வெள்ளி, 7 செப்டம்பர், 2012
உருகும் பனிமலைகள்...


உலகின் முன்னணி துருவ பகுதிகளின் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான், சுற்றுச் சூழலை மாசு படுத்தாத எரிசக்திக்கு உலக மக்கள் மாற வேண்டியதை வலியுறுத்தி உலகமெங்கும் பிரயாணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.அவர் தன் பிரயாணத்தில் இந்தியா வந்த போது சென்னையில் நடந்த பல்வேறு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சென்னையின் வெப்பம் அவருக்கு புத்துணர்ச்சியை தருவதாகவும் அதே நேரத்தில் அந்
த வெப்பத்தின் பின்னால் இருக்கும் அபாயம் அச்சத்தை ஊட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.அன்டார்டிகாவிலும் ,ஆர்டிக் பகுதியிலும் பனி மலைகள் வெகு வேகமாக உருகி வருவதாகவும் இதே நிலை நீடித்தால் இன்னும் 90 வருடங்களில் சென்னை கடலுக்குள் மூழ்கி விடும் என்றும் கூறியுள்ளார்.இன்னும் 90 வருடங்கள் கழித்து தானே...நாம் என்ன பார்க்கவா போகிறோம் அழிவதை என்று நினைக்க வேண்டாம்...அழியபோவது நம் சந்ததியினர் என்று எண்ண வேண்டும்.

மேலும் அவர் தன்னுடைய உரையில் கடல் மட்டம் இரண்டு மீட்டர் உயரும் என்றும் அப்படி உயரும் பட்சத்தில் உலகில் பல்வேறு இடங்கள் கடலுக்குள் மூழ்கி விடும் என்றும் ,அதுவும் மிக விரைவில் நடக்கும் என எச்சரித்துள்ளார்.

இதை தடுக்க ஒரே வழி நிலக்கரி ,பெட்ரோலியம் போன்ற புகை கக்கும் பொருட்களுக்கு பதிலாக சூரிய சக்தி ,காற்று சக்தி போன்றவற்றை பயன் படுத்துவது மிகவும் சிறந்தது என வலியுறுத்தி வருகிறார்.
ஆண்டு தோறும் 200 மில்லியன் டன்கள் கார்பன் மோனாக்சைடும், 50 மில்லியன் டன் ஹைட்ரோ கார்பனும் ,150 மில்லியன் டன் சல்பர் டை ஆக்சைடும் ,190 மில்லியன் டன் சாம்பலும் ,காற்று மண்டலத்தில் கலந்து அதை நச்சு தன்மையாக மாற்றி வருகிறது.
கால நிலையை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் கரிய மில வாயு கடந்த 100 ஆண்டுகளில் தொழில் புரட்சி காரணமாக 26 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 700 கோடி டன் கார்பன் வெளியிடபடுகிறது.வாகனங்கள் ,தொழிற்சாலைகள் ஆகியவற்றில் இருந்து இந்த மாசு வெளியேறுகிறது. காடுகளை ஆண்டு தோறும் அழித்து வருவதால் 200 கோடி டன் கார்பன் சுத்திகரிப்பு தடை படுகிறது.வெளியேறும் கார்பனின் அளவு அதிகமாகவும்,சுத்திகரிப்பு செய்வது குறைவதும் ஆபத்திற்கான அறிகுறிகள்.இதன் காரணமாக உலக வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விளைவு...

அதிக வெப்பம் காரணமாக பனிமலைகள் உருகும். மனிதர்களுக்கு தோல் நோய்கள் உண்டாகும். கால்நடைகள் நோயால் பாதிக்கப் படும். விவசாயத்தில் மகசூல் பாதிக்கப்படும்.. இதன் காரணமாக பூமியின் பசுமை நமக்கு கொடுக்கும் சுகமானது கனவாக போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இதை தடுக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தல் மிகவும் அவசியமாகிறது.

Pit