சனி, 24 ஏப்ரல், 2010

வண்ணமிகு மலர்கள்
எனது அலைபேசியில் நான் எடுத்த சில அழகான மலர்களின் அணிவகுப்பு.!!!!!!!!!!!
வியாழன், 15 ஏப்ரல், 2010

குழந்தைகளும் ,அதன் விளையாட்டுக்களும் ....

                                                                                                                                                                                                         "ஓடி விளையாடு பாப்பா .நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா "
"மாலை முழுதும்விளையாட்டு .இதைவழக்கப்படுத்திக் கொள்ளுபாப்பா "இவை குழந்தைகளுக்காக பாரதியார் பாடிய பாடல்கள் .
ஆனால் இன்று எத்தனை குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுகின்றன ?
குழந்தை பருவத்திலிருந்தே சில பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளிப்பது அதன் உடலுக்கு வலு சேர்க்கும் .
சில வருடங்களுக்கு முன் நடத்தப் பட்ட ஆய்வில் குழந்தைகள் வழக்கமாக இருக்க வேண்டியதை காட்டிலும் கொழுகொழுவென இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது .
அவர்களில் 24 சதவீதம் பேருக்கு வழக்கத்தை விட கூடுதல் ரத்தஅழுத்தம் இருந்தது
தெரிய வந்தது .41 சதவீதம் பேருக்கு கொலஸ்ட்ரால் கூடுதலாக இருந்தது .
மொத்தத்தில் 98 சதவீதம் குழந்தைகளுக்கு இருதய நோய் இருப்பது தெரியவந்தது .
முன்னேறிய நாடுகளில் நிலவும் இந்த நிலைமை நமது நாட்டிலும் உள்ளது .
இதற்கு காரணம் நமது இன்றைய வாழ்க்கை முறை .நாம் இன்று தாவறான உணவை குழந்தைகளுக்கு கொடுக்கிறோம் .அதனால் ஏற்படும் விளைவை நாம் குழந்தைகளின் இளம் பருவத்திலேயே காண்கிறோம் .

கிராமங்களில் வாழும் குழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லை .அவர்களுக்கு ஓடி விளையாட போதிய இடவசதி உள்ளது .
ஆனால் நகரங்களில் மிகவும் நெருக்கமான குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் பாவம் செய்தவை .போதிய இடவசதி அவர்களுக்கு கிடையாது மேலும் அவர்களை வெளியில் விளையாட பெற்றோர் அனுமதிப்பதில்லை .இதனால் அவர்களுக்கு போதிய உடற்பயிற்சி கிடைப்பதில்லை .இதுவே அவர்களின் ஆரோக்கிய குறைவுக்கு முக்கிய காரணமாகும் .பெற்றோர் சிறிது நேரத்தையும் ,கொஞ்சம் சக்தியையும் செலவிட்டால் ,அதுவும் தீவிர அக்கறையுடன் கொஞ்சம் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்த முடியும் .எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு சிறு சிறு பயிற்சிகளை கொடுக்கலாம் .சற்றே வளர்ந்த குழந்தைகள் எதன்மீதாவது ஏற விரும்பினாலோ ,குதிக்க விரும்பினாலோ அதை பெற்றோர் தங்கள் கண்பார்வையில் அனுமதிக்கலாம் .


பெற்றோர்களே ஒருசில உடற்பயிற்சி விளையாட்டுக்களை குழந்தைகளுடன் விளையாடலாம் .விளையாடும் போது சிறு சிறு விபத்துக்கள் ஏற்படலாம் .அதை சொல்லி அவர்களை பயமுறுத்தி கட்டுபடுத்தக் கூடாது .அவர்கள் விழுந்தாலும் பிறகு எழுந்து தன் போக்கில் விளையாடுவார்கள் .
அதை தடுக்கக் கூடாது .


சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு சமசீர் உணவு அளிக்க வேண்டும் .புரத சத்து நிறைந்தஉணவு வகைகள் ,கீரை வகைகள் ,காய்கறிகள் ,மீன் ,முட்டை ,பால் ,இவற்றை சரிவிகிதத்தில் கொடுக்கலாம் .எண்ணெய் பதார்த்தங்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும் .
.வளரும் குழந்தைகளுக்கு இந்த வகை உணவுகளை உண்ணும் பழக்கத்தை பெற்றோர் அவசியம் ஏற்படுத்தவேண்டும் .அதுவே அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த வழிகாட்டுதலாகும் .

சனி, 10 ஏப்ரல், 2010

பார்த்தேன் ,ரசித்தேன் ,பிடித்தேன் !!!!

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா ஆரம்பித்துள்ளது . அங்கிருந்து சில படங்களை எடுத்து வெளியிட்டுள்ளேன் .நான் கண்டு ரசித்தவற்றை நீங்களும் கண்டு மகிழுங்கள்.


வியாழன், 8 ஏப்ரல், 2010

புவி வெப்பம் -3

கடந்த ஐம்பது வருடங்களில் புவி வெப்பத்தால் உலகில் ஏற்பட்டமாற்றங்களை பார்த்தால்,அதன் கோரத்தன்மையும் ,ஆபத்தும் நமக்கு நன்றாக புரியும்.புவி வெப்பத்தின் அடையாளமாக நமது வடதுருவத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றங்கள் நம்மை சிந்திக்கவைக்கும்.

வடதுருவத்தில் பெரும்பாலும் மலையில் வசிக்கும் எழுபது வகையான தவளைகள் போக இடமில்லாமல் அழிந்தே போய்விட்டன.
பனிவாழ் உயிரினங்கள் அழிந்து போகக்கூடிய சூழ்நிலையில் உள்ளன.அதிலும் குறிப்பாக வடதுருவத்தில் வசிக்கும் பனிக்கரடிகளும்,தென்துருவத்தில் வசிக்கும் பென்குயின்களும் முற்றிலுமாக அழிந்துபோகக்கூடிய நிலையில் உள்ளன.
இமாலயம்,கிரீன்லாந்து,அலாஸ்கா மற்றும் தென்துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.மேலும் கனடா,அலாஸ்கா,சைபீரியா போன்ற இடங்களில் உள்ள நிரந்தர பனிப்ப்ரதேசங்கள்அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில்உருகிவருகின்றன.

பறவைகள் அழிந்து போவதும்,பருவ காலத்திற்கு முன்போ அல்லது பின்போ பூக்கள் பூப்பதும்,கொசு போன்ற சிறு பூச்சிகள்அதிகமாக பெருகி வருவதற்கும் புவியின் வெப்பம் தான்காரணம்.இதே போல் இங்கிலாந்து கடல்ப்பகுதியில் வாழும் உயிரினங்கள்,குளிர்பிரதேச பகுதியில் அதிக வெப்பம் காரணமாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக சீனா தான் பசுமைவாயுக்களை அதிக மாக வெளியிடுகின்றன .

இந்த சூழ்நிலையில் மேலும் நான்கு டிகிரி வெப்பம் அதிகரித்தால் என்னென்ன விழைவுகள் நேரும் என்பதை இப்போது பார்ப்போம்.

வறட்சி காரணமாக உணவு உற்பத்தி குறைந்து கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்ப்படும்.21 ஆம் நுற்றாண்டின்இறுதியில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது .அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக கடல் மட்டம் 2 அடி வரை உயரும் .அதன் காரணமாக பங்களாதேஷ் ,வியட்நாம் ,மற்றும் கடலோரத்தில் உள்ள நகரங்களாகிய லண்டன் ,நியூயார்க் ,டோக்கியோ ,கொல்கத்தா ,கராச்சி போன்றவை மிகவும் பாதிக்கப் படும் .ஆர்க்டிக் துருவத்தில் உள்ள பனி பாதிக்கும் மேல் உருகிவிடும் .நிலத்தில் வாழும் உயிரினங்களில் 20 முதல் 50 சதவீதம் வரை அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது .
உலகில் உள்ள பல நாடுகளை இப்போதைக்காட்டிலும் மிகுந்த வேகத்துடனும் பலத்த காற்றுடனும் சூறாவளிகள் தாக்கும் .2005 ஆம் ஆண்டுஅமெரிக்காவை தாக்கிய கத்ரினா புயல் இதற்கு மிக சிறந்த உதாரணம் .

