ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

புவி வெப்பம்...2



என்ன நண்பர்களே!
என்னுடைய முந்தைய பதிவு படித்திருப்பீர்கள் என நினைக்கிறன் .இனி அடுத்த விஷயத்திற்கு போகலாமா ?
பூமி ஏன் வெப்பமாகிறது ?







மனிதன் தன்னுடைய சுய லாபத்திற்காகவும் ,தனக்கு வேண்டிய சௌகரியதிர்க்காகவும் ,ஆடம்பரதிற்க்காகவும் செய்யும் பலவிதமான காரியங்கள் இன்று மனிதனுக்கு மட்டும் அல்லாமல் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பேரழிவை ஏற்படுத்திஉள்ளது .







இயற்கை நமக்கு சில பாதுகாப்புகளை தந்திருக்கிறது .வளிமண்டலத்தில் இயற்கையாகவே ஆக்சிஜன்,நைட்ரஜன்,ஓசோன் மற்றும் பசுமை வாயுக்களான கார்பன் -டை-ஆக்சைடு,மீதேன்,நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை உள்ளன.இவற்றில் பசுமை வாயுக்கள் சூரியனின் வெப்பத்தை உள்வாங்கி தேவையான அளவு வெப்பத்தை பாதுகாத்து பூமியின் மேல் ஒரு போர்வையைப் போல் இருந்து பாதுகாத்து வருகிறது.பசுமை வாயுக்கள் மட்டும் இல்லை என்றால் பூமியும் சந்திரனை போல் ஆகிவிடும்.சந்திரனில் பகலில்  220 டிகிரி F ,இரவில் -234 டிகிரி F வெப்ப அளவுஇருக்கும்.










பசுமை வாயுக்கள் குறைவாக இருந்த போது ,அதனால் ஏற்பட்ட சுழற்சி முறைகள் நம்மால் ஏற்று கொள்ள முடிந்தது.ஆனால் பசுமை வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகி விட்டதால் ,அதன் அதிக படியான தாக்கத்தை நம்மால் தாங்க முடியவில்லை. உதாரணமாக பார்த்தால் சித்திரையில் மிகவும் அதிகமான வெப்பம்,ஐப்பசியில் அடை மழை பெய்வதற்கு பதில் பனிமூட்டம் அதிகமாக இருத்தல் ,இப்படி பலவித நிகழ்வுகளை நாம் கண்கூடாககாண்கிறோம்,




மேலும் உலகில் உள்ள எல்லா பாகங்களிலும் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.எங்கும் தொழில்மயம் ,அதன் மூலம் நாட்டை வளப்படுத்துதல் ,மின்சார உற்பத்திக்காக எரிக்கப்படும் நிலக்கரி ,பெருகிவரும் மோட்டார் வாகனங்கள் ,இரயில்கள் ,விமானங்கள் இவற்றிற்கு பயன்படுத்தும் பெட்ரோல் ,டீசல் வெளியிடும் புகை,சமையல் எரிவாயு ,ரசாயன உரங்கள் ,குளிர்சாதனப்பெட்டி வெளியிடும் வாயுக்கள் ,இவை அனைத்தும் வளிமண்டலத்தில் நுழைந்து,அதன்மூலம் பூமியை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் புவி வெப்பம் மிக அதிகமாக உயர தொடங்கிவிட்டது.


இன்னும் நூறு வருடங்களில் பூமியின் வெப்பம் 1 .1C முதல் 6 .4 C வரை உயரும் ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.இதற்கும் மேலும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வரவிருக்கும் தலைமுறையினர் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்க நேரிடும்.












உலகம் முழுவதும் புவி வெப்பத்தால் இதுவரை ஏற்பட்ட மாற்றங்கள் .........

தொடரும்........

11 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

சுற்றுபுறசூழல் ஆர்வலர்கள் எவ்வளவு சொன்னாலும் யார் கேட்கிறார்கள். இந்த பூமி பந்து, குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக அலங்கோலப்பட்டு கொண்டு தான் உள்ளது.

Prasanna சொன்னது…

தேவையான பதிவு.. ஒன்றும் செய்ய முடியாது என்று தான் தோன்றுகிறது..உங்கள் வலை பக்கம் திறக்க வெகுநேரம் ஆகிறது..

malarvizhi சொன்னது…

மிகவும் சரியாக சொன்னீர்கள்,தமிழ். யாருமே காதில் போட்டுக் கொள்வதில்லை.குறைந்தது நான்கு மரங்களையாவது வளர்க்கலாம்,இடமிருப்பவர்கள்....

malarvizhi சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி.வலைபக்கத்தில் உள்ளேவிரைவில் செல்ல ஏற்பாடு செய்கிறேன்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அருமை!!!
படங்களை பார்க்குபோதே
துன்ப நிகழ்வுகளின் வீரியம் தெரிகிறது.

அண்ணாமலையான் சொன்னது…

தேவையற்ற விஷயங்களை எடுத்தா போதும் ... ஈஸியாயிடும்

சுசி சொன்னது…

நல்ல பதிவுங்க..

எல்லாரும் சிந்திச்சு ஒரு சின்ன விஷயத்திலயாவது கவனம் எடுத்தா சிறு துளி??

malarvizhi சொன்னது…

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி, பரோட்டா.

Sivamjothi சொன்னது…

I want to print 100 posters "PLANT TREES OTHERWISE WE'LL DIE" and post in my area..

If people reading this blog can do, it will create awareness to people.

அன்புடன் மலிக்கா சொன்னது…

//தேவையான பதிவு.. ஒன்றும் செய்ய முடியாது என்று தான் தோன்றுகிறது..உங்கள் வலை பக்கம் திறக்க வெகுநேரம் ஆகிறது..//

அதையேதான் நானும் சொல்கிறேன் மலர்.

அருமையான பதிவு புரிஞ்சி நடகனுமே நாமும்தான்..

malarvizhi சொன்னது…

வருகைக்கு நன்றி பாலு.

Pit