திங்கள், 30 நவம்பர், 2009

பெரிய கோவில் - மேலும் சில தகவல்கள்




நம் தோழி ரசனைக்காரியின் விருப்பத்திற்கு இணங்கி தஞ்சை

பெரிய கோவிலை பற்றி நான் படித்து அறிந்தவற்றில்

மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து

கொள்ளலாம் என நினைக்கிறேன் . அது என்னவோ

தெரியவில்லை , இக்கோவில் என்றால் எனக்கு அப்படி

ஒரு பரவசம் ஏற்படுகிறது . நான் படித்த நூல்களில்

மிகவும் அதிகமாக இடம் பெறுவது பெரிய கோவிலையும்,

ராஜராஜனை பற்றியும் தான் .



தஞ்சை பெரிய கோவில் என்றும் , ராஜராஜீச்சரம்

என்றும் அழைக்கப்படும் இக்கோவில் வடமொழியில்

பிரகதீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படுகிறது .



தஞ்சையில் சிறிய கோட்டை வளாகத்துள் சிவகங்கை

குளம் , பூங்கா இவற்றிற்கு அருகே கோவில் உள்ளது .

கோட்டைக்கு வெளியே அகழி உள்ளது . கோட்டை ,

அகழி இரண்டும் 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால்

கட்டப்பட்டது .


இக்கோவிலில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது . 5

அடுக்குடன் உள்ள முதல வாயில் " கேரளாந்தகன்

திருவாயில் " எனப்படும் . கி . பி 988 இல் கேரளா

மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி

பெற்றதால் அப்போரின் நினைவாக ராஜராஜன் இப்பெயரை

வைத்தான் என கல்வெட்டு குறிப்புகள் தெரிவிகின்றன .


இரண்டாவது வாயில் 3 அடுக்குடன் உள்ள " ராஜராஜன்

திருவாயில் " ஆகும் .



மதிலின் உள்புறம் நான்கு திசைகளிலும் திருச்சுற்று

மண்டபம் உள்ளது . இது ராஜராஜன் காலத்தில் இரண்டு

தளத்துடன் இருந்து பின்னாளில் அழிந்து ஒரே ஒரு

தளத்துடன் தற்போது காட்சி தருகிறது .

இக்கோவில் விமானத்தின் நிழல் தரையில் விழாது

என்பது தவறான செய்தி .


விமான உச்சியில் உள்ள பிரமரந்திரதளம் ஒரே

கருங்கல்லினால் ஆனது . அது 25 1/2 அடி சதுரம்

உடையது . எடை 80 டன் என்பர் . இதனை தஞ்சைக்கு

நான்கு மைலுக்கு அப்பால் உள்ள சாரப்பள்ளம்

என்ற கிராமத்திலிருந்து சாரம் கட்டி இச்சிகரத்தில்

ஏற்றினார்கள் என்றும் அதனால் தான் அவ்வூருக்கு

சாரப்பள்ளம் என்று பெயர் வந்ததாக கூறுவர் .



பொற் கோவிலாக திகழ்ந்த பெரியகோவில் :

216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம்

முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப்

பட்டு திகழ்ந்தது . ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின்

மேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல்

மாலிக்கபூரின் படையெடுப்பின் போது

சூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை

காண முடியவில்லை .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில்

திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில்

தான் என்பது வரலாற்று உண்மை .

