரல், 2010

புவி வெப்பமாதல்

சில வருடங்களுக்கு முன் சுனாமி என்ற வார்த்தை உலகையே உலுக்கியது.அதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவு ஒரு சில இடங்களில் மட்டும் தான். ஆனால் இன்று உலகம் முழுவதையும் மிகவும் பயங்கரமாக அச்சுறுத்தி வரும் ஒரு நிகழ்வு என்ன என்று பார்த்தால்"புவி வெப்பமாதல்" ஆகும்.இன்று மனித சமுதாயம் மட்டும் அன்றி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழியும் அபாயம் இருப்பது நமக்கு தெளிவாகதெரிகிறது.
வேகமாக உருகி வரும் பனிமலைகள் ,உயர்ந்து வரும் கடல் மட்டம், மாசு நிறைந்த காற்று மண்டலம் இவை எல்லாம் வெப்பத்தின் விளைவுகள்.இவற்றை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

வளர்ச்சி என்ற பெயரில் நாம் இயற்கை வளத்தை நிலைகுலையச் செய்து ,இன்று மாறுபட்ட மாசு நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கி வருகிறோம்.


பருவநிலை தாறுமாறாக மாறி மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது.பூமி சூடேறுவதால் இந்த திடீர் பருவநிலை மாற்றங்கள் என்று அறிவியலாளர்கள்கூறுகிறார்கள்.

20 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் புவி வெப்பம் 0 . 5 டிகிரியிலிருந்து 1 .0 டிகிரி C வரை உயர்ந்திருக்கிறது.

கடந்த நூறு வருடங்களில் உலகம் முழுவதும் 1 டிகிரி F வெப்பம் உயர்ந்திருப்பதாக தேசிய விஞ்ஞான கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் உலக தட்ப வெப்ப நிலைகளில் பெரிய மாற்றங்களும் , சூறாவளிகளும் ,சுனாமிகளும் ஏற்படுகிறது.பல அரிய உயிரினங்கள் குறைந்தும் ,அழிந்து கொண்டும்வருகின்றன.
இவற்றிற்கான காரணம்......... தொடரும்..............

10 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக அவசியமான இடுகை. தொடருங்கள் மலர்விழி.

malarvizhi சொன்னது…

நன்றி ராமலக்ஷ்மி .

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

காலத்திற்கு ஏற்ற கட்டுரை,
வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் சொன்னது…

சூடு உலகத்துக்கு மட்டுமல்ல உடம்புக்கும் கேடுதான்... வாழ்த்துக்கள்... (ஆமா பரீட்சைலாம் முடிஞ்சுருச்சா? டென்ஷன் போயிடுச்சா?)

சித்தூர்.எஸ்.முருகேசன் சொன்னது…

நல்ல பொறுப்புள்ள பதிவு . பதிவில் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் சொன்னது…

உங்க ரீ எண்ட்ரி - ஒரு அசத்தலான பதிவோட ஆரம்பமாகி இருக்கு. தேவையான நல்ல இடுகை.

malarvizhi சொன்னது…

"காலத்திற்கு ஏற்ற கட்டுரை",.....

ஆமாம் ,சைவ கொத்துபரோட்டா , இன்றைக்கு அனைவரும் செயல்படுத்த வேண்டிய மிகவும் அவசரமான செயல் இது தான்.

malarvizhi சொன்னது…

வருகைக்கு நன்றி , அண்ணா .பரிட்சை முடியவில்லை , டென்சனும் போகவில்லை .10 ஆம் வகுப்பு தேர்வுகள் முடியவேண்டும்.

malarvizhi சொன்னது…

வருகைக்கு நன்றி முருகேசன்.

malarvizhi சொன்னது…

கருத்துக்கும் ,வருகைக்கும் மிக்க நன்றி , தமிழ் .

Pit