கங்கை கொண்ட சோழபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கங்கை கொண்ட சோழபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 6 பிப்ரவரி, 2010
கங்கை கொண்ட சோழபுரம்
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்
கி .பி 1014 முதல் 1042 வரை ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தான். அவன் தன் தலைநகரை தஞ்சையிலிருந்து மாற்றினான். இப்பொழுது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரை உடைய
நகரை உண்டாக்கி அதையே தலைநகராகக் கொண்டான். அவன் காலத்திலும் ,
அவன் காலத்திற்கு பிறகு சோழர்களின் இறுதி வரை இந்நகரமே அவர்களின் தலைநகரமாக விளங்கியது.
அக்காலத்தில் இந்நகரம் நான்கு மைல் சதுர அமைப்புடன் இருந்ததாக தெரிகிறது.
கோயிலுக்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிரகதீசர் தீர்த்த குளம் இன்றும் உள்ளது. பரணைமேடு என்னும் , கோயிலுக்கு ஏழு மைல் தொலைவில் உள்ள சிற்றூரிலிருந்து பருத்தி மூட்டைகளை அடுக்கி பரணை கட்டி விமானக் கல் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. ராஜேந்திரன் தஞ்சை கோயிலை பின்பற்றியே இக்கோவிலைக் கட்டினான் . சுவாமியின் பெயர் பிரகதீசுரர் . அம்பிகையின் பெயர் பிரகநாயகி.
இக்கோவில் கும்பகோணம் , சிதம்பரம் இரண்டுக்கும் இடையில் உள்ளது.
இக்கோவில் ராஜேந்திரனின் வடநாட்டு வெற்றிகள் முடிந்ததும் கி. பி 1025 இல் தொடங்கப்பட்டது.
கோவிலின் திருமதில் 600 அடி நீளமுடையது. அகலம் 450 அடி. இரண்டு அடுக்கு திருச்சுற்று மாளிகையின் ஒரு பகுதி மட்டுமே இப்போது காணப்படுகிறது. கோவிலின் நீளம் 350 அடி. அகலம் 110 அடி .
இறைவன் சந்நிதியின் மேல் உள்ள விமானம் 186 அடி உயரமாகும். சுவாமியின் லிங்க திருமேனி மிகவும் பெரியதாகும். லிங்கத்தின் உயரம் 13 அடி. பீடம் 30 முழம் சுற்றளவுடையது.
இக்கோவில் சோழர்கால கோவில்கள் அனைத்திலும் , அழகிலும் , சிற்ப திறனிலும் தனி தன்மையுடன் விளங்கியதாக தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


