வியாழன், 25 பிப்ரவரி, 2010

அழகு குறிப்புகள்

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள்சிலவற்றை பார்ப்போமா.....

1 .ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் ,தோளில் உள்ள சுருக்கங்கள்,மரு போன்றவை நீங்கி விடும்.
2 .உலர்ந்த சருமத்திற்கு முட்டையின் வெள்ளை கருவை தனியே பிரித்து எடுத்து அத்துடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் தடவவேண்டும் .அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ ,முகம் பொலிவுடன் மிளிரும்.
3 .காரட் எடுத்து நன்கு கூலாக அரைத்து அத்துடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி விடவும்.நன்கு காய்ந்தவுடன் முகத்தை கழுவவும்.முகம் பளிச் என்று இருக்கும்.(திருமணங்களுக்கு செல்லும்போது பார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்.)
4 .பச்சைபயறு,கஸ்தூரி மஞ்சள் ,பூலாங்கிழங்கு மூன்றையும் ஒன்றாக கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.அதில் சிறிது எடுத்து தயிர் கலந்து முகத்தில் பூசவும்.சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.இதே கலவையில் சிறிது எடுத்துதேங்காய் எண்ணெய்,ரோஸ் வாட்டர் ,எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து சோப்புக்கு பதிலாக உடலில் பூசி குளித்தால் சருமம் அழகாக தோன்றும்.
5 .தினமும் காலையில் இளநீர் பருகினால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.
6 .கண் பார்வை நன்கு வலுப்பெற அதிகாலையில் உதிக்கும் சூரியனை தினமும் பார்த்தல் வேண்டும்.
7 .மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,வேப்பிலை,ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டுபின்பு தலைக்கு தேய்க்கவும்.இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும்.மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது.ஷாம்புக்கள் பயன்படுத்தும்போதும் இதே போல் செய்யவேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.
8.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும்.கூந்தல் அடர்த்தியாக வளரும்.
9 .கருவேப்பிலை,சின்ன வெங்காயம் -4 ,இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்துகுளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

என்ன நண்பர்களே ! மேலே கூறியவற்றை பார்த்து பயந்து விடவேண்டாம்.தைரியமாக செய்து பார்க்கலாம்.நான் உத்தரவாதம் தருகிறேன்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கொல்லி மலை

கொல்லி மலையின் எழில்மிகு காட்சிகள்பச்சை போர்வை போர்த்திய மலைத்தொடர்கள்
பனிபடர்ந்த காலை நேரத்து கொல்லி மலை

 

இயற்கை அன்னையின் கருணையில் பசுமை சிறிதளவும் குறையாமல் .......


கொல்லி மலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் உள்ளது.அடிவாரத்திலிருந்து ஏறும்போது 70 கொண்டைஊசி வளைவுகள் வருகிறது.
கொல்லி மலை சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு அற்புதமான தளம்.மிகவும் அமைதியான சூழ்நிலை .நகரத்து இரைச்சல் எதுவும் அங்கு கிடையாது.
மிதமான குளிர் ,அதிக வெப்பமும் கிடையாது.அதிக குளிரும் கிடையாது.எங்கு திரும்பினாலும் பசுமை தான்.
இங்கு பலவிதமான மூலிகைகள் கொட்டிகிடப்பதாக அங்கு வசிப்பவர்கள் கூறுகிறார்கள்.
அங்கு வீசும் காற்றில் கூட மூலிகைகள் கலந்து வரும் என கிராமமக்கள் தெரிவிக்கிறார்கள்.
கொல்லி மலையில் அவசியம் பார்க்க வேண்டிய ஓர் அற்புதமான இடம் உண்டு. அது ஆகாச கங்கை என்னும் நீர்வீழ்ச்சி .மலையின் மேல் இருக்கும் அந்த நீர்வீழ்ச்சிக்கு ஆயிரம் படிகள் வழியாக இறங்கி போனால் தான் பார்க்க முடியும்.அருவியின் இரைச்சல் வெகு தூரத்திலிருந்து கேட்க்க முடிகிறது.அருகில் சென்றால் ஆகாயத்திலிருந்து அருவி கொட்டுவது போல் ஓர் அற்புதமான காட்சி நம் கண்முன்னே தோன்றுகிறது.சுமார் 500 மீட்டர்  தூரத்திலேயே சாரல் வீசி நம்மை நிலைகுலைய செய்கிறது.அந்த அற்புதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
மேலும் இங்குள்ள அரபலீஸ்வரர் கோயில் மிகவும் பார்க்கவேண்டிய இடம் .

சனி, 13 பிப்ரவரி, 2010

சின்னஞ்சிறு ஈமுக்கள்
படத்தில் நீங்கள் காணும்இந்த
பெரிய ஈமுக்கள்ஈன்ற


இந்த முட்டைகளிலிருந்து வந்தவை தான்
 இந்தகுட்டி ஈமுக்கள்.


காடுகளில்வாழும் ஈமுக்களில் பெண் ஈமு முட்டை இட்டதும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடும்.அதன் பின்பு ஆண் ஈமு அந்த முட்டையை மற்ற விலங்குகளிடமிருந்து காப்பாற்ற 
படத்தில் உள்ளது போல் காய்ந்த சருகுகள் ,குச்சிகள் இப்படி அனைத்தையும் சேகரித்து முட்டை மேல் போட்டு மூடி வைக்கும்.முட்டைகள் சேர்ந்ததும் ஆண் ஈமு உட்கார்ந்து அடைகாக்கும்.இது காடுகளில் நடக்கும்.வழக்கம்.
ஆனால் நகரங்களில் பெண் ஈமு முட்டை இட்டதும் அதை சேகரித்து வைத்து பின்பு முட்டை அடைகாக்கும் இயந்திரத்தில் வைத்துவிடுவார்கள். 90 டிகிரி வெப்பத்தில் அந்த முட்டைகளை வைத்துவிடுவார்கள்.48 நாட்கள் முட்டைகள் இயந்திரத்தில் இருக்கும்.பிறகு வெளியே வரும்.மேலே உள்ள படத்தில் நீங்கள் காணும்இந்த குட்டி ஈமுக்கள் பிறந்து இருபத்தி ஓர் நாட்கள் ஆகின்றன.

