கூர்க் - மழையை எதிர் நோக்கி ஒரு மதிய வேளை....
கூர்க் , தலைக்காவிரிக்கு அருகில் ....... கரை புரண்டு ஓடும் காவிரி நதி .......
கூர்க் -- புத்தர் கோயிலின் அழகிய தோற்றம்
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
வெள்ளி, 29 ஜனவரி, 2010
இன்றைய தலைமுறையின் அவசர முடிவு ......
இன்றைய காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளும் , மாணவச் செல்வங்களும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து உள்ளது. மாடியிலிருந்து குதிப்பதும் , மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்வது அதிகமாக உள்ளது. இதெல்லாம் பார்க்கும் போது எங்கே செல்கிறது நம் வருங்கால சந்ததியினரின் பாதை என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. ஏன் இந்த அவசர முடிவு ? எது அவர்களை இந்த பாதைக்கு தூண்டியது?
இளைய தலைமுறையினரின் இந்த அவசர முடிவு மிகவும் வருந்தத்தக்க , கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகிவிட்டது. எதையும் தாங்கக் கூடிய மனப்பக்குவமும் , தைரியமும் இல்லாததே இவர்களின் இந்த அவசர முடிவுக்கு காரணம் என்பது மட்டும் புரிகிறது.
போன தலைமுறையிடம் இருந்த பக்குவம், தைரியம் போன்றவை இப்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உடனுக்குடன் உணர்ச்சி வசப்படுவதும் , எதற்கு எடுத்தாலும் கோபப் படுவது என்று இவர்களின் இந்த போக்கு ஒரு வித அச்சத்தை உண்டு பண்ணுகிறது.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் போது , பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோரும் , குழந்தைகளும் தனித்து உள்ளார்கள். கூட்டுக் குடும்பமாக இருப்பதில்லை. அதோடு பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் அந்தக் குழந்தை தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. எனவே அக்குழந்தை தொலைக்காட்சியின் துணையை நாடுவதால் , அதன் மூலம் அக்குழந்தையின் மனதில் விதவிதமான எண்ணங்கள் உருவாகிறது. அது அந்த குழந்தையின் மனதில் ஒரு சில நல்ல விஷயங்களை பதித்தாலும் பெரும்பாலான நேரங்களில் விஷ விதைகளைத் தூவுகிறது.
அது மட்டும் இல்லாமல் இப்போது அநேக இல்லங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை என்பது இப்போது அனேக வீடுகளில் அதிகம் இருப்பதில்லை. பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் உள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தை தனக்கு தேவை என்று நினைக்கும் ஒரு பொருள் , அதற்கு கேட்பதற்கு முன்பே கிடைத்து விடுகிறது. முந்தைய நாட்களில் அனேக வீடுகளில் குறைந்தது மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருக்கும். வருமானமும் கம்மியாக இருந்ததால் அக்குழந்தைகள் கேட்கும் அனைத்தும் கிடைப்பதில்லை . எனவே அதற்கு இல்லை, கிடையாது என்ற வார்த்தைகள் பழகிப் போன ஒன்றாக இருந்தது.
ஆனால் தற்போது எல்லாமே உடனுக்குடன் கிடைப்பதால் அக்குழந்தைகள் சற்றே வளர்ந்த பின் இல்லை என்ற வார்த்தையை விரும்புவதில்லை . அப்படி இருப்பதால் எந்த ஒரு சிறு ஏமாற்றத்தையும் அதற்கு தாங்கும் சக்தி இல்லாமல் போய் விடுகிறது. இதுவே அவர்களின் வாழ்க்கையை திசை திருப்பி தற்கொலை என்ற அவசர முடிவுக்கு அவர்களை தள்ளுகிறது.
எனவே பெற்றோர்களே ! தயவு செய்து குழந்தைகளுக்கு எதையுமே கேட்டவுடன் வாங்கி கொடுப்பதை நிறுத்துங்கள். அவர்களுக்கு சற்றே கசப்பையும் காட்டுங்கள். வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் இரண்டும் நிறைந்தது என்பது நம் கண்மணிகளுக்கு தெரிய வேண்டும். அதை சரியான விதத்தில் புரிய வைக்க வேண்டிய மிகப் பெரிய கடமை பெற்றோர்களாகிய நம் கையில் தான் உள்ளது. இன்றே செயல்படுத்தலாமா !!!!!!

திங்கள், 25 ஜனவரி, 2010
வண்ணமிகு பூக்கள்
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத் தான் ஆசை !!!!!!!!