வெள்ளி, 27 நவம்பர், 2009

சின்னத்திரை சீரியல்கள்

சில நாட்களுக்கு முன் தொலைகாட்சியில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிய பொழுது ஒரு தொடர் என்னை இந்த கருத்து தெரிவிக்க தூண்டியது . அந்த காட்சியில் தொடரின் முக்கிய கதாபாத்திரத்திற்கு புது எதிரி உருவாகியுள்ளான் . அவனை நாயகியின் பழைய எதிரி சந்திக்கிறான் . அவன் தான் எப்படி அவள் குடும்பத்தால் பாதிப்படைந்தான் என்பதை மிகவும் கோபத்துடன் தெரிவிக்கிறான் . அவனிடம் புதிய எதிரி " உன் கண்ணில் நான் பழிவாங்கும் வெறியை பார்க்கிறேன் . நீ சொல்வது உண்மைதான் . உன்னை நான் நம்புகிறேன் ", என்று கூறி அவனுடன் கூட்டு சேர்கிறான் . கடவுளே !!!! . இன்னும் எத்தனை தொடர்கள் தான் இப்படி பழி வாங்கி கொண்டே போவார்கள் . தொடர்களை பார்ப்பதை நான் அடியோடு நிறுத்தியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் . எத்தனை குழந்தைகள் இந்த தொடர்களை பார்கின்றனர் . அவர்கள் மனதில் இந்த விஷ வித்துக்கள் விழ நாம் ஏன் வழிகாட்ட வேண்டும் . நல்ல கருத்துக்கள் நாட்டில் எவ்வளவோ உள்ளது . அதை எல்லாம் தொடர்களில் கூறலாமே . அதை விட்டு விட்டு பழிவாங்குவதும் , கொலைசெய்ய தூண்டுவதும் , குடும்பத்தை பிரிப்பதும் , சதி திட்டம் தீட்டுவதும் ... அப்பப்பா ... போதும் ... தொடரை தயாரிபவர்கள் இனியாவது இதை நிறுத்தினால் நல்லது . ஏற்கனவே நாட்டில் வன்முறை அதிகரித்து விட்டது . வரும் தலைமுறையையாவது நாம் இதிலிருந்து காப்பாற்றலாமே .

பெற்றோர்களே ! தயவு செய்து குழந்தைகளுக்கு நல்ல கருத்துள்ள விஷயங்களை மட்டும் பார்க்க அனுமதியுங்கள் .

திங்கள், 23 நவம்பர், 2009

தஞ்சை பெரிய கோயில் - சில வரிகள்




தஞ்சை பெரிய கோவிலில் இப்பொழுது இருக்கும் நந்தி சோழ மன்னன் ராஜராஜன் கட்டியது இல்லை என்பது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் . அது நாயக்கர் காலத்தில் உருவாக்க பட்டது . ராஜராஜன் கட்டிய நந்தி இப்பொழுது இருக்கும் நந்திக்கு நேர் தெற்கு பக்கத்தில் திருச்சுற்று நடைமாளிகையில் இன்றும் உள்ளது . இது அளவில் சற்று சிறியதாக இருக்கும் .

இந்த கோவிலின் உட்புறம் உள்ள அம்மன் கோயில் , முருகன் சந்நிதி , கருவூரர் சந்நிதி , வராகிகோயில் , விநாயகர் கோயில் இவை அனைத்தும் ராஜராஜ சோழன் கட்டாதவை . பெரியகோயில் , சண்டிகேஸ்வரர் கோயில் , திருச்சுற்று நடைமாளிகை , இரண்டு கோபுரங்கள் மட்டுமே ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டவை .

பெரியகோயில் கி .பி 1004 இல் ஆரம்பித்து கி .பி 1010 இல் கட்டிமுடிக்கப்பட்டது . இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உள்ளது . 216 அடி உயரத்தில் மலைபோல அமைந்திருப்பதால் ராஜராஜனால் தட்சிணமேரு என்று பெயரிடப்பட்டது .

இந்த கோயிலை உருவாக்கிய தச்சன் வீரசோழன் குஞ்சர மல்லனான இராசராசப் பெருந்தச்சன் ஆவான் .


ராஜராஜனை பற்றி சில வரிகள் :

தாய் -- வானவன் மாதேவி

தந்தை -- சுந்தரசோழன்

பிறந்த நாள் -- ஐப்பசி , சதயம்

முடி புனைந்த நாள் -- 25 .6. 985

ஆண்ட காலம் -- கி . பி 985 - 1014

பட்டத்தரசி -- உலகமாதேவி

மக்கள் -- ராஜெந்த்ரசோழன்

ஆளவந்தான்

மாதேவடிகள்

குந்தவை

கங்கமாதேவி

சகோதரி -- குந்தவை பிராட்டியார்

சகோதரன் -- ஆதித்த கரிகாலன்

வியாழன், 19 நவம்பர், 2009

குமரி கண்டம்




குமரிக்கண்டம்
எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில்  சில தகவல்கள் உண்டு.
இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என சிலர் எழுதியுள்ளனர் . ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய குமரிக்கண்டம் சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால் அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து.  
தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை   விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூல்களின்  தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. நூல்களில் குறிப்பிட்டுள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிருபிக்கப்படவோ , மறுக்கப்படவோ இல்லை.

Pit