செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கொல்லி மலை

கொல்லி மலையின் எழில்மிகு காட்சிகள்பச்சை போர்வை போர்த்திய மலைத்தொடர்கள்
பனிபடர்ந்த காலை நேரத்து கொல்லி மலை

 

இயற்கை அன்னையின் கருணையில் பசுமை சிறிதளவும் குறையாமல் .......


கொல்லி மலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் உள்ளது.அடிவாரத்திலிருந்து ஏறும்போது 70 கொண்டைஊசி வளைவுகள் வருகிறது.
கொல்லி மலை சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு அற்புதமான தளம்.மிகவும் அமைதியான சூழ்நிலை .நகரத்து இரைச்சல் எதுவும் அங்கு கிடையாது.
மிதமான குளிர் ,அதிக வெப்பமும் கிடையாது.அதிக குளிரும் கிடையாது.எங்கு திரும்பினாலும் பசுமை தான்.
இங்கு பலவிதமான மூலிகைகள் கொட்டிகிடப்பதாக அங்கு வசிப்பவர்கள் கூறுகிறார்கள்.
அங்கு வீசும் காற்றில் கூட மூலிகைகள் கலந்து வரும் என கிராமமக்கள் தெரிவிக்கிறார்கள்.
கொல்லி மலையில் அவசியம் பார்க்க வேண்டிய ஓர் அற்புதமான இடம் உண்டு. அது ஆகாச கங்கை என்னும் நீர்வீழ்ச்சி .மலையின் மேல் இருக்கும் அந்த நீர்வீழ்ச்சிக்கு ஆயிரம் படிகள் வழியாக இறங்கி போனால் தான் பார்க்க முடியும்.அருவியின் இரைச்சல் வெகு தூரத்திலிருந்து கேட்க்க முடிகிறது.அருகில் சென்றால் ஆகாயத்திலிருந்து அருவி கொட்டுவது போல் ஓர் அற்புதமான காட்சி நம் கண்முன்னே தோன்றுகிறது.சுமார் 500 மீட்டர்  தூரத்திலேயே சாரல் வீசி நம்மை நிலைகுலைய செய்கிறது.அந்த அற்புதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
மேலும் இங்குள்ள அரபலீஸ்வரர் கோயில் மிகவும் பார்க்கவேண்டிய இடம் .

14 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

படங்களுக்கு மிக்க நன்றிங்க!

தஞ்சை.ஸ்ரீ.வாசன் சொன்னது…

அன்புள்ள சகோதரி,
நீங்கள் கொல்லிமலை என்றதும் எனக்கு நம் காப்பியங்களில் படித்த நினைவுகளும், கொல்லி பாவையும், வல்வில் ஓரியும் சற்றே என் நினைவை பின்னோக்கி செல்ல செய்து விட்டது. நீங்கள் அதிகமாக கொல்லிமலை பற்றி கூறியிருக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஆண்டுக்கு ஒருமுறை இங்கிருந்துதான் எங்கள் வீட்டுக்கு மசாலா(சமையல் பொருட்கள்) பொருட்கள் மொத்தமாக வாங்குவது வழக்கம்.

புலவன் புலிகேசி சொன்னது…

இதுவரை சென்றதில்லி...தூண்டியிருக்கிறீர்கல்...போய வரவேண்டியதுதான்..

தமிழ் உதயம் சொன்னது…

இங்கே இறைவன் எனும் கவிஞன்... என்றோ உலகை அழகாய் படைத்தான்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அழகு படங்கள் அனைத்தும், தகவலகளுக்கு நன்றி.

தாராபுரத்தான் சொன்னது…

நனறியம்மா..முடிந்தால் போயிட்டு வாரோம்.

கமலேஷ் சொன்னது…

மிக அருமையான படங்கள் மற்றும் பகிர்வு...உங்களின் பகிர்வுக்கு மிகக் நன்றி..

DREAMER சொன்னது…

படங்களும் பகிர்வும் அருமை...

-
ட்ரீமர்

வைகறை நிலா சொன்னது…

கொல்லிமலையின் எழில்மிகு தோற்றம் சிறப்பான புகைப்படங்களில் மனதை கவர்கிறது..

மாதேவி சொன்னது…

கொல்லிமலை,ஆகாயகங்கை படங்கள் அழகு.

R.Gopi சொன்னது…

படங்கள் பட்டையை கிளப்புகிறது...

பசுமையை காண்பதில் கண் குளிர்ச்சி பெற்றது...

அந்த ஆகாச கங்கை என்னும் நீர்வீழ்ச்சி விவரிப்பு பலே... நீங்கள் தான் அந்த அற்புதத்தை வார்த்தையால் அழகாக விவரித்து விட்டீர்களே...

ஒரு முறை சென்று விட வேண்டியது தான்...

பதிவு நல்லா இருக்கு... வாழ்த்துக்கள் மலர்விழி...

நேரம் கிடைக்கும் போது இங்கேயும் வாருங்கள்...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

ராமலக்ஷ்மி சொன்னது…

எழில் கொஞ்சும் காட்சிகளை வெகுவாக ரசித்தேன். அருமையான படங்களுக்கு மிகவும் நன்றி மலர்விழி!

manima சொன்னது…

அன்புள்ள நண்பர்களே, என் பெயர் மணிமாறன்.
சேலம் சொந்த ஊரு.

பெங்களுருவில் தற்போது வாசித்த வருகிறேன்.
என்னக்கு ஊரு சுற்றிபக்க ரொம்ப ஆசை. அப்படித்தானே கொல்லி மலை வந்தேன். நான் கொல்லி மலையில் ஒரு வித்தியாசமான விடுதி கட்டி உள்ளேன், அனைவரும் கொல்லி மலை வருக என வரவேற்கிறேன்.

இப்படிக்கு,

மணிமாறன்
+919739700059
http://wildorchidcamp.com

rajy சொன்னது…

Super place

Pit