சில நாட்களுக்கு முன் தொலைகாட்சியில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிய பொழுது ஒரு தொடர் என்னை இந்த கருத்து தெரிவிக்க தூண்டியது . அந்த காட்சியில் தொடரின் முக்கிய கதாபாத்திரத்திற்கு புது எதிரி உருவாகியுள்ளான் . அவனை நாயகியின் பழைய எதிரி சந்திக்கிறான் . அவன் தான் எப்படி அவள் குடும்பத்தால் பாதிப்படைந்தான் என்பதை மிகவும் கோபத்துடன் தெரிவிக்கிறான் . அவனிடம் புதிய எதிரி " உன் கண்ணில் நான் பழிவாங்கும் வெறியை பார்க்கிறேன் . நீ சொல்வது உண்மைதான் . உன்னை நான் நம்புகிறேன் ", என்று கூறி அவனுடன் கூட்டு சேர்கிறான் . கடவுளே !!!! . இன்னும் எத்தனை தொடர்கள் தான் இப்படி பழி வாங்கி கொண்டே போவார்கள் . தொடர்களை பார்ப்பதை நான் அடியோடு நிறுத்தியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் . எத்தனை குழந்தைகள் இந்த தொடர்களை பார்கின்றனர் . அவர்கள் மனதில் இந்த விஷ வித்துக்கள் விழ நாம் ஏன் வழிகாட்ட வேண்டும் . நல்ல கருத்துக்கள் நாட்டில் எவ்வளவோ உள்ளது . அதை எல்லாம் தொடர்களில் கூறலாமே . அதை விட்டு விட்டு பழிவாங்குவதும் , கொலைசெய்ய தூண்டுவதும் , குடும்பத்தை பிரிப்பதும் , சதி திட்டம் தீட்டுவதும் ... அப்பப்பா ... போதும் ... தொடரை தயாரிபவர்கள் இனியாவது இதை நிறுத்தினால் நல்லது . ஏற்கனவே நாட்டில் வன்முறை அதிகரித்து விட்டது . வரும் தலைமுறையையாவது நாம் இதிலிருந்து காப்பாற்றலாமே .
பெற்றோர்களே ! தயவு செய்து குழந்தைகளுக்கு நல்ல கருத்துள்ள விஷயங்களை மட்டும் பார்க்க அனுமதியுங்கள் .
6 கருத்துகள்:
kallanai photo migavum arumai
sorry for tamilnglish
உங்க கருத்துக்களோட நான் முழுமையா ஒத்துப் போறேன்.
நானும் சீரியல் பாக்கிறதில்ல. அதனால என் பசங்களும் பாக்கிறதில்ல.
ஆனா இங்க வெளிநாடுகள்ள தனியா இருக்கிற எத்தனையோ வயதானவங்களுக்கு அது ஒண்ணுதான் துணை... என்ன செய்ய?
ஒரு வேண்டுகோள். சொல் பரிபார்ப்பை எடுத்து விடலாமே :))
சரியாக சொன்னீர்கள், தயாரிப்பாளர்களின் பொறுப்பற்ற, வியாபார நோக்கம், சமுதாயத்தைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் இது போன்ற வன்முறைக் காட்சிகளை காட்டுகிறார்கள். உறவுகளின் எதிர்மறையாகவே காட்டுவதும் இது போன்ற சீரியல்களின் தன்மையாக இருக்கிறது. சீரியல்களை புறக்கனிப்பதே நல்லது.
அப்ப நீங்க சீரியல் பாத்தீங்க..?
"சில நாட்களுக்கு முன் தொலைகாட்சியில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிய பொழுது ஒரு தொடர் என்னை இந்த கருத்து தெரிவிக்க தூண்டியது" நண்பர் அண்ணாமலையான் கவனிக்க வில்லையா ? அந்த காட்சி கண்ணில் பட்டதால் தானே இதை எழுதினேன். கடந்த மூன்று வருடங்களாக சீரியல்களே பார்ப்பதில்லை. ஆனால் வடிவேலு காமெடி பார்த்து மனம் விட்டுசிரிப்பேன்.
ஆக நீங்க நன்றி சொல்ல வேண்டியது டிவிக்கு.. ஓகே? (3 வருஷம் முன்னாடி பாத்தீங்களே?)reply
கருத்துரையிடுக