சனி, 5 பிப்ரவரி, 2011

ஊழல் இடையே நான் கண்ட நேர்மை....

ஊழல்,திருட்டு,பொய்,பிறர் சொத்தை அபகரித்தல் ,இப்படி திரும்பும் பக்கமெல்லாம் ஏதாவது ஒரு செய்தி நம் காதுக்கு வருகிறது.குறிப்பாக ஊழல்.இவையெல்லாம் என்ன என்றே தெரியாமல் அறியா பருவத்தில் நேர்மை ,ஒழுக்கம் இவற்றை மட்டும் பள்ளிகளில் கற்று வரும் நாம் வெளியே வந்ததும் ,நம்மை வழி நடத்தும் இந்த சமுதாயம் இதற்கு எதிர்மறையாக உள்ளது என்பதை தெரிந்து கொள்கிறோம்.
ஊழல்,ஊழல்,ஊழல்.......
முன்பெல்லாம் முறையற்ற வகையில் காரியம் நடக்க லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது.ஆனால் இப்போது நமது காரியம் சரியான முறையில் நடைபெறவேண்டும் என்றால் அதற்கும் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நியதி உருவாகி விட்டது.
ஒரு சாதாரண வேலையில் இருக்கும் அலுவலர் லஞ்சம் வாங்கினால் ,அவரை உடனே கைது செய்யும் நம் நாட்டு சட்டம் ,பல கோடிகளை சுருட்டுபவர்களை விட்டு விடுகிறது.ஒரு நாடு  நன்றாக இருக்க ,தலைமை நன்றாக இருப்பது மிகவும் அவசியம்.
அதுவே சரியில்லை என்றால் நாடு எங்ஙனம் சிறக்கும்?
நேர்மை என்றால் என்ன என்று கேட்கும் நிலை இன்று உருவாகி விட்டது.நேர்மையான தொழிலாளியையும் ,அதிகாரியையும் இன்று காண்பது மிகவும் அரிதாகி விட்டது.இப்படிப்பட்ட ஊழல் நிறைந்த நம் தமிழகத்தில், தன் பணியில் சிறிதும் நேர்மை தவறாத ,'என் கடன் பணி செய்து கிடப்பதே 'என்ற வரிகளுக்கு சரியான உதாரணமாய் வாழ்ந்த,இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ,நான் சந்தித்த ஒரு ஓய்வு பெற்ற பெரியவரை பற்றி சில வரிகள் பகிர விரும்புகிறேன்.மின்சார வாரிய பொறியாளரான அவர் வேறு ஒரு நகரத்திற்கு ,மாறுதல் பெற்று அவ்வூரின் நகராட்சி பொறியாளராக சிறப்பு நியமனத்தில் மூன்று வருடம் பணி செய்ய வந்தார்.அதுவரை லஞ்சத்தில் ஊறி கிடந்த அந்த நகராட்சிக்கு புதிய பொறுப்பில் வந்த நம் பெரியவரை மரியாதை நிமித்தம் சந்திக்க 'அன்பளிப்புடன்' வந்த ஊர் பெரியமனிதர்களும்,அரசியல்புள்ளிகளும் ,அவர் கண்டிப்புடன் மறுத்ததை அதிசயமாக பார்த்து திரும்பினர்.
அதன்பிறகு துரிதகதியில் அவர் செயல்பட்ட விதம் காரணமாக ஒரே ஆண்டில் அவ்வூரில் நிலுவையில் இருந்த அனைத்து மின்வேலைகளும் முடிவு பெற்று ,ஒரு கட்டத்தில் அந்நகரில் அனைத்து தெருவிளக்குகளும் எரியும் நிலையை உருவாக்கினார்.புது இணைப்பு வாங்குபவர்கள் வரிசைப்படி மிகவும் விரைவாக இணைப்பு பெற்றனர் எந்த வித செலவும் (லஞ்சம்) இல்லாமல்.கட்சி பாகுபாடு இன்றி அவர் செயல்பட்டதால் ,அவருடைய மூன்று வருட பணி முடிந்த போது மேலும் இரண்டு வருடம் பணி நீடிப்பு கிடைத்தது.எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் அவர்கள் குறையை உடனே நீக்கிவிடுவார்.
ஆனால் அந்த ஐந்து வருட காலத்தில் அவர் சந்தித்த தொல்லைகள் ஏராளம்.கொலை மிரட்டல் கடிதங்கள் பல வந்தன.அவர் பெண்களை கடத்தி விற்க்கபோவதாகவும்,அவரை மணல் லாரி ஏற்றி கொள்ளபோவதாகவும் தொல்லை கொடுத்தனர்.இரவில் நடக்கும் மின்சார திருட்டுகளை கண்டு பிடித்து ஒழித்தால் பல பெரும்புள்ளிகளுடன் பகை வளர்ந்தாலும் ,நியாயமான முறையில் அவர்களுக்கு மின்சாரம் வழங்கி அவர்களின் அன்பையும் பெற்றார்.
இன்றும் அவருடைய ஐந்து ஆண்டு கால பணியை 'பொற்காலம்' என்று கூறி புகழும் பலரை நான் காண்கிறேன்.இன்றும் அவரை அவ்வூரில் உள்ள மக்கள்  நல்ல மரியாதை கொடுத்து அன்புடன் நடத்துகின்றனர். 
இவ்வளவு நேர்மையுடன் எந்தவித பயமும் இல்லாமல் ,மிகவும் துணிச்சலுடன் பணியாற்றிய அவரை பாராட்டி அவரை ஊக்கப்படுத்த எந்த அரசியல்வாதியும் வரவில்லை.
இப்படி பட்டவர்களை ஊக்கப்படுத்தினால் தானே நாமும் நேர்மையுடன் பணி செய்யலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படும்.ஊழல் நிறைந்த இந்த உலகில் நேர்மைக்கு ஏது மதிப்பு.....

9 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

சிறப்பான பகிர்வு மலர்விழி.

//அவரை பாராட்டி அவரை ஊக்கப்படுத்த எந்த அரசியல்வாதியும் வரவில்லை//

அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை.

malarvizhi சொன்னது…

சரியா சொன்னீங்க ,ராமலக்ஷ்மி.அவங்களுக்கு அந்த தகுதி கிடையாதுன்னு எனக்கும் தெரியும்.ஆனால் இப்படி பட்டவர்களை ஊக்கப்படித்தினால் தானே மற்றவர்களுக்கும் நேர்மையுடன் நடந்து கொள்ள எண்ணம் வரும்...

ராமலக்ஷ்மி சொன்னது…

ஆம் மலர்விழி. அதில் மாற்றுக் கருத்தே இல்லை. மக்கள் தரும் மரியாதையை ஊடகங்களும் தந்து ஊக்கப்படுத்தலாம். அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரலாம். வர வேண்டும்.

malarvizhi சொன்னது…

அதற்காக தான் நான் இதை வலை பக்கத்தில் கொண்டு வந்தேன் .உங்களை போல் ஒரு சிலராவது பகிரும் வரிகள் இது போல் நேர்மையுடன் பணிபுரிபவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.நன்றி.

சுசி சொன்னது…

//அவரை ஊக்கப்படுத்த எந்த அரசியல்வாதியும் வரவில்லை.//

அவரை உயிரோட விட்டுவச்சாங்களே.. அது போதும்ங்க..

SURYAJEEVA சொன்னது…

oozhal enbathu neengal pirantha udan maruththuvamanayil ulla aayaakkalukku kodukkum panaththudan aarambiththu, neengal puthaikkap padum sudugaadu varai paravi irukkirathu...
pazhakki vittargal...
athan aaniverai asaippathil anaivarum eedupada vendum.
nilam vaanguvathil irunthu, veedu kattuvathil irunthu, vandi vaanguvathu varai ingu yaarum lanjame kudukkavillai endru koorinaal avargalukku en vanakkangal....

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
நல்ல அரசு அதிகாரிகள் நிறைய இருக்கிறார்கள்.
ஆனால் ஈரோடு மாவட்ட ஆட்சியரைப் போல் பந்தாடப் படுவார்கள்.
நான் பிராவிடன்ட் பண்ட் பற்றி மூன்று பதிவுகள் எழுதியிருக்கிறேன். நல்ல அதிகாரிகள், நல்ல துறைகள் பற்றி எழுதியிருக்கிறேன்.

rajkumar சொன்னது…

மிகவும் ஊழல் பற்றி பலரும் சொல்லி இருந்தாலும் . நீங்கள் சொல்லி இருக்கும் விதம் நன்றாக இருக்கிறது .
லஞ்சம் வாங்காத அதிகாரிகள் இருகிறார்களா ? இன்று ஆச்சர்யமா இருந்தாலும் .
அவருடைய நேர்மை பாராட்ட பட வேண்டியது

Kanna சொன்னது…

பெருமை கொள்ளத்தக்க அந்த பெரியவருக்கு என் சிறந்தாழ்ந்த வணக்கங்கள்! இவரை போன்ற பெரியோர்களை சிறப்பிக்க காலம் விரைவில் கனியும், இளைய தலைமுறை இவர்களை உதாரணமாக கொண்டு நம் நாட்டை வளப்படுத்துவர்! சிறந்த பதிவிற்க்கு இதையபூர்வமான நன்றி!

Pit