வியாழன், 31 டிசம்பர், 2009

உங்களுக்கு தெரியுமா !!!

 

குளிர்ந்த    நீரில்   தங்க   மீன்களை   தொட்டியில்   வைத் து
வீட்டில்வளர்த்தால்   மிகவும்   நல்லது . பத்து
நிமிடங்கள்   மீன்   தொட்டியை   பார்த்துக்கொண்டே
இருந்தால்   கோபமும்   ரத்தக்கொதிப்பும் போயே
போச்சு . அந்த அளவுமீன்   தொட்டிகள்    உடல்
நலனுக்கு   உதவுகின்றன . மீன்களை
பார்த்துக்கொண்டிருக்கும்   போது   மனம்   அமைதியாகிறது .மீன்   உணவு   மனச்சோர்வை    எளிதில்    குறைக்கும் .
மீனில்   உள்ள    துத்தநாக   உப்பு     இந்த    நன்மையை  
நமக்கு    கொடுக்கிறது .    மீனில்    உள்ள    ஒமேகா -3 
என்ற   அமிலம்   மூளையை    மிகவும்    சுறுசுறுப்பாக   
வைத்திருக்க   உதவுகிறது .

திங்கள், 28 டிசம்பர், 2009

படித்ததில் பிடித்தது

கண்கள் செய்யும்
சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும்
ஆயுள் தண்டனை
"காதல் "


விக்கல் எடுக்கின்றது ,
ஆனால் தண்ணீர் குடிக்க மனமில்லை.
நினைப்பது நீ என்றால்
நீடிக்கட்டும் சில நிமிடங்கள் .......


அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு
பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை ".
காரணம் அவள் பேசியது English
பயபுள்ள மூச்சி விடாம பேசுறா ........


என் மரணம் கூட
உனக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வேன் ....
ஏன் என்றால்
என் நெற்றியில் உள்ள ஒரு ரூபாய்
காசையும் நீ ஆட்டைய போட கூடாது என்பதற்காக ........

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

வாங்க , வந்து சிரிச்சுட்டு போங்க -- பகுதி -2

கோர்ட்ல மெட்ராஸ் பாஷை பேசினால் எப்படிஇருக்கும்;

1 . yes my lord -- ஆமா நைனா
2 . objection my lord -- அமிக்கி வாசி அண்ணாதே
3 . court adjourned -- உன்னோருதபா வச்சிக்கலாம்
4 . objection over-ruled -- மூடிகினு குந்து
5 . order , order , order -- ஐய கம்முனு கெடமே
( இதெல்லாம் ரொம்ப ஓவரு )

2. டாக்டர்    --     ஏன்ப்பா    ஷாக்   அடிக்குமுனு   தெரிஞ்சும்    கரண்ட்   வயர்ல
                                  விரல  வச்ச ?    அறிவு  இருக்கா ?

        சர்தார்ஜி   --    "கட்டை "   விரல்  தானே   .  ஷாக்   அடிக்காதுன்னு   நினைச்சேன் .

          (  ரொம்ப  படுத்துறாங்க  ,  முடியல )

3 .     நைட்ல்லாம்   தூக்கம்   வரல  .
         ஒன்னும்    பிரச்சன  இல்ல   , போய்  கண்ணாடிய   பாருங்க   . தூக்கம்  என்ன
          மயக்கமே   வரும் .
         தப்பா  நினைச்சிக்காதிங்க , இதான்  அழகுல  மயங்கி  விழறது.
        
        
 
      

வெள்ளி, 25 டிசம்பர், 2009

வாங்க , வந்து சிரிச்சிட்டு போங்க .......... பகுதி - 1.

நான்   ரசித்த   sms  சிரிப்புகள் ..

1. கேள்வி  : சூப்பர்ஸ்டார்   ரஜினிக்கு   பிடிச்சது   இட்லியா , தோசையா?

   பதில் : தோசை .

           ஏன்  தெரியுமா ?  "கண்ணா  , இட்லி    கும்பலா   வேகும்  .... தோசை

           சிங்கிளா   தான்   வேகும் ."


   (மொக்க   தாங்க   முடியலப்பா ..)


   2. வடிவேல்   : வணக்கம்பா ..  உன்    டிரஸ்   சூப்பரா    இருக்கே ? 

              தீபாவளிக்கு   எடுத்ததா ?

   பார்த்திபன்  :  இல்ல ...

   வடிவேல் :   அப்பறம் ?

   பார்த்திபன்  :  எனக்கு   எடுத்தது .

   (  போதும்பா   நிறுத்திப்போம் . பூராத்தையும்   நிறுத்திப்போம் ....... )


3. கல்லூரி  கலாட்டா

   வகுப்பறை   --  அற்புத   தீவு

   சேர்மன்      --  வசூல்   ராஜா

   பிரின்சிபால்     --  இம்சை  அரசன்   23 ஆம்   புலிகேசி

   ஹச்  . ஓ  . டி           --  நான்  கடவுள்

   வாத்தியார்    --  படிக்காதவன்

   மாணவர்கள்   --  போக்கிரி

   கல்லூரி  வளாகம்  -- சிறைச்சாலை

   பதிவேடு     --  மௌனம்  பேசியதே

   கல்லூரி   பேருந்து  --  சுந்தரா   ட்ராவல்ஸ்

   உணவகம்      --  ஈ

   காவலாளி    --  சாமி

   பரீட்சை     --  அறிந்தும்   அறியாமலும்


   (இப்படியே    போயிட்டிருந்தா   என்னா  அர்த்தம் ...  இதுக்கு   ஒரு  

   முடிவே   கிடையாதா ......)


   ரிசல்ட்        --  சம்திங்  சம்திங் 

   அரியர்        --  எனக்கு   20    உனக்கு   18

   கேம்பஸ்  இண்டர்வியு  --  திருவிளையாடல்   ஆரம்பம் 

                         
                                     - தொடரும் ......


   (  தொடர்ர்றுமா   ....அப்ப  இன்னும்   முடியலியா  ,..அய்யய்யோ )   

 

வியாழன், 10 டிசம்பர், 2009

என் வீட்டு தோட்டத்தில் .....


நான்   வளர்க்கும்   ஈமு   பறவையை   பற்றி   சில   வரிகள்    உங்களுடன்   பகிர    ஆவலாக   உள்ளேன் .
இது   ஒரு   ஆஸ்திரேலியப்   பறவை . நம்   நாட்டில்   இப்பொழுது   தான்   ஓர்  அளவிற்கு   காணமுடிகிறது . உலகிலேயே   இரண்டாவது   மிகப்   பெரிய   பறவை   ஈமு   தான் .  உயிர்   வாழும்    பறவைகளில்    நெருப்புகோழி   தான்   மிகப்   பெரிய    பறவை .ஈமுவால்   பறக்க   முடியாது .  ஆனால்    மிக    வேகமாக    ஓட   முடியும் .  இது   ஓட   ஆரம்பித்தால்    மணிக்கு    50  கி .மி   வேகத்தில்    ஓட    முடியும் .  ஓடி    வரும்   வேகத்தில்   அது   10  அடி    உயரத்தை    கூட    சர்வசாதாரனமாக   தாண்டிவிடும் .  இதன்   உயரம்   6  அடிக்கும்   மேல் .  அதன்   எடை   50  கிலோ   இருக்கும் .ஈமு   பலவகை   தாவரங்களை    உண்ணும் .  குறிப்பாக    முருங்கை   கீரை   அதன்   இஷ்ட   உணவு .  எந்த   ஒரு   சிறு   பூச்சிகளையும்   விடாமல்   தின்றுவிடும் .  எல்லா  வித    தானியங்களையும்   சேர்த்து   பொடியாக்கி    அதற்கு   தீவனமாக    கொடுக்கிறோம் .  காலையில்    உண்ண  ஆரம்பித்தால்    மாலை    ஆறு    மணி    வரை   விடாமல்   சாப்பிட்டுகொண்டே   இருக்கும் .  சில    நேரங்களில்    தொடர்ந்து    15
நாட்கள்   கூட   சாப்பிடாமல்  இருக்கும் .

ஈமு   முட்டை   மிகவும்   பெரியதாக   இருக்கும் .  பொதுவாக   ஈமு   நவம்பர் , திசம்பர் , ஜனவரி   மாதங்களில்   மூன்று   நாட்களுக்கு   ஒரு   முட்டை   இடும் .


