செவ்வாய், 18 மார்ச், 2014

ஒருத்தியின் பார்வையில்


ஸ்ரீ  ராமனின்  பாதையில்  ஒரு புனித பயணம்.

    நற்குணங்களில் தலை சிறந்த குணம் , உயர்வு தாழ்வு கருதாமல் எல்லோரிடத்தும் எளிமையாக பழகுவது ..நம்மில் எத்தனை பேர் நம் நிலையிலிருந்து சற்று குறைவானவர்களுடன் சமமாக பழகுகிறோம். ஒருவரது உடையையும் , உடலையும் வைத்து மதிப்பிடாமல் ஸ்ரீ ராமனை போல் அவர்களது நல்ல உள்ளதை நோக்க வேண்டியது அவசியம்..அதுவே உண்மையான , உயர்வான பண்பு..ஸ்ரீ ராமன் ஒரு சக்ரவர்த்தியின் மகனாக இருந்தாலும் ஒரு வேடனான குகனை உற்ற தோழனாகவும், ராவணனின் தம்பியான அரக்கன் விபீஷணனை தனது தம்பியாகவும் ஏற்று கொண்டு ,அந்த  அன்போடு கலந்து மகிழ்ந்தார். என்னே ஒரு சிறந்த பண்பு இது என வியக்க வைக்கிறது..அன்னாரின் வழி நோக்கின் ஒருத்தரின் பிறப்பு, கல்வி, செல்வம் மற்றும் புற அழகு வைத்து அவர்களை எடை போடுவது தவறு.அவர்களின் உயர்ந்த உள்ளம் கண்டு அவர்களிடம் இனிமையாக பழகுவதே மிக சிறந்த பண்பு.

2 கருத்துகள்:

வெற்றிவேல் சொன்னது…

ராமன் மிகச்சிறந்த மனிதராக இருந்தாலும் ராவணனின் தங்கையை மானபங்க படுத்தியது, வாலியைக் கொன்ற விதம், ராவணனின் தம்பியின் மூலமே ராவணனின் பலம் பலவீனம் அறிந்து கொண்ட அவரது செயல்கள் அவரது செயல்கள் அவர் மீதான மதிப்பை குலைக்கிறது

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

வலைச்சர தள இணைப்பு : வலைப்பூக்கள் பலவிதம்

Pit