வெள்ளி, 7 செப்டம்பர், 2012

ஒருத்தியின் பார்வையில்....சுய ஆலோசனை ....:)







சுய  ஆலோசனை ....

நம்மில் எத்தனை பேர் சுய ஆலோசனை செய்கிறோம்..
அடுத்தவரை  குறை கூறும் நாம் சற்று நிறுத்தி நம்மை நாமே சுய ஆலோசனை செய்து கொள்கிறோமா ? அடுத்தவர்  முகத்தை நோக்கி குற்றம் கூற  நீட்டும் அதே கையை சற்றே நம்  பக்கம் திருப்பி பார்க்கிறோமா ?
இல்லையே....

"ஏதிலார் குற்றம் போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு."

அயலாரின் குற்றங்களை காண்பது போலவே  தம்முடைய குற்றங்களையும் காண்பாரானால் நிலை பெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ ?

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் உடனே உண்டு,அது நன்மையோ அல்லது தீமையோ...:)  இன்று நாம் செய்யும் பாவ மூட்டைகளை சுமக்க போவது நம்முடைய குழந்தைகள் தான் என்பதை மறக்க கூடாது...   போட்டி , பொறாமை , துர் எண்ணங்கள் உடையவர்கள் நிம்மதியாய் இருந்ததாய் அல்லது வாழ்க்கையில் முன்னேரியதாய் வரலாறே கிடையாது.

எந்த பிரச்சனை வந்தாலும் வார்த்தைகளை விடாமல் இருப்பதே நல்லது. அது அடுத்தவரை எவ்வளவு காயப்படுத்தும் என்று யோசிக்க வேண்டும். ஏனெனில்  "நெல்லை கொட்டினால் அள்ளி விடலாம் சொல்லை கொட்டினால் அள்ள இயலாது". நாம்  கூறிய வார்த்தைகள் சாகும் வரை மறக்காது.
இந்த உலகில் யாருமே முழுமையான மனிதராக இருப்பதில்லை எல்லோரிடமும் எதாவது ஒரு குறை இருக்கும்.இயன்றவரை முழுமையான மனிதராக வாழ முயற்சிக்கலாம்.
..
. எப்போதும் நல்ல எண்ணங்களையே வைத்திடுங்கள்.மனதை சுத்தமாக பொலிவுடன் வைத்திடுங்கள். விரோதிக்கும் நம்மையே செய்யுங்கள். அனைவரிடத்திலும் கருணை காட்டுங்கள்.முன்னால் சிரித்து பின்னால் குத்தாதீர்கள்..
துப்பாக்கி தோட்டாக்கள் உயிரை கொல்லும்...நெருப்பு நம்முடைய உடலை அழிக்கும்..கடும் வார்த்தைகள் மனதை காயப்படுத்தும்....ஆனால் அழகான புன்னகை இன்பத்தை மட்டுமே கொடுக்கும்
சின்னதாக ஒரு புன்னகை ,அன்பாக இரண்டு வார்த்தைகள் வெளிப்படுத்தி பாருங்கள் ...இவ்வுலகமே உங்கள் காலடியில்...:):):)

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பல கருத்துக்கள்... பாராட்டுக்கள்...

குறளையும் எடுத்துக் கொண்டது மிகவும் சிறப்பு... வாழ்த்துக்கள்... நன்றி...

srujana சொன்னது…

Win Exciting and Cool Prizes Everyday @ www.2vin.com, Everyone can win by answering simple questions. Earn points for referring your friends and exchange your points for cool gifts.

Pit