கடந்த முப்பது ஆண்டுகளில் பத்து லட்சம் சதுரமைல் கடல் பனி மறைந்துவிட்டது.
இந்தியாவை பொறுத்தவரை இமையமலையில் உள்ள பனிப் பாறைகள் உருகி ஆறுகளில் சில காலத்திற்கு வெள்ளம் ஏற்படும்.பிறகு அவை வற்றி விடும் வாய்ப்பு உள்ளது .
மத்திய இந்தியாவை பொறுத்தவரை வருடம் தோறும் மழை அதிகரிப்பதால் பெருவெள்ளம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது .மேலே குறிப்பிட்டுள்ளவை வெகு சில செய்திகளே.நிலைமை மிகவும் மோசமான பிறகு நடவடிக்கை எடுப்பதை விட வருமுன் காப்பதே மிகவும் சிறந்த செயல்.அளவுக்கதிகமான கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுப்பது,வறட்சியை சமாளிக்கக்கூடிய தாவரங்களை உருவாக்குவது,நீர் ஆதாரங்களை முறையாக பராமரிப்பது,ஆகியவை உடனடி அவசியம்.இந்த செயல்பாடுகள் பெரிதும் விரிவடைந்து அனைவரும் புவி வெப்பத்தை தடுக்க ஒன்று பட்டு செயல்படுவோம்.நமது சந்ததியினரை காத்திடுவோம்.வாழ்க வளமுடன்... நன்றி .

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

புவி வெப்பம்...2என்ன நண்பர்களே!
என்னுடைய முந்தைய பதிவு படித்திருப்பீர்கள் என நினைக்கிறன் .இனி அடுத்த விஷயத்திற்கு போகலாமா ?
பூமி ஏன் வெப்பமாகிறது ?மனிதன் தன்னுடைய சுய லாபத்திற்காகவும் ,தனக்கு வேண்டிய சௌகரியதிர்க்காகவும் ,ஆடம்பரதிற்க்காகவும் செய்யும் பலவிதமான காரியங்கள் இன்று மனிதனுக்கு மட்டும் அல்லாமல் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பேரழிவை ஏற்படுத்திஉள்ளது .இயற்கை நமக்கு சில பாதுகாப்புகளை தந்திருக்கிறது .வளிமண்டலத்தில் இயற்கையாகவே ஆக்சிஜன்,நைட்ரஜன்,ஓசோன் மற்றும் பசுமை வாயுக்களான கார்பன் -டை-ஆக்சைடு,மீதேன்,நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை உள்ளன.இவற்றில் பசுமை வாயுக்கள் சூரியனின் வெப்பத்தை உள்வாங்கி தேவையான அளவு வெப்பத்தை பாதுகாத்து பூமியின் மேல் ஒரு போர்வையைப் போல் இருந்து பாதுகாத்து வருகிறது.பசுமை வாயுக்கள் மட்டும் இல்லை என்றால் பூமியும் சந்திரனை போல் ஆகிவிடும்.சந்திரனில் பகலில்  220 டிகிரி F ,இரவில் -234 டிகிரி F வெப்ப அளவுஇருக்கும்.