ஈமுவின்   ஒவ்வொரு   பகுதியும்    நமக்கு   பயன்படுகிறது .   ஆஸ்திரேலியாவில்   அதனுடைய   கறியை    சமைத்து   உண்கிறார்கள் .  அதன்    இறகுகள்    கைவினை   பொருட்கள்    செய்ய   பயன்படுகிறது .   அதன்   தோல்   பதப்படுத்தப்பட்டு    பைகள்   செய்யப்படுகிறது .  ஈமு    உடலில்   உள்ள    கொழுப்பு    எடுக்கப்பட்டு   ஈமு    எண்ணெய்   தயாரிக்கிறார்கள் .   அதன்    நகங்கள்    ஆபரணங்கள்    ஆக்கப்படுகின்றன .


மழை    என்றால்    ஈமுவிற்கு   மிகவும்    பிடிக்கும் .   வானம்    இருட்டி    கொண்டு   இருந்தால்    துள்ளி   விளையாடி    நடனமிடும்  .  ஈமுவின்    கழிவு
செடிகளுக்கு   உரமாக   பயன்படுகிறது . 

திங்கள், 7 டிசம்பர், 2009

வானில் சில வர்ணஜாலங்கள்
என்  வீட்டு  மாடியிலிருந்து  நான்  எடுத்த  சில  புகைப்படங்கள்

                                  அந்த   அரபிக்கடலோரம்  ஓர்  அழகை  கண்டேனே !!!!!
                             எர்ணாகுளத்தில்   மாலை  நேரத்து   சூரியன்  மறையும்  காட்சி.


திங்கள், 30 நவம்பர், 2009

பெரிய கோவில் - மேலும் சில தகவல்கள்
நம் தோழி ரசனைக்காரியின் விருப்பத்திற்கு இணங்கி தஞ்சை

பெரிய கோவிலை பற்றி நான் படித்து அறிந்தவற்றில்

மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து

கொள்ளலாம் என நினைக்கிறேன் . அது என்னவோ

தெரியவில்லை , இக்கோவில் என்றால் எனக்கு அப்படி

ஒரு பரவசம் ஏற்படுகிறது . நான் படித்த நூல்களில்

மிகவும் அதிகமாக இடம் பெறுவது பெரிய கோவிலையும்,

ராஜராஜனை பற்றியும் தான் .தஞ்சை பெரிய கோவில் என்றும் , ராஜராஜீச்சரம்

என்றும் அழைக்கப்படும் இக்கோவில் வடமொழியில்

பிரகதீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படுகிறது .தஞ்சையில் சிறிய கோட்டை வளாகத்துள் சிவகங்கை

குளம் , பூங்கா இவற்றிற்கு அருகே கோவில் உள்ளது .

கோட்டைக்கு வெளியே அகழி உள்ளது . கோட்டை ,

அகழி இரண்டும் 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால்

கட்டப்பட்டது .


இக்கோவிலில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது . 5

அடுக்குடன் உள்ள முதல வாயில் " கேரளாந்தகன்

திருவாயில் " எனப்படும் . கி . பி 988 இல் கேரளா

மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி

பெற்றதால் அப்போரின் நினைவாக ராஜராஜன் இப்பெயரை

வைத்தான் என கல்வெட்டு குறிப்புகள் தெரிவிகின்றன .


இரண்டாவது வாயில் 3 அடுக்குடன் உள்ள " ராஜராஜன்

திருவாயில் " ஆகும் .மதிலின் உள்புறம் நான்கு திசைகளிலும் திருச்சுற்று

மண்டபம் உள்ளது . இது ராஜராஜன் காலத்தில் இரண்டு

தளத்துடன் இருந்து பின்னாளில் அழிந்து ஒரே ஒரு

தளத்துடன் தற்போது காட்சி தருகிறது .

இக்கோவில் விமானத்தின் நிழல் தரையில் விழாது

என்பது தவறான செய்தி .


