வியாழன், 10 டிசம்பர், 2009

என் வீட்டு தோட்டத்தில் .....


நான்   வளர்க்கும்   ஈமு   பறவையை   பற்றி   சில   வரிகள்    உங்களுடன்   பகிர    ஆவலாக   உள்ளேன் .
இது   ஒரு   ஆஸ்திரேலியப்   பறவை . நம்   நாட்டில்   இப்பொழுது   தான்   ஓர்  அளவிற்கு   காணமுடிகிறது . உலகிலேயே   இரண்டாவது   மிகப்   பெரிய   பறவை   ஈமு   தான் .  உயிர்   வாழும்    பறவைகளில்    நெருப்புகோழி   தான்   மிகப்   பெரிய    பறவை .



ஈமுவால்   பறக்க   முடியாது .  ஆனால்    மிக    வேகமாக    ஓட   முடியும் .  இது   ஓட   ஆரம்பித்தால்    மணிக்கு    50  கி .மி   வேகத்தில்    ஓட    முடியும் .  ஓடி    வரும்   வேகத்தில்   அது   10  அடி    உயரத்தை    கூட    சர்வசாதாரனமாக   தாண்டிவிடும் .  இதன்   உயரம்   6  அடிக்கும்   மேல் .  அதன்   எடை   50  கிலோ   இருக்கும் .



ஈமு   பலவகை   தாவரங்களை    உண்ணும் .  குறிப்பாக    முருங்கை   கீரை   அதன்   இஷ்ட   உணவு .  எந்த   ஒரு   சிறு   பூச்சிகளையும்   விடாமல்   தின்றுவிடும் .  எல்லா  வித    தானியங்களையும்   சேர்த்து   பொடியாக்கி    அதற்கு   தீவனமாக    கொடுக்கிறோம் .  காலையில்    உண்ண  ஆரம்பித்தால்    மாலை    ஆறு    மணி    வரை   விடாமல்   சாப்பிட்டுகொண்டே   இருக்கும் .  சில    நேரங்களில்    தொடர்ந்து    15
நாட்கள்   கூட   சாப்பிடாமல்  இருக்கும் .

ஈமு   முட்டை   மிகவும்   பெரியதாக   இருக்கும் .  பொதுவாக   ஈமு   நவம்பர் , திசம்பர் , ஜனவரி   மாதங்களில்   மூன்று   நாட்களுக்கு   ஒரு   முட்டை   இடும் .


ஈமுவின்   ஒவ்வொரு   பகுதியும்    நமக்கு   பயன்படுகிறது .   ஆஸ்திரேலியாவில்   அதனுடைய   கறியை    சமைத்து   உண்கிறார்கள் .  அதன்    இறகுகள்    கைவினை   பொருட்கள்    செய்ய   பயன்படுகிறது .   அதன்   தோல்   பதப்படுத்தப்பட்டு    பைகள்   செய்யப்படுகிறது .  ஈமு    உடலில்   உள்ள    கொழுப்பு    எடுக்கப்பட்டு   ஈமு    எண்ணெய்   தயாரிக்கிறார்கள் .   அதன்    நகங்கள்    ஆபரணங்கள்    ஆக்கப்படுகின்றன .


மழை    என்றால்    ஈமுவிற்கு   மிகவும்    பிடிக்கும் .   வானம்    இருட்டி    கொண்டு   இருந்தால்    துள்ளி   விளையாடி    நடனமிடும்  .  ஈமுவின்    கழிவு
செடிகளுக்கு   உரமாக   பயன்படுகிறது . 

19 கருத்துகள்:

Chitra சொன்னது…

அந்த பறவையின் முட்டை நிறம் பார்த்து ரசித்து இருக்கிறேன்.
ஈமு பறவைகளை சென்னையிலும் வளர்க்கும் செய்தி எனக்கு புதிது. பதிவில் பகிர்ந்து கொண்ட விஷயங்களுக்கு நன்றி.

malarvizhi சொன்னது…

நன்றி சித்ரா . ஈமு சென்னையில் இருக்கிறதா என்பது எனக்கும் தெரியாது . ஆனால் சேலம் , கரூர் , எங்கள் சிதம்பரம் இங்கு எல்லாம் இருப்பது தெரியும். நீங்கள் படங்களில் பார்த்தது என் வீட்டில் உள்ளவை.

