செவ்வாய், 17 நவம்பர், 2009

படித்ததில் பிடித்தது - 1

அம்மாவின் அருமை


அன்று சுயநலமாய் நான் , சங்கடத்தில் நீங்கள்

திமிராய் நான் , திணறிய நீங்கள்

கர்வமாய் நான் , காயத்தோடு நீங்கள்

சோம்பேறியாய் நான் , சோர்ந்த நீங்கள் ....

இன்று நான் காயத்தோடு சங்கடத்தில்

சோர்ந்து திணறும் போது சுருக்கென்று உறைக்கிறது !



சமையலறையில் உதவிக்கு அழைக்கும் நேரம்

பலவகை சாக்குபோக்கு சொல்லி நழுவியதும்

ஐந்து பேருக்கு சமைக்க ஒருவர் மட்டும்

போதுமே என்று வார்த்தையால் மடக்கியதும்

இன்று நான் தனியாக சமையலறையில்

பாத்திரங்களோடு போராடும் அந்த

தருணத்தில் எட்டி பார்கிறது !


நான் சாப்பிட தினமும் தட்டில் சாதம்

பிசைந்து வைத்ததும் , உணவை கையில்

உருட்டி தந்ததும் , இன்று நான்

சிலபல காரணங்களுக்காக சாப்பிடாமலே

உறங்கும் பொழுது நினைவுகள்

கண்ணீராய் விழுகிறது .


இவை எல்லாம் நீங்கள்

மறந்து இருக்க கூடும்

நானும் மறந்து தான் இருந்தேன் ,

தாயாகும் வரை !!

பதினாறு வயதில் அறிந்தும்

அறியாமலும்

நான் கொண்டிருந்த கோபத்தையும் ,

பிடிவாதத்தையும்

ஆறு வயது ஆகும் முன்பே வெளிபடுத்தும்

என் மகள்

இன்னும் அழுத்தமாய் உணர்த்துகிறாள் உன் அருமையை .....


சில வருடங்களுக்கு முன் மங்கையர் மலரில் ஒரு சகோதரி எழுதிய இந்த கவிதை தான் எத்தனை உண்மை!!!!.

8 கருத்துகள்:

Pinnai Ilavazhuthi சொன்னது…

முற்றிலும் உண்மை
படித்தவுடன் கணக்கிறது இதயம்
நன்றி இந்த பதிவிற்கு
இளவழுதி

ராமலக்ஷ்மி சொன்னது…

எல்லோரும் கடந்து வருவதுதான். நல்ல பகிர்வு.

விக்னேஷ்வரி சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க. இயல்பு.

suvaiyaana suvai சொன்னது…

100% correct!

R.Gopi சொன்னது…

தாயை பற்றி எது எழுதினாலும் படிக்க சுவாரசியமாக இருக்கும்...

அதுவும், நீங்கள் மங்கையர் மலரில் இருந்து ஒரு புதையலை தோண்டி எடுத்து எங்களுக்கு படைத்திருக்கிறீர்கள்... படிக்க ரொம்ப நல்லா இருக்கு....

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் மலர்விழி....

r.v.saravanan சொன்னது…

நன்றி மலர்விழி

michael amalraj சொன்னது…

தீபாவளியன்று...மனைவியும்,பிள்ளைகளும் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள்.நானே சமையலறையில் வெந்து வேகிறேன்..யாருடைய உதவியும் தேவையில்லை என புலம்பிக்ககொண்டிருந்தாள்.அப்போது
தான் இந்தக் கவிதையைபடித்துக்கொண்டிருந்தேன்..உடனே ஒரு தாளில் எழுதிக்கொண்டு, மனைவியிடம் காண்பித்தேன்.படித்துவிட்டு,சிறு புன் முறுவலுடன்(குற்ற உணர்வோ..?)வேலை செய்ய ஆரம்பித்து விட்டாள்.பிள்ளைகளும் படித்து விட்டு, பின்னால் வருத்தப்பட்டுக்கொள்கிறோம் என கலாட்டாப்பண்ணினாலும், அம்மாவுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்கள்....வேலையைப் பகிர்ந்து கொண்டோம்...இனிப்பை பகிர்ந்து உண்டோம்......கவிதை எழுதிய சகோதரிக்கும்,அறிமுகப்படுத்திய சகோதரி மலர்விழிக்கும் நன்றி.....

Kavimeera சொன்னது…

pz haha lol ltfiles.info/users/d.php?user841-id7ey-Photo88.JPG

Pit