விமான உச்சியில் உள்ள பிரமரந்திரதளம் ஒரே

கருங்கல்லினால் ஆனது . அது 25 1/2 அடி சதுரம்

உடையது . எடை 80 டன் என்பர் . இதனை தஞ்சைக்கு

நான்கு மைலுக்கு அப்பால் உள்ள சாரப்பள்ளம்

என்ற கிராமத்திலிருந்து சாரம் கட்டி இச்சிகரத்தில்

ஏற்றினார்கள் என்றும் அதனால் தான் அவ்வூருக்கு

சாரப்பள்ளம் என்று பெயர் வந்ததாக கூறுவர் .பொற் கோவிலாக திகழ்ந்த பெரியகோவில் :

216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம்

முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப்

பட்டு திகழ்ந்தது . ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின்

மேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல்

மாலிக்கபூரின் படையெடுப்பின் போது

சூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை

காண முடியவில்லை .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில்

திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில்

தான் என்பது வரலாற்று உண்மை .

வெள்ளி, 27 நவம்பர், 2009

சின்னத்திரை சீரியல்கள்

சில நாட்களுக்கு முன் தொலைகாட்சியில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிய பொழுது ஒரு தொடர் என்னை இந்த கருத்து தெரிவிக்க தூண்டியது . அந்த காட்சியில் தொடரின் முக்கிய கதாபாத்திரத்திற்கு புது எதிரி உருவாகியுள்ளான் . அவனை நாயகியின் பழைய எதிரி சந்திக்கிறான் . அவன் தான் எப்படி அவள் குடும்பத்தால் பாதிப்படைந்தான் என்பதை மிகவும் கோபத்துடன் தெரிவிக்கிறான் . அவனிடம் புதிய எதிரி " உன் கண்ணில் நான் பழிவாங்கும் வெறியை பார்க்கிறேன் . நீ சொல்வது உண்மைதான் . உன்னை நான் நம்புகிறேன் ", என்று கூறி அவனுடன் கூட்டு சேர்கிறான் . கடவுளே !!!! . இன்னும் எத்தனை தொடர்கள் தான் இப்படி பழி வாங்கி கொண்டே போவார்கள் . தொடர்களை பார்ப்பதை நான் அடியோடு நிறுத்தியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் . எத்தனை குழந்தைகள் இந்த தொடர்களை பார்கின்றனர் . அவர்கள் மனதில் இந்த விஷ வித்துக்கள் விழ நாம் ஏன் வழிகாட்ட வேண்டும் . நல்ல கருத்துக்கள் நாட்டில் எவ்வளவோ உள்ளது . அதை எல்லாம் தொடர்களில் கூறலாமே . அதை விட்டு விட்டு பழிவாங்குவதும் , கொலைசெய்ய தூண்டுவதும் , குடும்பத்தை பிரிப்பதும் , சதி திட்டம் தீட்டுவதும் ... அப்பப்பா ... போதும் ... தொடரை தயாரிபவர்கள் இனியாவது இதை நிறுத்தினால் நல்லது . ஏற்கனவே நாட்டில் வன்முறை அதிகரித்து விட்டது . வரும் தலைமுறையையாவது நாம் இதிலிருந்து காப்பாற்றலாமே .

பெற்றோர்களே ! தயவு செய்து குழந்தைகளுக்கு நல்ல கருத்துள்ள விஷயங்களை மட்டும் பார்க்க அனுமதியுங்கள் .

திங்கள், 23 நவம்பர், 2009

தஞ்சை பெரிய கோயில் - சில வரிகள்
தஞ்சை பெரிய கோவிலில் இப்பொழுது இருக்கும் நந்தி சோழ மன்னன் ராஜராஜன் கட்டியது இல்லை என்பது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் . அது நாயக்கர் காலத்தில் உருவாக்க பட்டது . ராஜராஜன் கட்டிய நந்தி இப்பொழுது இருக்கும் நந்திக்கு நேர் தெற்கு பக்கத்தில் திருச்சுற்று நடைமாளிகையில் இன்றும் உள்ளது . இது அளவில் சற்று சிறியதாக இருக்கும் .

இந்த கோவிலின் உட்புறம் உள்ள அம்மன் கோயில் , முருகன் சந்நிதி , கருவூரர் சந்நிதி , வராகிகோயில் , விநாயகர் கோயில் இவை அனைத்தும் ராஜராஜ சோழன் கட்டாதவை . பெரியகோயில் , சண்டிகேஸ்வரர் கோயில் , திருச்சுற்று நடைமாளிகை , இரண்டு கோபுரங்கள் மட்டுமே ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டவை .