அண்ணாமலையான் சொன்னது…

எங்க ஊர்ல ஈமுவா? முட்டை ஸைஸ்ஸ பாத்தா நான் ஸ்கூல்ல வாங்குனத விட பெரிசா இருக்கே? சாப்புடலாமா?

புலவன் புலிகேசி சொன்னது…

நீங்க சிதம்பரமா....நமக்கு மயிலாடுதுறை தேன். ஈமு வளக்குறீங்களா...ஈமு எங்க ஊர் பக்கமும் உண்டு..

பூங்குன்றன்.வே சொன்னது…

ஒரு சிறு சந்தேகம்.ஈமு முட்டைக்கு வெளிநாட்டில் நல்ல விலை போவதாக பத்திரிக்கையில் படித்த நினைவு.உண்மையா?

செ.சரவணக்குமார் சொன்னது…

தகவல்களுடன் கூடிய நல்ல இடுகை. பகிர்வுக்கு நன்றி

அன்புடன் மலிக்கா சொன்னது…

மலர் மிக அழகான ஈமு. முட்டையும் சூப்பர், அருமையான தொகுப்பு..

http://niroodai.blogspot.com/

malarvizhi சொன்னது…

தங்கள் கருத்துக்களை வெளியிட்ட அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

SUFFIX சொன்னது…

ஈமு பறவை பற்றி கேள்வி பட்டிருக்கின்றேன், மலேசியா பயணத்தின் போதும் ஒரு பெரிய ஃபார்மிற்க்கு என்னுடைய நண்பர் அழைத்துச் சென்றார். நம்மதூரிலேயே, அதுவும் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கிறீர்களா? மிக்க மகிழ்ச்சி.

butterfly Surya சொன்னது…

இதுவரை அறியாத செய்தி. ஈமு வளர்த்து பணம் கொழிக்கலாம் அப்படின்னு சில விளம்பரங்கள் படித்த கவனம்.

பகிர்விற்கு நன்றி. படங்களும் அருமை.

malar சொன்னது…

புதிய தகவல் .

முட்டை சாப்பிட்டு இருகிறேர்களா

அண்ணாமலையான் சொன்னது…

நம்ம ப்ளாக் பக்கம் வர்றது.. ப்ளீஸ்...

சரவணன். ச சொன்னது…

வணக்கம் மலர்விழி...
சிதம்பரத்தில் பதிவர் கிருத்திகா மட்டும் தான் நினைச்சேன் பரவாயில்லை நீங்களும்மா வாழ்த்துக்கள்.

சாதர்னமா நான் ஒரு சின்ன தொட்டியில மீன் வளக்கற பாடு பெரும் பாடு இதுல இமூ கோழியா அனேகமா குடும்பத்தில் அனைவருக்கும் ஓர் அர்வம் இருக்கும்ன்னு நினைக்கிரேன்.

உங்கள் தோழி கிருத்திகா சொன்னது…

hi hi hi hihi....neengalum cdm thana....keka santhoshama iruku...ippo nan perumaya sollikkalam...citizen padathula vara Ajith mathiri.."Nan thani aal illa "...naama 4 peru irukkomunga..neenga enna panringa...enga irukinga...therinjukkalaama??

லதானந்த் சொன்னது…

ஈமு பற்றிய விவரங்கள் புதுமையாய் இருந்தன. அதன் முட்டை சைஸை உணர்த்த கம்பேரிசனுக்குப் பக்கத்தில் ஒரு கோழி முட்டையை வைக்கும் ஐடியா அருமை

malarvizhi சொன்னது…

வலைக்கு வருகை தந்த அனைவர்க்கும் என் நன்றிகள்.

டவுசர் பாண்டி சொன்னது…

எங்க ஏரியாவுல !! இந்த முட்டைய காம்ச்சா அவ்ளோ தான் பா !!

சும்மா ஆம்லேட்டு போட்டுக் குடு இன்னு நம்பள அவாஜ் குட்துடுவாங்கோ !!

குடுக்கலேன்னு வெச்சிக்கோ !! நாம கைமா தான் அக்காங் !!


(உங்கள் பதிவுகளில் , சிறு சிறு கட்டங்கள் வருகிறது அதை எடுத்து விட்டு பதிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் )

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
புதிய செய்திகள்.
வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

hey malar this is also interesting. but the information you gave, the presentation everything is nice.

Pit