செவ்வாய், 19 ஜனவரி, 2010

கடவுள் வழிபாடுநம்மில்   ஒவ்வொருவருக்கும்   ஏதாவது
ஒரு   பிரச்னை  இருந்து   கொண்டு 
தான்   இருக்கிறது .வாழும்  காலம்
முழுவதும்   தினமும்   ஏதாவது
ஒரு   பிரச்னையை  சந்தித்துக்
கொண்டு   தான்   இருக்கிறோம் .
கவலைகள்   இல்லாத  மனிதன்
என்று   யாராவது   இருக்கிறார்களா 
என்றால்   கிடையாது  என்பது  தான்
சரியான  விடை . ஆனால்
எல்லாவற்றிற்கும்   ஏதாவது   காரணம்
கற்பித்து   நல்ல   காலம்  பிறக்கும்
என்று   காத்திருப்பதும்  உண்டு .சில
நேரங்களில்  ஆன்மிக  வழியில் 
சில  பரிகாரங்கள்   செய்வதும்  உண்டு .
நமக்கும்   மேல்   ஏதோ   ஒரு
மகத்தான   சக்தி   உண்டு   என்பது
மட்டும்   நமக்கு   தெரிகிறது .
அதற்கு   கடவுள்   என்று   பெயர்
சூட்டியுள்ளோம் .இதுதான்   கடவுள்
என்று   குறிப்பிட்டு  சொல்ல  கடவுளுக்கு
எந்த  வடிவமும்  கிடையாது .
அனைத்து உருவங்களும்  மனிதனால் 
உருவாக்கப்பட்டவை  தான் . எப்படி
காற்றை   நம்மால்   பார்க்க
முடியாதோ   அதே  போல் 
கடவுளையும்  நம்மால்  பார்க்க
முடியாது . அதை  உணர  தான்  முடியும் .

இன்று  கோயில்களில்  காணப்படும்
அதிகப்படியான   கூட்டம்   நமக்கு
எதை   உணர்த்துகிறது   என்றால் 
மக்கள்   மனத்தில்   ஏற்ப்பட்டுள்ள
பயத்தை   காட்டுகிறது . நாட்டில்
தவறுகள்  பெருக  பெருக ,
அதை  மறைக்க  மனிதன்  கடவுளை
நாடுகிறான் . பிரார்த்தனை  ,
வேண்டுதல்கள்  மூலம்  அதை
நிறைவேற்றிக்  கொள்கிறான் .
கோயிலுக்கு  செல்லும்   அனைவரும்
ஏதாவது  ஒரு  கோரிக்கையுடன்
தான்   செல்கிறோம் . ஆனால்
நம்மில்   எத்தனை  பேர் 
கடவுளிடம்  நன்றி  என்று
சொல்வதற்காக  செல்கிறோம் ?
நல்ல  குடும்பம்  , குழந்தைகள் ,
வசதி  வாய்ப்புகள்   அனைத்தும்
இருந்தாலும்  நன்றி  கூறுவதில்லை .நம்மை   விட  வறியவர்களையும் ,
வசதி  இல்லாதவர்களையும்
தினமும்  நாம்   வாழ்க்கையில்  கடந்து 
போகிறோம் . ஆனால்   நாம்
அவர்களை  ஒரு  போதும்
கண்டுகொள்வதில்லை .

நம்மைச்  சுற்றி   இருக்கும்   ஏழை
மக்களுக்கும் , வயதானவர்களுக்கும் ,
ஆதரவற்றவர்களுக்கும்   நம்மால்
முடிந்த  சிறுசிறு   உதவிகளை
செய்யலாம் . பசிக்கு   சோறுகொடுப்பது
 என்பது   எல்லாவற்றையும்   விட
மிகவும்  சிறந்த  ஒரு  செயல் .
"தானத்தில்   சிறந்தது   அன்ன   தானம் "

நமக்கு   தேவையற்றது   என்று
நாம்   நினைக்கும்  சில   பொருட்கள்
வறியவர்களுக்கு  மிகவும்   அத்தியாவசிய
பொருளாக   இருக்கும் . அவற்றை
அவர்களுக்கு  கொடுத்து  உதவலாமே !
அதுவே   நம்மை   சுற்றி  இருப்பவர்களிடம்
நாம்  காட்டும்  ஆத்மார்த்தமான
அன்பு  ஆகும் .கடவுளை
வணங்குவதில்  தவறில்லை..
ஆனால்   அதோடு   சேர்த்து
வறியவர்கள்  , நோய்  தாக்கியவர்கள் ,
ஆதரவு  அற்றவர்கள்  மற்றும்  முதியவர்கள்
இவர்களுக்கு   உதவுவதும் , அவர்களை
அரவணைப்பதும்   தான்
உண்மையிலேயே   கடவுள்  வழிபாடு .

7 கருத்துகள்:

தஞ்சை.ஸ்ரீ.வாசன் சொன்னது…

இறைவனை வழிபடுபவன் நான். ஆனால் ஆலயங்களுக்கு சென்று இறைவனிடம் வேண்டுதலும் அல்லது நன்றிகடனை செலுத்துவதும் என்னை(என்மனதை) உருத்தும் செயல்.

நீங்கள் கூறுவதுபோல் எத்தனையோ வழிகளில் நாம் இருக்கும் இடத்திலே இறைவனை காண இயலும்.

அன்பே சிவம்...நம்பிக்கையே ஹரி.

இவன்,
தஞ்சை.வாசன்

tamiluthayam சொன்னது…

மலர்விழி நல்லது சொல்லி இருக்கிறீர்கள். நல்லது செய்ய தூண்டி இருக்கிறீர்கள்

அண்ணாமலையான் சொன்னது…

"நமக்கு தேவையற்றது என்று
நாம் நினைக்கும் சில பொருட்கள்
வறியவர்களுக்கு மிகவும் அத்தியாவசிய
பொருளாக இருக்கும் . அவற்றை
அவர்களுக்கு கொடுத்து உதவலாமே !
அதுவே நம்மை சுற்றி இருப்பவர்களிடம்
நாம் காட்டும் ஆத்மார்த்தமான
அன்பு ஆகும் .கடவுளை
வணங்குவதில் தவறில்லை..
ஆனால் அதோடு சேர்த்து
வறியவர்கள் , நோய் தாக்கியவர்கள் ,
ஆதரவு அற்றவர்கள் மற்றும் முதியவர்கள்
இவர்களுக்கு உதவுவதும் , அவர்களை
அரவணைப்பதும் தான்
உண்மையிலேயே கடவுள் வழிபாடு ."
பாராட்ட வேண்டிய கருத்துக்கள்...

malarvizhi சொன்னது…

வருகை தந்தமைக்கும் , தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

வெ.இராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்லதொரு இடுகை. கடவுள் வழிபாடு, கோவில்கள் என இருந்தது ஏழை எளியோர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டதுதான்.

கோவிலுக்கு சேரும் பணம் கொண்டு பல நற்காரியங்கள் நிகழ்த்தலாம்.

Magia da Inês சொன்னது…

Olá, amiga!
Voltei... saudades!
Boa semana!
Beijinhos.
Itabira - Brasil

vaigarainila சொன்னது…

அற்புதமான, தேவையான கருத்துகளை சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

Pit