திங்கள், 30 நவம்பர், 2009
பெரிய கோவில் - மேலும் சில தகவல்கள்
நம் தோழி ரசனைக்காரியின் விருப்பத்திற்கு இணங்கி தஞ்சை
பெரிய கோவிலை பற்றி நான் படித்து அறிந்தவற்றில்
மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் என நினைக்கிறேன் . அது என்னவோ
தெரியவில்லை , இக்கோவில் என்றால் எனக்கு அப்படி
ஒரு பரவசம் ஏற்படுகிறது . நான் படித்த நூல்களில்
மிகவும் அதிகமாக இடம் பெறுவது பெரிய கோவிலையும்,
ராஜராஜனை பற்றியும் தான் .
தஞ்சை பெரிய கோவில் என்றும் , ராஜராஜீச்சரம்
என்றும் அழைக்கப்படும் இக்கோவில் வடமொழியில்
பிரகதீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படுகிறது .
தஞ்சையில் சிறிய கோட்டை வளாகத்துள் சிவகங்கை
குளம் , பூங்கா இவற்றிற்கு அருகே கோவில் உள்ளது .
கோட்டைக்கு வெளியே அகழி உள்ளது . கோட்டை ,
அகழி இரண்டும் 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால்
கட்டப்பட்டது .
இக்கோவிலில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது . 5
அடுக்குடன் உள்ள முதல வாயில் " கேரளாந்தகன்
திருவாயில் " எனப்படும் . கி . பி 988 இல் கேரளா
மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி
பெற்றதால் அப்போரின் நினைவாக ராஜராஜன் இப்பெயரை
வைத்தான் என கல்வெட்டு குறிப்புகள் தெரிவிகின்றன .
இரண்டாவது வாயில் 3 அடுக்குடன் உள்ள " ராஜராஜன்
திருவாயில் " ஆகும் .
மதிலின் உள்புறம் நான்கு திசைகளிலும் திருச்சுற்று
மண்டபம் உள்ளது . இது ராஜராஜன் காலத்தில் இரண்டு
தளத்துடன் இருந்து பின்னாளில் அழிந்து ஒரே ஒரு
தளத்துடன் தற்போது காட்சி தருகிறது .
இக்கோவில் விமானத்தின் நிழல் தரையில் விழாது
என்பது தவறான செய்தி .
விமான உச்சியில் உள்ள பிரமரந்திரதளம் ஒரே
கருங்கல்லினால் ஆனது . அது 25 1/2 அடி சதுரம்
உடையது . எடை 80 டன் என்பர் . இதனை தஞ்சைக்கு
நான்கு மைலுக்கு அப்பால் உள்ள சாரப்பள்ளம்
என்ற கிராமத்திலிருந்து சாரம் கட்டி இச்சிகரத்தில்
ஏற்றினார்கள் என்றும் அதனால் தான் அவ்வூருக்கு
சாரப்பள்ளம் என்று பெயர் வந்ததாக கூறுவர் .
பொற் கோவிலாக திகழ்ந்த பெரியகோவில் :
216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம்
முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப்
பட்டு திகழ்ந்தது . ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின்
மேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல்
மாலிக்கபூரின் படையெடுப்பின் போது
சூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை
காண முடியவில்லை .
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில்
திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில்
தான் என்பது வரலாற்று உண்மை .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
இக்கோவில் விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது
தவறான செய்தி .///
ஓ..
பல புதிய தகவல்கள்...
மிக்க நன்றி மலர்விழி அவர்களே...
புதிய பல தகவல்கள் மலர்விழி...
BalaKumaran avarkalin Udaiyar novel padithu varirkala??
நம் தோழி ரசனைக்காரியின் விருப்பத்திற்கு இணங்கி "
எங்கே அவங்கள கானோம்? போட்டோ நீங்க எடுத்ததா?
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக