ஞாயிறு, 15 நவம்பர், 2009
கல்லணை கால்வாயில் நான் எடுத்த சில படங்கள்
கல்லணை ஈன்ற கடைசிப் பெண்ணாய்
நல்லுருப் பெற்ற கல்லணைக் கால்வாய்
வளைந்து நெளிந்து வயல்கள் நிறைத்து
களிப்புடன் தஞ்சை நகரில் நுழைந்து
புதிய ஆறாய் புகழினை சேர்த்து
அதிநிறை விழைவில் காத்து நின்ற
ஒரத்த நாடு பட்டுக் கோட்டை
பரந்த நிலத்தில் பாசம் பொழிந்து
சிறுத்து இளைத்து நீர்மை குன்றிட
நிறைந்த ஆர்வப் பெருக்கில் நின்ற
கடைமடைப் பேரா வூரணி மற்றும்
படுதுயர் உற்ற நாகுடிப் பகுதி
தடையறு நீரினை பெற்றுச் செழிக்க
எடுத்து மிகுநீர் வரும்நாள் என்றோ ?
என் தந்தையின் இக்கவிதை என்று நிஜமாகும் ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
நல்லதொரு இலக்கிய நடையில்
நம் கல்லணையை பற்றி
நயமுடன் ஒரு கவிதை!..
நன்றி உங்கள் தந்தைக்கு!...
படங்கள் அருமை. தந்தையின் கவிதை வெகு அருமை. அவர் கனவு நினைவாகுமென நம்புவோம்.
ஆஹா...கரிகாலனின் கல்லணை
2005 நவம்பரில் அரியலூரில் நாங்கள் வந்த ரயில் நின்று விட்டது. அங்கிருந்து தஞ்சாவூர் வந்து தங்கியிருந்து பேருந்தில் மதுரை கிளம்பினோம். அப்போது கொள்ளிடம் காவேரி மற்றும் நிறைய நீர்நிலைகளை கண்டோம். எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த காட்சியை காண முடியாது. விருதுநகர் மாவட்டக்காரர்களாகிய எங்களுக்கு அவ்வளவு நீர் வரத்தை பார்க்க கொடுத்து வைத்திருந்தது.
அரியலூரில் ரயில் நிலையத்தில் ரொட்டிக்காக எல்லோரும் வரிசையில் நின்றோம். ஏழை பணக்காரர் என்ற மனப்பாவம் அன்றே ஒழிந்தது.
வாழ்த்துக்கள் அம்மா.
சில வருடங்களுக்கு முன்...நவக்கிரகக் கோவிலுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.....காவேரிக் கறையோரமாகப் பயணம்...வறட்சியாக காய்ந்துபோய்....! தி.ஜானகிராமனின் காவேரியா இப்படி..மனம் வலித்தது.....
கருத்துரையிடுக