பெரியகோயில் கி .பி 1004 இல் ஆரம்பித்து கி .பி 1010 இல் கட்டிமுடிக்கப்பட்டது . இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உள்ளது . 216 அடி உயரத்தில் மலைபோல அமைந்திருப்பதால் ராஜராஜனால் தட்சிணமேரு என்று பெயரிடப்பட்டது .

இந்த கோயிலை உருவாக்கிய தச்சன் வீரசோழன் குஞ்சர மல்லனான இராசராசப் பெருந்தச்சன் ஆவான் .


ராஜராஜனை பற்றி சில வரிகள் :

தாய் -- வானவன் மாதேவி

தந்தை -- சுந்தரசோழன்

பிறந்த நாள் -- ஐப்பசி , சதயம்

முடி புனைந்த நாள் -- 25 .6. 985

ஆண்ட காலம் -- கி . பி 985 - 1014

பட்டத்தரசி -- உலகமாதேவி

மக்கள் -- ராஜெந்த்ரசோழன்

ஆளவந்தான்

மாதேவடிகள்

குந்தவை

கங்கமாதேவி

சகோதரி -- குந்தவை பிராட்டியார்

சகோதரன் -- ஆதித்த கரிகாலன்

வியாழன், 19 நவம்பர், 2009

குமரி கண்டம்
குமரிக்கண்டம்
எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில்  சில தகவல்கள் உண்டு.
இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என சிலர் எழுதியுள்ளனர் . ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய குமரிக்கண்டம் சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால் அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து.  
தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை   விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூல்களின்  தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. நூல்களில் குறிப்பிட்டுள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிருபிக்கப்படவோ , மறுக்கப்படவோ இல்லை.

நாஸ்ட்ரடாமஸ்

நடந்தவற்றையும் , நடக்க போவது பற்றியும் தெரிந்து கொள்ள நமக்கு எப்பொழுதுமே அதிக ஆவல் உண்டு .


நாஸ்ட்ரடாமஸ் என்ற தீர்க்கதரிசி 1503 ஆம் வருடம் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார் . உலகம் இதுவரை கண்ட தீர்க்கதரிசிகளில் மிகப் பெரும் புகழைப் பெற்றவர் . அவர் எழுதிய தி செஞ்சுரிஸ் என்ற நூலில் பல நுற்றண்டுகளில் நடந்தவற்றையும் , நடக்கப்போவது பற்றியும் சொல்லப்பட்டுள்ள ஆருடங்கள் ஏராளமாய் உள்ளன . பல விஷயங்களை அவர் புதிர் போல் குறிப்பிட்டுளார் . அவரை பற்றி நான் படித்த சில நூல்கள் என்னை மிகவும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது உண்மை . பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவர் நியுயார்க்கின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்படும் என்று மறைமுக வரிகளில் குறிப்பிட்டுள்ளார் .


மேலும் நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை பகைவர்கள் சதி செய்து கொல்வார்கள் என்றும் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி கென்னடி சுட்டு கொல்லப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார் . இரண்டாம்
உலகப் போர் , விமானம் கண்டுபிடிக்கப்பட்டது , நீர்மூழ்கி கப்பல் போன்ற பல செய்திகளை அவர் கூறியுள்ளார் . மீனுக்குள் போர்கருவி வைத்து அதிலிருந்து மனிதன் போர் செய்வான் என்று நீர்மூழ்கி கப்பலை அழகாக
வர்ணித்துள்ளார்.

200 வருடங்களுக்கு பிறகு பிறந்த நெப்போலியனையும் , 400 வருடங்கள் கழித்து பிறந்த ஹிட்லரையும் அவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளது பிரமிப்பான விஷயம் . இனி வரப்போகும் ஆண்டுகளில்
நடக்கப் போவதை பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் கி .பி 3600 - 3790 கால கட்டத்தில் அழியும் என்றும் தெரிவிக்கிறார் .

அவருக்கு எங்கிருந்து இப்படி ஒரு ஞானம் வந்தது என்பதும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது . எது எப்படி இருந்தாலும் ஆறுட உலகில் நாஸ்ட்ரடாமஸ் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது மட்டும் உறுதி .