எந்தப்பூவிலும் வாசம் உண்டு
பூவே செம்பூவே உன் வாசம் வரும் ......
செவ்வாய், 19 ஜனவரி, 2010
கடவுள் வழிபாடு
நம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது
ஒரு பிரச்னை இருந்து கொண்டு
தான் இருக்கிறது .வாழும் காலம்
முழுவதும் தினமும் ஏதாவது
ஒரு பிரச்னையை சந்தித்துக்
கொண்டு தான் இருக்கிறோம் .
கவலைகள் இல்லாத மனிதன்
என்று யாராவது இருக்கிறார்களா
என்றால் கிடையாது என்பது தான்
சரியான விடை . ஆனால்
எல்லாவற்றிற்கும் ஏதாவது காரணம்
கற்பித்து நல்ல காலம் பிறக்கும்
என்று காத்திருப்பதும் உண்டு .சில
நேரங்களில் ஆன்மிக வழியில்
சில பரிகாரங்கள் செய்வதும் உண்டு .
நமக்கும் மேல் ஏதோ ஒரு
மகத்தான சக்தி உண்டு என்பது
மட்டும் நமக்கு தெரிகிறது .
அதற்கு கடவுள் என்று பெயர்
சூட்டியுள்ளோம் .இதுதான் கடவுள்
என்று குறிப்பிட்டு சொல்ல கடவுளுக்கு
எந்த வடிவமும் கிடையாது .
அனைத்து உருவங்களும் மனிதனால்
உருவாக்கப்பட்டவை தான் . எப்படி
காற்றை நம்மால் பார்க்க
முடியாதோ அதே போல்
கடவுளையும் நம்மால் பார்க்க
முடியாது . அதை உணர தான் முடியும் .
இன்று கோயில்களில் காணப்படும்
அதிகப்படியான கூட்டம் நமக்கு
எதை உணர்த்துகிறது என்றால்
மக்கள் மனத்தில் ஏற்ப்பட்டுள்ள
பயத்தை காட்டுகிறது . நாட்டில்
தவறுகள் பெருக பெருக ,
அதை மறைக்க மனிதன் கடவுளை
நாடுகிறான் . பிரார்த்தனை ,
வேண்டுதல்கள் மூலம் அதை
நிறைவேற்றிக் கொள்கிறான் .
கோயிலுக்கு செல்லும் அனைவரும்
ஏதாவது ஒரு கோரிக்கையுடன்
தான் செல்கிறோம் . ஆனால்
நம்மில் எத்தனை பேர்
கடவுளிடம் நன்றி என்று
சொல்வதற்காக செல்கிறோம் ?
நல்ல குடும்பம் , குழந்தைகள் ,
வசதி வாய்ப்புகள் அனைத்தும்
இருந்தாலும் நன்றி கூறுவதில்லை .
நம்மை விட வறியவர்களையும் ,
வசதி இல்லாதவர்களையும்
தினமும் நாம் வாழ்க்கையில் கடந்து
போகிறோம் . ஆனால் நாம்
அவர்களை ஒரு போதும்
கண்டுகொள்வதில்லை .
நம்மைச் சுற்றி இருக்கும் ஏழை
மக்களுக்கும் , வயதானவர்களுக்கும் ,
ஆதரவற்றவர்களுக்கும் நம்மால்
முடிந்த சிறுசிறு உதவிகளை
செய்யலாம் . பசிக்கு சோறுகொடுப்பது
என்பது எல்லாவற்றையும் விட
மிகவும் சிறந்த ஒரு செயல் .
"தானத்தில் சிறந்தது அன்ன தானம் "
நமக்கு தேவையற்றது என்று
நாம் நினைக்கும் சில பொருட்கள்
வறியவர்களுக்கு மிகவும் அத்தியாவசிய
பொருளாக இருக்கும் . அவற்றை
அவர்களுக்கு கொடுத்து உதவலாமே !
அதுவே நம்மை சுற்றி இருப்பவர்களிடம்
நாம் காட்டும் ஆத்மார்த்தமான
அன்பு ஆகும் .கடவுளை
வணங்குவதில் தவறில்லை..
ஆனால் அதோடு சேர்த்து
வறியவர்கள் , நோய் தாக்கியவர்கள் ,
ஆதரவு அற்றவர்கள் மற்றும் முதியவர்கள்
இவர்களுக்கு உதவுவதும் , அவர்களை
அரவணைப்பதும் தான்
உண்மையிலேயே கடவுள் வழிபாடு .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)