ஞாயிறு, 6 ஜூன், 2010

ஊருக்கு போகலாமா!

மசினகுடி

இயற்கை எழில் கொஞ்சும் இந்த அழகிய இடம் தான் இந்த கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.
எங்கு திரும்பினாலும் அடர்ந்த காடுகள்.பச்சை போர்வை போர்த்தியது போல் அழகான மலைத்தொடர்கள் நம் மனதை கொள்ளை கொள்கிறது.

ஆங்காங்கே கண்ணில் படும் வனவிலங்குகள் எங்கள் பயணத்தை மேலும் சிறப்பாக ஆக்கியது.
வெயிலும் நிழலும் மாறி மாறி வருகிறது.

மசினகுடி ஊட்டியிலிருந்து கல்ஹாட்டிவழியாக மைசூர்செல்லும் வழியில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்தில் உள்ளதால் மிதமான குளிர்காற்று வீசி எங்கள் மனதிற்கு இனிமை சேர்த்தது.
மதியம் 1 .00 மணிக்கு தங்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் அதிகாலை 3 .00 மணிக்கு சிதம்பரத்திலிருந்து கிளம்பினோம் .
திருச்சியில் காலை உணவு முடித்துவிட்டு ,கரூர் வழியாக சென்று மதியம் கோபிசெட்டிப்பாளையத்தில் உணவு வாங்கிக் கொண்டு சத்தியமங்கலம் அருகே சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.அடர்ந்த காடு என்பதால் வனவிலங்கு நடமாடும் பகுதி என்று எழுதப்பட்ட பலகைகள் கண்ணில் படுகிறது.ஆகவே வாகனத்தை சற்றே மெதுவாகத்தான் செலுத்தமுடிந்தது.


பண்ணாரி தாண்டியதும் மலைப் பாதை ஆரம்பிக்கிறது .27 கொண்டைஊசி வளைவுகள் தாண்டியதும் கர்நாடக எல்லை நம்மை வரவேற்கிறது.மலைக்கு இந்தப் பக்கம் தமிழகம் .மறுபக்கம் கர்நாடகா.மலை ஏறும்போது வளைந்து நெளிந்து செல்லும் பாதை மறுப்பக்கத்தில் அதிக வளைவுகள் இல்லாமல் ஒரே சீராக இறங்குகிறது.
எங்கும் பசுமை.நேராக சென்ற பாதை சாம்ராஜ் நகர் வந்ததும் இடது பக்கமாகபிரிந்து கொண்டல்பெட் தாண்டி பந்திப்பூர் காட்டுக்குள் நுழைகிறது.அடர்ந்த காடு நம்மை மிரட்டுகிறது.எங்கும் அமைதி.பறவைகளின் சத்தம் மட்டும் கேட்கிறது.ஆங்கங்கே எங்களை கடந்து செல்லும் வாகனங்கள் எங்களுக்கு சிறிது தைரியத்தை கொடுத்தது.அப்போது நேரம் மதியம் 3 மணி..........


தொடரும் .........

12 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

சுற்றுலாவை ரசனையுடன் அனுபவித்திருக்கிறிர்கள்.

malarvizhi சொன்னது…

நன்றி தமிழ் .

SUFFIX சொன்னது…

அழகான ஊர். படங்கள் அருமையா வந்திருக்கு, செல்வதற்கு எளிமையான ரூட்டையும் சொல்லிட்டிங்க, விடுமுறையில் வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும். பகிர்விற்கு நன்றி

மாதேவி சொன்னது…

புதியஇடமாக பசுமையாக இருக்கிறது.
ஊட்டி மைசூர்வந்திருக்கிறேன்.

Ilavazhuthi சொன்னது…

all the photos are very nice. the way you experessed is so good.

சுசி சொன்னது…

அழகான படங்கள்.. கண்ணுக்கு குளிர்ச்சியா..

27 கொண்டை ஊசி வளைவுதான் கொஞ்சம் மிரட்டுது..

அண்ணாமலையான் சொன்னது…

மிக அழகான படங்கள்...

வாய்ப்பாடி குமார் சொன்னது…

ஊட்டி போயே போக வேண்டியதுதானே ? அதுக்கு எதுக்கு இந்தச் சுத்து சுத்தி !கர்நாடகா போயி மறுக்கா தமிழ் நாட்டுக்குள்ள வந்து , போற வழி பூரா காடுதான் . இருந்தாலும் ஊட்டி வழியா போறதுதான் நல்லது.

malarvizhi சொன்னது…

ஆமாம் , ஊட்டி வழியாக செல்வது எளிதானது தான்.நாங்கள் பந்திப்பூர் ,பன்னாரி போகவேண்டும் என்பதால் அப்படி போய் விட்டு வரும் போது ஊட்டி வழியாக வந்தோம்.

ஷர்புதீன் சொன்னது…

இந்த மாதிரியான சாகச சுற்றுலாக்கள் போக வேண்டும் என்பது எனது கனவு., ஆனால் எனக்கு வாய்த்த நண்பர்களோ நேராக ஊட்டி போய் அங்கேயே "எல்லாம்" சாப்பிட்டு நேராக வரக்கூடிய நண்பர்கள் ., இவர்களை வைத்து நான் என்ன செய்ய ....
எழுதுங்கள்., அடுத்த முறை போக வேண்டி வந்தால் இந்த மாதிரி வகுத்து கொள்கிறேன்
--

சி. கருணாகரசு சொன்னது…

படங்களனைத்தும் அழகிய மிரட்டல்....
பகிர்வுக்கு நன்றி.

Rathnavel சொன்னது…

அற்புதம்.

Pit