பசுமை வாயுக்கள் குறைவாக இருந்த போது ,அதனால் ஏற்பட்ட சுழற்சி முறைகள் நம்மால் ஏற்று கொள்ள முடிந்தது.ஆனால் பசுமை வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகி விட்டதால் ,அதன் அதிக படியான தாக்கத்தை நம்மால் தாங்க முடியவில்லை. உதாரணமாக பார்த்தால் சித்திரையில் மிகவும் அதிகமான வெப்பம்,ஐப்பசியில் அடை மழை பெய்வதற்கு பதில் பனிமூட்டம் அதிகமாக இருத்தல் ,இப்படி பலவித நிகழ்வுகளை நாம் கண்கூடாககாண்கிறோம்,
மேலும் உலகில் உள்ள எல்லா பாகங்களிலும் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.எங்கும் தொழில்மயம் ,அதன் மூலம் நாட்டை வளப்படுத்துதல் ,மின்சார உற்பத்திக்காக எரிக்கப்படும் நிலக்கரி ,பெருகிவரும் மோட்டார் வாகனங்கள் ,இரயில்கள் ,விமானங்கள் இவற்றிற்கு பயன்படுத்தும் பெட்ரோல் ,டீசல் வெளியிடும் புகை,சமையல் எரிவாயு ,ரசாயன உரங்கள் ,குளிர்சாதனப்பெட்டி வெளியிடும் வாயுக்கள் ,இவை அனைத்தும் வளிமண்டலத்தில் நுழைந்து,அதன்மூலம் பூமியை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் புவி வெப்பம் மிக அதிகமாக உயர தொடங்கிவிட்டது.


இன்னும் நூறு வருடங்களில் பூமியின் வெப்பம் 1 .1C முதல் 6 .4 C வரை உயரும் ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.இதற்கும் மேலும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வரவிருக்கும் தலைமுறையினர் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்க நேரிடும்.
உலகம் முழுவதும் புவி வெப்பத்தால் இதுவரை ஏற்பட்ட மாற்றங்கள் .........

தொடரும்........

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

புவி வெப்பமாதல்

சில வருடங்களுக்கு முன் சுனாமி என்ற வார்த்தை உலகையே உலுக்கியது.அதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவு ஒரு சில இடங்களில் மட்டும் தான். ஆனால் இன்று உலகம் முழுவதையும் மிகவும் பயங்கரமாக அச்சுறுத்தி வரும் ஒரு நிகழ்வு என்ன என்று பார்த்தால்"புவி வெப்பமாதல்" ஆகும்.இன்று மனித சமுதாயம் மட்டும் அன்றி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழியும் அபாயம் இருப்பது நமக்கு தெளிவாகதெரிகிறது.
வேகமாக உருகி வரும் பனிமலைகள் ,உயர்ந்து வரும் கடல் மட்டம், மாசு நிறைந்த காற்று மண்டலம் இவை எல்லாம் வெப்பத்தின் விளைவுகள்.இவற்றை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

வளர்ச்சி என்ற பெயரில் நாம் இயற்கை வளத்தை நிலைகுலையச் செய்து ,இன்று மாறுபட்ட மாசு நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கி வருகிறோம்.


பருவநிலை தாறுமாறாக மாறி மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது.பூமி சூடேறுவதால் இந்த திடீர் பருவநிலை மாற்றங்கள் என்று அறிவியலாளர்கள்கூறுகிறார்கள்.

20 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் புவி வெப்பம் 0 . 5 டிகிரியிலிருந்து 1 .0 டிகிரி C வரை உயர்ந்திருக்கிறது.

கடந்த நூறு வருடங்களில் உலகம் முழுவதும் 1 டிகிரி F வெப்பம் உயர்ந்திருப்பதாக தேசிய விஞ்ஞான கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் உலக தட்ப வெப்ப நிலைகளில் பெரிய மாற்றங்களும் , சூறாவளிகளும் ,சுனாமிகளும் ஏற்படுகிறது.பல அரிய உயிரினங்கள் குறைந்தும் ,அழிந்து கொண்டும்வருகின்றன.
இவற்றிற்கான காரணம்......... தொடரும்..............

Pit