செவ்வாய், 17 நவம்பர், 2009

படித்ததில் பிடித்தது - 1

அம்மாவின் அருமை


அன்று சுயநலமாய் நான் , சங்கடத்தில் நீங்கள்

திமிராய் நான் , திணறிய நீங்கள்

கர்வமாய் நான் , காயத்தோடு நீங்கள்

சோம்பேறியாய் நான் , சோர்ந்த நீங்கள் ....

இன்று நான் காயத்தோடு சங்கடத்தில்

சோர்ந்து திணறும் போது சுருக்கென்று உறைக்கிறது !சமையலறையில் உதவிக்கு அழைக்கும் நேரம்

பலவகை சாக்குபோக்கு சொல்லி நழுவியதும்

ஐந்து பேருக்கு சமைக்க ஒருவர் மட்டும்

போதுமே என்று வார்த்தையால் மடக்கியதும்

இன்று நான் தனியாக சமையலறையில்

பாத்திரங்களோடு போராடும் அந்த

தருணத்தில் எட்டி பார்கிறது !


நான் சாப்பிட தினமும் தட்டில் சாதம்

பிசைந்து வைத்ததும் , உணவை கையில்

உருட்டி தந்ததும் , இன்று நான்

சிலபல காரணங்களுக்காக சாப்பிடாமலே

உறங்கும் பொழுது நினைவுகள்

கண்ணீராய் விழுகிறது .


இவை எல்லாம் நீங்கள்

மறந்து இருக்க கூடும்

நானும் மறந்து தான் இருந்தேன் ,

தாயாகும் வரை !!

பதினாறு வயதில் அறிந்தும்

அறியாமலும்

நான் கொண்டிருந்த கோபத்தையும் ,

பிடிவாதத்தையும்

ஆறு வயது ஆகும் முன்பே வெளிபடுத்தும்

என் மகள்

இன்னும் அழுத்தமாய் உணர்த்துகிறாள் உன் அருமையை .....


சில வருடங்களுக்கு முன் மங்கையர் மலரில் ஒரு சகோதரி எழுதிய இந்த கவிதை தான் எத்தனை உண்மை!!!!.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

புவி வெப்பமடைதலால் ஏற்படும் விழைவுகள்

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை , வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழிற்சாலைகள் , நகர வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படும் காடுகள் , இவற்றால் நாம் பசுமையை இழக்கிறோம் . இதன் காரணமாக புவியின் வெப்பம் கடந்த நூற்றாண்டில் 0.6 டிகிரி உயர்ந்துள்ளது . இந்த நூற்றாண்டில் இது இன்னும் வேகமாக அதிகரித்து வருகிறது .

வெள்ளம் , புயல் , வறட்சி

புவி வெப்பமடைவதால் பனி மலைகள் மிகவும் வேகமாக உருகி , அதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது . இதன் விளைவாக கடும் வெள்ளம் ஏற்படுகிறது . மற்றொரு பக்கம் கடும் வறட்சி ஏற்படுகிறது . மேலும் சில இடங்களில் சுனாமி , புயல் , சூறாவளி காற்று வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது . இமயமலையில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகிறது . விரைவில் பனி இருப்பு குறைந்து வறண்ட பாலைவனமாய் மாறிவிடும் சூழல் உருவாகி வருகிறது .

துருவ பகுதியில் பனி உருகுதல்

இவை எல்லாவற்றையும் விட மிகவும் அபாயகரமான செய்தி துருவ பகுதியில் உள்ள பனி பாறைகள் தான் . புவி வெப்பம் உயருவதால் பனிப்பாறைகள் உருகி நீராகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நுற்றாண்டின் இறுதிக்குள் கடல்மட்டம் 3 அல்லது 4 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதன் காரணமாக தமிழகத்தில் சென்னையை அடுத்து உள்ள எண்ணூர் மற்றும் அதன் சுற்று பகுதிகள் , வங்க தேசத்தின் டாக்கா , மாலதீவு , லண்டன் , இப்படி பல நாடுகளை இந்த நுற்றாண்டின் இறுதியில் கடல் கொள்ளும் என்று ஒரு ஐயப்பாடு உள்ளது .

