திங்கள், 30 நவம்பர், 2009

பெரிய கோவில் - மேலும் சில தகவல்கள்
நம் தோழி ரசனைக்காரியின் விருப்பத்திற்கு இணங்கி தஞ்சை

பெரிய கோவிலை பற்றி நான் படித்து அறிந்தவற்றில்

மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து

கொள்ளலாம் என நினைக்கிறேன் . அது என்னவோ

தெரியவில்லை , இக்கோவில் என்றால் எனக்கு அப்படி

ஒரு பரவசம் ஏற்படுகிறது . நான் படித்த நூல்களில்

மிகவும் அதிகமாக இடம் பெறுவது பெரிய கோவிலையும்,

ராஜராஜனை பற்றியும் தான் .தஞ்சை பெரிய கோவில் என்றும் , ராஜராஜீச்சரம்

என்றும் அழைக்கப்படும் இக்கோவில் வடமொழியில்

பிரகதீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படுகிறது .தஞ்சையில் சிறிய கோட்டை வளாகத்துள் சிவகங்கை

குளம் , பூங்கா இவற்றிற்கு அருகே கோவில் உள்ளது .

கோட்டைக்கு வெளியே அகழி உள்ளது . கோட்டை ,

அகழி இரண்டும் 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால்

கட்டப்பட்டது .


இக்கோவிலில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது . 5

அடுக்குடன் உள்ள முதல வாயில் " கேரளாந்தகன்

திருவாயில் " எனப்படும் . கி . பி 988 இல் கேரளா

மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி

பெற்றதால் அப்போரின் நினைவாக ராஜராஜன் இப்பெயரை

வைத்தான் என கல்வெட்டு குறிப்புகள் தெரிவிகின்றன .


இரண்டாவது வாயில் 3 அடுக்குடன் உள்ள " ராஜராஜன்

திருவாயில் " ஆகும் .மதிலின் உள்புறம் நான்கு திசைகளிலும் திருச்சுற்று

மண்டபம் உள்ளது . இது ராஜராஜன் காலத்தில் இரண்டு

தளத்துடன் இருந்து பின்னாளில் அழிந்து ஒரே ஒரு

தளத்துடன் தற்போது காட்சி தருகிறது .

இக்கோவில் விமானத்தின் நிழல் தரையில் விழாது

என்பது தவறான செய்தி .


விமான உச்சியில் உள்ள பிரமரந்திரதளம் ஒரே

கருங்கல்லினால் ஆனது . அது 25 1/2 அடி சதுரம்

உடையது . எடை 80 டன் என்பர் . இதனை தஞ்சைக்கு

நான்கு மைலுக்கு அப்பால் உள்ள சாரப்பள்ளம்

என்ற கிராமத்திலிருந்து சாரம் கட்டி இச்சிகரத்தில்

ஏற்றினார்கள் என்றும் அதனால் தான் அவ்வூருக்கு

சாரப்பள்ளம் என்று பெயர் வந்ததாக கூறுவர் .பொற் கோவிலாக திகழ்ந்த பெரியகோவில் :

216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம்

முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப்

பட்டு திகழ்ந்தது . ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின்

மேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல்

மாலிக்கபூரின் படையெடுப்பின் போது

சூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை

காண முடியவில்லை .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில்

திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில்

தான் என்பது வரலாற்று உண்மை .

6 கருத்துகள்:

Rajeswari சொன்னது…

இக்கோவில் விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது

தவறான செய்தி .///

ஓ..

Rajeswari சொன்னது…

பல புதிய தகவல்கள்...

மிக்க நன்றி மலர்விழி அவர்களே...

சுசி சொன்னது…

புதிய பல தகவல்கள் மலர்விழி...

இராயர் அமிர்தலிங்கம் சொன்னது…

BalaKumaran avarkalin Udaiyar novel padithu varirkala??

அண்ணாமலையான் சொன்னது…

நம் தோழி ரசனைக்காரியின் விருப்பத்திற்கு இணங்கி "
எங்கே அவங்கள கானோம்? போட்டோ நீங்க எடுத்ததா?

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Pit