ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மூணாறு
தமிழகத்திற்கு அருகில் கேரளாவை சேர்ந்த மூணாறு, தேயிலை தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் மிகவும் அழகிய நகரம்.  பச்சை போர்வை போர்த்தியது போல் தோன்றும் அழகிய தேயிலை தோட்டங்களும், கண்களை கவரும் பசுமை நிறைந்த மரங்களும் ,வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையும் கண்கொள்ளா காட்சி.
தமிழ்நாடு ,கேரளா எல்லையில் அமைந்துள்ள இந்த அழகிய மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.தமிழகத்தில் போடிநாயக்கனூர் என்ற ஊரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.போடிமெட்டு என்ற இடத்தில தமிழக ,கேரளா எல்லை இருக்கிறது.
மூணாறில் பார்க்கவேண்டிய சில இடங்கள் , மாட்டுப்பட்டி அணை ,  ராஜமலை (இங்கு அபூர்வ வகை மலை ஆடுகளை காணலாம்), ஆனைமுடி ,கொளுக்குமலை தேயிலை தோட்டம்.
கொளுக்குமலை கடல் மட்டத்திலிருந்து 2175 மீட்டர் ( 7150 அடி ) உயரத்தில் உள்ள மிகவும் அழகிய இடம் .வழிநெடுகிலும் தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும் இந்த மலை உச்சியை அடைய தனியாருக்கு சொந்தமான ஜீப்புகள் உள்ளன.மிகவும் கரடுமுரடான அந்த பாதையில் ஜீப்புகளில் தான் பயணிக்க முடியும்.அதிகாலை 4 .30 மணிக்கு புறபட்டால் ஒருமணி நேரத்தில் அந்த இடத்தை அடையலாம்.5 .30 முதல் 7.30  வரை   அங்கே  காத்திருந்தால் ஆறு மணியளவில் சூரிய உதயத்தை கண்டு ரசிக்கலாம்.மூடுபனி இல்லாமல் தெளிவாக இருந்தால் இது ஒரு அற்புதமான அனுபவம்.இந்த மலை தான் உலகிலேயே உயரமான தேயிலை தோட்டம் அமைந்த மலை.இதன் ஒருபுறம் தேனி,கம்பமும் ,மறுபுறத்தில் கேரளாவையும் காணலாம்.

7 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

அழகு. வார்த்தைகள் இல்லை வர்ணிக்க.

malarvizhi சொன்னது…

மிக்க நன்றி...

ராமலக்ஷ்மி சொன்னது…

அத்தனை படங்களும் கொள்ளை அழகு மலர்விழி. அதுவும் பஞ்சுநுரை மேகங்களின் மேல் பகலவன் தோன்றும் காட்சிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

malarvizhi சொன்னது…

மிக்க நன்றி ,ராமலக்ஷ்மி.

Priya சொன்னது…

படங்கள் கொள்ளை அழகு!

Rathnavel சொன்னது…

அருமையான பதிவு.
ஒரே வார்த்தையில், படங்கள் பேசுகின்றன.
எனது மகன் சரவணனுக்கு இந்த பதிவை அனுப்பியிருக்கிறேன். அவனுக்கு புகைப்படம் எடுப்பதிலும், சுற்றுலா செல்வதிலும், மலைப்பிரதேசங்களுக்கு செல்வதிலும் ஆர்வம் அதிகம்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.

michael amalraj சொன்னது…

அனைத்துப் படங்களும்....அழகு...நல்ல ரசனை..!வாழ்த்துக்கள்...சகோதரி!

Pit