மிகவும் நீளமான கடற்கரையை கொண்டுள்ள நம் தமிழகத்தில் தாழ்வான கடல் பகுதியில் ஏராளமான நகரங்கள் உள்ளன . பேரழிவு ஏற்பட்டால் அவற்றின் கதி ?


பின்னாளில் ஏற்பட போகும் பாதிப்புகள்

1. உணவு உற்பத்தி குறைதல்

2. கடும் வெள்ளம்

3. குடிநீர் தட்டுபாடு

4. வறட்சி

5. சுனாமி

6. பனி உருகுதல்

7. சூறாவளிகள்


இவற்றிலிருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் பாதுகாக்க நாம் உடனடியாக செய்யவேண்டியது :

1. வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்துவதால் அது வெளியிடும் புகை குறையும் . மிதிவண்டிகளை அதிகமாக பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தவும் .

2. கடற்கரையோரம் அலையாத்தி செடிகளை பயிரிட்டு கடல் அரிப்பை தடுக்கலாம் .( உதாரணம் - எங்கள் ஊர் பிச்சாவரம் )

3. பெரிய அளவில் காடு வளர்ப்பு திட்டங்களை கொண்டு வரலாம் . நகரங்களில் மேலும் மேலும் மரங்களை அழிப்பதை தடுக்கலாம் .

4. மின்சார சிக்கனம் மிகவும் அவசியம் . அதிக வெப்பத்தை வெளியிடும் குண்டு பல்புகளின் பயன்பாட்டை அறவே நிறுத்தலாம் .


பயன்படுத்த கூடிய மாற்று எரிபொருள்கள் :

அணுமின் சக்தி , சூரிய கதிர் சக்தி , காற்றாலைகள் மற்றும் ஹைட்ரோஜென் எரிபொருள் - இவற்றை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் . நன்றி .

கூர்க்இயற்கையை நம்மால் பாதுகாக்க முடியவில்லை என்றாலும் அழிக்காமல் இருக்கலாம் அல்லவா ?

தலை காவிரி

காவிரி ஆறு புறப்படும் இடமாகிய , கூர்கில் இருக்கும் தலை காவிரி . நான் தஞ்சையின் மகள் என்பதால் இந்த இடம் என்னை மிகவும் கவர்ந்ததோ ?

கல்லணை கால்வாயில் நான் எடுத்த சில படங்கள்


கல்லணை ஈன்ற கடைசிப் பெண்ணாய்

நல்லுருப் பெற்ற கல்லணைக் கால்வாய்

வளைந்து நெளிந்து வயல்கள் நிறைத்து

களிப்புடன் தஞ்சை நகரில் நுழைந்து

புதிய ஆறாய் புகழினை சேர்த்து

அதிநிறை விழைவில் காத்து நின்ற

ஒரத்த நாடு பட்டுக் கோட்டை

பரந்த நிலத்தில் பாசம் பொழிந்து

சிறுத்து இளைத்து நீர்மை குன்றிட

நிறைந்த ஆர்வப் பெருக்கில் நின்ற

கடைமடைப் பேரா வூரணி மற்றும்

படுதுயர் உற்ற நாகுடிப் பகுதி

தடையறு நீரினை பெற்றுச் செழிக்க

எடுத்து மிகுநீர் வரும்நாள் என்றோ ?


என் தந்தையின் இக்கவிதை என்று நிஜமாகும் ?

சனி, 14 நவம்பர், 2009

திபெத்தின் அழகு தோற்றம்

பூக்களை பார்க்கும் பொழுது என் மனம் குளிரும்
என்னை மிகவும் கவர்ந்த புகைப்படங்கள்


சீனபெருஞ்சுவரின் இரவு நேரத்து அழகு தோற்றம்


ஷாங்கை நாட்டின் இரவு தோற்றம்

வியாழன், 12 நவம்பர், 2009

அம்மா

பூமியின் பெயரும் அம்மா அம்மா
புண்ணிய நதியும் அம்மா அம்மா
தாரணி அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்எனக்கு பிடித்தவை

எனக்கு பிடித்தவை - அழகிய கோலங்கள் , இயற்கை காட்சிகள் , நல்ல பாடல்கள் , என சொல்லிகொண்டே போகலாம் .

இந்த வலைத்தளத்தில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன் . நான் போட்ட கோலம்

Pit