குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் சில தகவல்கள் உண்டு.
இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என சிலர் எழுதியுள்ளனர் . ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய குமரிக்கண்டம் சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால் அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து.
தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூல்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. நூல்களில் குறிப்பிட்டுள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிருபிக்கப்படவோ , மறுக்கப்படவோ இல்லை.
8 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றிகள்
உண்மைதான் இலெமூர் என்னும் குரங்குகள் அங்கு வாழ்ந்ததால் இலெமூரியா என்று பெயர்பெற்றதாகவும் கருதுவர்..
உங்களின் நல பதிவுக்கு நன்றி
மலர்விழி, தமிழ்மணத்தில் சேந்திட்டீங்களா?
வலையுலகிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியா இருக்கு.
நல்லா இருக்கு!
தமிழ் சங்கங்கள் பற்றியது உண்மையானது.
முனைவர்.இரா.குணசீலன் சொன்னது என்னால் ஏற்க முடியவில்லை.
''லெமூரியா'' என பெயரிட்டது ஒரு ஆராச்சியாலர்தான். ஆனால், அங்கு அந்த குரங்கிருந்தமைக்காயில்லை.
அன்புள்ள தோழிக்கு,
என் முதற்கண் வணக்கங்கள். உங்கள் படைப்புக்கள் அருமை. குமரிகண்டம் பற்றிய மேலும் சில தகவல்கள் இங்கே என் நண்பனின் தொகுப்பில்
http://sooriyank.blogspot.com/2009/11/blog-post_16.html
நன்றி...
இவன்,
தஞ்சை.வாசன்.
முற்றிலும் உண்மை.அறிவியல் வழிப்படி, தாவரம் மற்றும் குரங்கு வகை இனங்கள் தென்தமிழ் நாடு,ஆப்ரிக்காவின் கிழக்குபகுதி உள்ளவையுடன் தொன்மையில் உள்ள கூறுடன் ஒத்துபோகின்றன.
கருத்துரையிடுக