செவ்வாய், 18 மார்ச், 2014

ஒருத்தியின் பார்வையில்


ஸ்ரீ  ராமனின்  பாதையில்  ஒரு புனித பயணம்.

    நற்குணங்களில் தலை சிறந்த குணம் , உயர்வு தாழ்வு கருதாமல் எல்லோரிடத்தும் எளிமையாக பழகுவது ..நம்மில் எத்தனை பேர் நம் நிலையிலிருந்து சற்று குறைவானவர்களுடன் சமமாக பழகுகிறோம். ஒருவரது உடையையும் , உடலையும் வைத்து மதிப்பிடாமல் ஸ்ரீ ராமனை போல் அவர்களது நல்ல உள்ளதை நோக்க வேண்டியது அவசியம்..அதுவே உண்மையான , உயர்வான பண்பு..ஸ்ரீ ராமன் ஒரு சக்ரவர்த்தியின் மகனாக இருந்தாலும் ஒரு வேடனான குகனை உற்ற தோழனாகவும், ராவணனின் தம்பியான அரக்கன் விபீஷணனை தனது தம்பியாகவும் ஏற்று கொண்டு ,அந்த  அன்போடு கலந்து மகிழ்ந்தார். என்னே ஒரு சிறந்த பண்பு இது என வியக்க வைக்கிறது..அன்னாரின் வழி நோக்கின் ஒருத்தரின் பிறப்பு, கல்வி, செல்வம் மற்றும் புற அழகு வைத்து அவர்களை எடை போடுவது தவறு.அவர்களின் உயர்ந்த உள்ளம் கண்டு அவர்களிடம் இனிமையாக பழகுவதே மிக சிறந்த பண்பு.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

சுயநலம்







''எனக்கு நானே நன்மை செய்து கொண்டு மோட்சத்தை அடைவதை விட ,மற்றவர்களுக்கு நன்மை செய்து ,அதனால் ஆயிரம் நரகங்கள் கிடைக்குமானாலும் அங்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன்.--சுவாமி விவேகானந்தர் ''

சுயநலம் வேண்டாம் ,நண்பர்களே ! நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவலாமே!
இவ்வுலகில் கஷ்டங்களும் ,துயரங்களும் இல்லாத மனிதன் இல்லை...ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வித கஷ்டம் இருக்கத்தான் செய்யும்.கடவுளுக்கு தெரியும் யாருக்கு எவ்வளவு கஷ்டம் கொடுக்க வேண்டும் என்று...ஒருவனால் எவ்வளவு சுமைகள் தாங்க முடியும் என்பது தெரிந்து தான் அவனுக்கு பொறுப்புகளையும் சுமைகளையும் கடவுள் நிர்ணயிப்பார்.
.பாரம் என்பது தேடி பெற்று கொள்வதில்லை.தானாகவே வருவது..தானாக விரும்பிச் சுமப்பதற்குப் பெயர் சுமை அல்ல. சுகம். அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒன்றுதான்..எனக்கு தான் கஷ்டங்கள் அதிகம் என்று யாரும் எண்ண வேண்டாம்.நம்மை விட அதிக கஷ்டங்கள் உடலாலும் உள்ளதாலும் பல பேருக்கு உண்டு ...அதை பார்த்து நாம் நன்றாகவே இருக்கிறோம் என்று சந்தோஷபட்டுக் கொள்வோம்.இருப்பதை வைத்து முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்வோம்.வரும் போதும் வெறும் கையுடன் வந்த நாம் போகும் போதும் அப்படி தான் போகிறோம்....இடையில் ஏன் இவ்வளவு பேராசைகள் ,மனிதனுக்கு....?

ஒருத்தியின் பார்வையில்.... முக புத்தகம்





























இது வெட்டி கதைகளுக்கும் ,வம்புகளுக்கும் மட்டும் தான் என்று பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது .. அது முற்றிலும் தவறானது என்பது என்னுடைய வாதம்...யாரையும் புண்படுத்தும் நோக்கில் நான் இது கூறவில்லை.

தேசங்கள் கடந்த நட்புக்கள் ....முகம் தெரியாத சகோதர ,சகோதரிகள்,....மொழி பாகுபாடு இல்லாத உறவுகள், மதங்களில் பிரிவினை இல்லாத பாச பிணைப்புகள்.....இப்படி சொல்லி கொண்டே போகலாம்...இது அனைத்தும் இங்கு மட்டுமே சாத்தியமாகிறது .

நம் சந்தோஷங்கள் ,துக்கங்கள்,பண்டிகைகள் ,விழாக்கள் அனைத்தையும் வெளிபடுத்த ஒரு சின்னஞ்சிறு உலகம் இந்த பரந்த வலைத்தளத்தில். ..

ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் எதாவது ஒரு தனி தன்மை இருக்கும்....பல நேரங்களில் அதை அவர்களுக்கு
வெளிபடுத்த வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.பல பேருக்கு குடும்பசூழ்நிலைகள் காரணமாக திணிக்கப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றும் சூழ்நிலை உருவாவது தவிர்க்க முடியாததாகிறது..இதனால் நாம் நம் தனிப்பட்ட தாகத்துக்கு தீனி போடுவது இல்லை.... .நமது தனித் தன்மைகள் ,திறமைகள்,ஆர்வங்கள் வெளிப்படுத்த நமக்கு கிடைத்த ஒரு வரப்ரசாதம் இந்த முகபுத்தகம்..

இல்லாதவர்களுக்கும்,கஷ்டபடுபவர்களுக்கும் உதவி செய்ய நினைக்கும் என்னை போன்ற சமூக ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல தடம்.. சில நாட்களுக்கு முன் இதே இடத்தில ஒரு நண்பர் பண உதவி கேட்டு வேண்டினார் தன்னுடைய நெருங்கிய நட்புக்கு....இப்படி பலபேருக்கு இதன் மூலம் பல நல்ல உதவிகள் கிடைக்கபெருகிறது.... நான் செல்லும் ஒரு காப்பகத்திற்கு உதவ சில நல்ல உள்ளங்கள் இங்கு கிடைத்திருப்பது வாழ்வில் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்....அந்த நல்ல உள்ளங்கள் செய்ய போகும் உதவிகள் சில ஏழை குழந்தைகளின் வாழ்வில் மகிழ்ச்சியை உண்டாக்கட்டும்...இது போன்ற உதவிகள் மேலும் கிடைக்கட்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

முக புத்தகம் வெட்டி கதைகளுக்கு மட்டும் அல்ல..!!!!!!!!!!
 

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

ஒருத்தியின் பார்வையில்....சுய ஆலோசனை ....:)







சுய  ஆலோசனை ....

நம்மில் எத்தனை பேர் சுய ஆலோசனை செய்கிறோம்..
அடுத்தவரை  குறை கூறும் நாம் சற்று நிறுத்தி நம்மை நாமே சுய ஆலோசனை செய்து கொள்கிறோமா ? அடுத்தவர்  முகத்தை நோக்கி குற்றம் கூற  நீட்டும் அதே கையை சற்றே நம்  பக்கம் திருப்பி பார்க்கிறோமா ?
இல்லையே....

"ஏதிலார் குற்றம் போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு."

அயலாரின் குற்றங்களை காண்பது போலவே  தம்முடைய குற்றங்களையும் காண்பாரானால் நிலை பெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ ?

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் உடனே உண்டு,அது நன்மையோ அல்லது தீமையோ...:)  இன்று நாம் செய்யும் பாவ மூட்டைகளை சுமக்க போவது நம்முடைய குழந்தைகள் தான் என்பதை மறக்க கூடாது...   போட்டி , பொறாமை , துர் எண்ணங்கள் உடையவர்கள் நிம்மதியாய் இருந்ததாய் அல்லது வாழ்க்கையில் முன்னேரியதாய் வரலாறே கிடையாது.

எந்த பிரச்சனை வந்தாலும் வார்த்தைகளை விடாமல் இருப்பதே நல்லது. அது அடுத்தவரை எவ்வளவு காயப்படுத்தும் என்று யோசிக்க வேண்டும். ஏனெனில்  "நெல்லை கொட்டினால் அள்ளி விடலாம் சொல்லை கொட்டினால் அள்ள இயலாது". நாம்  கூறிய வார்த்தைகள் சாகும் வரை மறக்காது.
இந்த உலகில் யாருமே முழுமையான மனிதராக இருப்பதில்லை எல்லோரிடமும் எதாவது ஒரு குறை இருக்கும்.இயன்றவரை முழுமையான மனிதராக வாழ முயற்சிக்கலாம்.
..
. எப்போதும் நல்ல எண்ணங்களையே வைத்திடுங்கள்.மனதை சுத்தமாக பொலிவுடன் வைத்திடுங்கள். விரோதிக்கும் நம்மையே செய்யுங்கள். அனைவரிடத்திலும் கருணை காட்டுங்கள்.முன்னால் சிரித்து பின்னால் குத்தாதீர்கள்..
துப்பாக்கி தோட்டாக்கள் உயிரை கொல்லும்...நெருப்பு நம்முடைய உடலை அழிக்கும்..கடும் வார்த்தைகள் மனதை காயப்படுத்தும்....ஆனால் அழகான புன்னகை இன்பத்தை மட்டுமே கொடுக்கும்
சின்னதாக ஒரு புன்னகை ,அன்பாக இரண்டு வார்த்தைகள் வெளிப்படுத்தி பாருங்கள் ...இவ்வுலகமே உங்கள் காலடியில்...:):):)

Pit