இந்த ஈமுக்களுக்கு தானியங்களை துளாக்கி உணவாக கொடுக்கிறோம்.நன்கு ஆறவைத்த வெந்நீர் குடிக்கும்.தண்ணீர் மிகவும் அதிகமாக குடிக்கும்.கால்சியம் சத்து தேவை என்பதால் தண்ணீரில் அதையும் சேர்த்து கொடுக்கிறோம்.
தண்ணீர் அதிகமாக குடிப்பதால் இதன் வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும்.15 மாதத்தில் அது 6 அடி உயரம் வளர்ந்து விடும்.

குட்டி ஈமுக்கள் இயந்திரத்தை விட்டு வெளியே வந்தபிறகு குளிர் தாங்காது.ஆகவே அதை காற்று புகாத சிறிய அறையில் வைத்து விடவேண்டும்.பிறகு அதன் தலைக்கு மேலே 5 அல்லது 6 குண்டு பல்புகளை எரிய விடவேண்டும்.அந்த வெப்பத்தில் தான் அவை உயிர் வாழ முடியும்.இது போல் அவற்றை குறைந்தது ஒரு மாதத்திற்கு பாதுகாக்க வேண்டும்.
மேலும் கழுகு ,பருந்து போன்ற பறவைகளிடமிருந்தும் அவற்றை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.  

சனி, 6 பிப்ரவரி, 2010

கங்கை கொண்ட சோழபுரம்

தஞ்சையை   ஆண்ட     மாமன்னன்   ராஜராஜ   சோழனின்   மகன்   ராஜேந்திர  சோழன்
கி .பி   1014   முதல்   1042   வரை  ஆட்சி  கட்டிலில்   அமர்ந்திருந்தான்.  அவன்  தன்   தலைநகரை   தஞ்சையிலிருந்து   மாற்றினான்.   இப்பொழுது   திருச்சிராப்பள்ளி    மாவட்டத்தில்   உள்ள  கங்கை  கொண்ட  சோழபுரம்   என்ற   பெயரை   உடைய  
நகரை   உண்டாக்கி   அதையே  தலைநகராகக்   கொண்டான். அவன் காலத்திலும் , 
அவன்  காலத்திற்கு  பிறகு  சோழர்களின்   இறுதி வரை  இந்நகரமே   அவர்களின்   தலைநகரமாக  விளங்கியது.

அக்காலத்தில்   இந்நகரம்   நான்கு    மைல்  சதுர  அமைப்புடன்   இருந்ததாக   தெரிகிறது.
கோயிலுக்கு   தெற்கே   இரண்டு   கிலோமீட்டர்  தொலைவில்  பிரகதீசர்     தீர்த்த  குளம்   இன்றும்   உள்ளது.   பரணைமேடு   என்னும்   ,  கோயிலுக்கு  ஏழு   மைல்  தொலைவில்  உள்ள  சிற்றூரிலிருந்து   பருத்தி   மூட்டைகளை   அடுக்கி   பரணை   கட்டி  விமானக்   கல்  கொண்டு   செல்லப்பட்டதாக   தெரிகிறது.  ராஜேந்திரன்   தஞ்சை  கோயிலை  பின்பற்றியே   இக்கோவிலைக்   கட்டினான் .   சுவாமியின்  பெயர்   பிரகதீசுரர் .  அம்பிகையின்    பெயர்   பிரகநாயகி.
இக்கோவில்   கும்பகோணம்  ,   சிதம்பரம்  இரண்டுக்கும்    இடையில்    உள்ளது.
இக்கோவில்   ராஜேந்திரனின்   வடநாட்டு   வெற்றிகள்   முடிந்ததும்    கி.  பி   1025   இல்   தொடங்கப்பட்டது.

கோவிலின்  திருமதில்   600    அடி  நீளமுடையது.  அகலம்  450    அடி.   இரண்டு    அடுக்கு  திருச்சுற்று  மாளிகையின் ஒரு  பகுதி  மட்டுமே  இப்போது  காணப்படுகிறது.   கோவிலின்   நீளம்   350   அடி.   அகலம்   110 அடி  . 
இறைவன்   சந்நிதியின்   மேல்  உள்ள  விமானம்  186   அடி  உயரமாகும். சுவாமியின்  லிங்க  திருமேனி   மிகவும்  பெரியதாகும்.  லிங்கத்தின்  உயரம்  13   அடி. பீடம்   30   முழம்  சுற்றளவுடையது.
இக்கோவில்    சோழர்கால   கோவில்கள்   அனைத்திலும்   ,  அழகிலும்   , சிற்ப திறனிலும் தனி தன்மையுடன்    விளங்கியதாக   தெரிகிறது.  

     

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நான் ரசித்தவை

கூர்க்  -  மழையை   எதிர்  நோக்கி  ஒரு  மதிய  வேளை....

 கூர்க்  ,   தலைக்காவிரிக்கு   அருகில்  ....... கரை  புரண்டு   ஓடும்   காவிரி  நதி .......

கூர்க்   --   புத்தர்   கோயிலின்  அழகிய   தோற்றம்
Pit