ஞாயிறு, 15 நவம்பர், 2009

புவி வெப்பமடைதலால் ஏற்படும் விழைவுகள்

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை , வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழிற்சாலைகள் , நகர வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படும் காடுகள் , இவற்றால் நாம் பசுமையை இழக்கிறோம் . இதன் காரணமாக புவியின் வெப்பம் கடந்த நூற்றாண்டில் 0.6 டிகிரி உயர்ந்துள்ளது . இந்த நூற்றாண்டில் இது இன்னும் வேகமாக அதிகரித்து வருகிறது .

வெள்ளம் , புயல் , வறட்சி

புவி வெப்பமடைவதால் பனி மலைகள் மிகவும் வேகமாக உருகி , அதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது . இதன் விளைவாக கடும் வெள்ளம் ஏற்படுகிறது . மற்றொரு பக்கம் கடும் வறட்சி ஏற்படுகிறது . மேலும் சில இடங்களில் சுனாமி , புயல் , சூறாவளி காற்று வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது . இமயமலையில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகிறது . விரைவில் பனி இருப்பு குறைந்து வறண்ட பாலைவனமாய் மாறிவிடும் சூழல் உருவாகி வருகிறது .

துருவ பகுதியில் பனி உருகுதல்

இவை எல்லாவற்றையும் விட மிகவும் அபாயகரமான செய்தி துருவ பகுதியில் உள்ள பனி பாறைகள் தான் . புவி வெப்பம் உயருவதால் பனிப்பாறைகள் உருகி நீராகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நுற்றாண்டின் இறுதிக்குள் கடல்மட்டம் 3 அல்லது 4 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதன் காரணமாக தமிழகத்தில் சென்னையை அடுத்து உள்ள எண்ணூர் மற்றும் அதன் சுற்று பகுதிகள் , வங்க தேசத்தின் டாக்கா , மாலதீவு , லண்டன் , இப்படி பல நாடுகளை இந்த நுற்றாண்டின் இறுதியில் கடல் கொள்ளும் என்று ஒரு ஐயப்பாடு உள்ளது .

மிகவும் நீளமான கடற்கரையை கொண்டுள்ள நம் தமிழகத்தில் தாழ்வான கடல் பகுதியில் ஏராளமான நகரங்கள் உள்ளன . பேரழிவு ஏற்பட்டால் அவற்றின் கதி ?


பின்னாளில் ஏற்பட போகும் பாதிப்புகள்

1. உணவு உற்பத்தி குறைதல்

2. கடும் வெள்ளம்

3. குடிநீர் தட்டுபாடு

4. வறட்சி

5. சுனாமி

6. பனி உருகுதல்

7. சூறாவளிகள்


இவற்றிலிருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் பாதுகாக்க நாம் உடனடியாக செய்யவேண்டியது :

1. வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்துவதால் அது வெளியிடும் புகை குறையும் . மிதிவண்டிகளை அதிகமாக பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தவும் .

2. கடற்கரையோரம் அலையாத்தி செடிகளை பயிரிட்டு கடல் அரிப்பை தடுக்கலாம் .( உதாரணம் - எங்கள் ஊர் பிச்சாவரம் )

3. பெரிய அளவில் காடு வளர்ப்பு திட்டங்களை கொண்டு வரலாம் . நகரங்களில் மேலும் மேலும் மரங்களை அழிப்பதை தடுக்கலாம் .

4. மின்சார சிக்கனம் மிகவும் அவசியம் . அதிக வெப்பத்தை வெளியிடும் குண்டு பல்புகளின் பயன்பாட்டை அறவே நிறுத்தலாம் .


பயன்படுத்த கூடிய மாற்று எரிபொருள்கள் :

அணுமின் சக்தி , சூரிய கதிர் சக்தி , காற்றாலைகள் மற்றும் ஹைட்ரோஜென் எரிபொருள் - இவற்றை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் . நன்றி .

8 கருத்துகள்:

V.N.Thangamani சொன்னது…

அருமையான விஷயம்.
பதிவுக்கு நன்றி.
இதே விஷயத்தை ஓசோன் என்ற தலைப்பில்
கவிதையாக எழுதி இருக்கிறேன் படித்துப்
பார்த்து கருத்து தெரிவியுங்கள் தோழி.
அன்புடன் வி.என்.தங்கமணி
www.vnthangamani.blogspot.com

V.N.Thangamani சொன்னது…

நன்றி தோழி. நல்ல கருத்துக்கள். தொடருங்கள்.
வாழ்க வளமுடன்.

கவி அழகன் சொன்னது…

நன்றாக உள்ளது

V.N.Thangamani சொன்னது…

கருத்தும் தீர்வும் அருமை தோழி.
வாழ்க வளமுடன்.
அன்புடன் வி.என்.தங்கமணி

Unknown சொன்னது…

மிகவும் நன்றாய் சொல்லீருக்கீங்க.

SUFFIX சொன்னது…

My favorite subject!! நல்ல பகிர்வு, தொடரட்டும் தங்களது சேவை!!

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல விஷயம்

angel சொன்னது…

a very good article just update something about the topic. i read and saw other posts too. u seems to be an all rounder

Pit