திங்கள், 23 நவம்பர், 2009
தஞ்சை பெரிய கோயில் - சில வரிகள்
தஞ்சை பெரிய கோவிலில் இப்பொழுது இருக்கும் நந்தி சோழ மன்னன் ராஜராஜன் கட்டியது இல்லை என்பது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் . அது நாயக்கர் காலத்தில் உருவாக்க பட்டது . ராஜராஜன் கட்டிய நந்தி இப்பொழுது இருக்கும் நந்திக்கு நேர் தெற்கு பக்கத்தில் திருச்சுற்று நடைமாளிகையில் இன்றும் உள்ளது . இது அளவில் சற்று சிறியதாக இருக்கும் .
இந்த கோவிலின் உட்புறம் உள்ள அம்மன் கோயில் , முருகன் சந்நிதி , கருவூரர் சந்நிதி , வராகிகோயில் , விநாயகர் கோயில் இவை அனைத்தும் ராஜராஜ சோழன் கட்டாதவை . பெரியகோயில் , சண்டிகேஸ்வரர் கோயில் , திருச்சுற்று நடைமாளிகை , இரண்டு கோபுரங்கள் மட்டுமே ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டவை .
பெரியகோயில் கி .பி 1004 இல் ஆரம்பித்து கி .பி 1010 இல் கட்டிமுடிக்கப்பட்டது . இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உள்ளது . 216 அடி உயரத்தில் மலைபோல அமைந்திருப்பதால் ராஜராஜனால் தட்சிணமேரு என்று பெயரிடப்பட்டது .
இந்த கோயிலை உருவாக்கிய தச்சன் வீரசோழன் குஞ்சர மல்லனான இராசராசப் பெருந்தச்சன் ஆவான் .
ராஜராஜனை பற்றி சில வரிகள் :
தாய் -- வானவன் மாதேவி
தந்தை -- சுந்தரசோழன்
பிறந்த நாள் -- ஐப்பசி , சதயம்
முடி புனைந்த நாள் -- 25 .6. 985
ஆண்ட காலம் -- கி . பி 985 - 1014
பட்டத்தரசி -- உலகமாதேவி
மக்கள் -- ராஜெந்த்ரசோழன்
ஆளவந்தான்
மாதேவடிகள்
குந்தவை
கங்கமாதேவி
சகோதரி -- குந்தவை பிராட்டியார்
சகோதரன் -- ஆதித்த கரிகாலன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
9 கருத்துகள்:
//தஞ்சை பெரிய கோவிலில் இப்பொழுது இருக்கும் நந்தி சோழ மன்னன் ராஜராஜன் கட்டியது இல்லை என்பது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் .//
எனக்கு புதிய செய்தி
பகிர்வுக்கு நன்றிங்க
தஞ்சை பெரிய கோவில், என்னுடைய விருப்பமான கோவில். அக்கோயிலைப்பற்றி மேலும் தகவல் இருந்தால் பகிருங்களேன்....
மிக நல்ல தகவல் பரிமாற்றம் பழைய நந்தி குறித்த சேதி நிறைய பேருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை
நன்றி
நல்ல பகிர்வு.... புதிய தகவல்கள்.
best wishes
பகிர்வுக்கு நன்றி......
நல்ல பகிர்வு....
புதிய தகவல்கள்
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக