ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ..........
காலையில் வெறும் வயிற்றில் குறைந்தது 4 டம்ளர்
அளவு ஆறிய வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
அதிகாலையில் குறைந்தபட்சம் 2 கி .மீ தூரம் நடக்க
வேண்டும். உடலுக்கு நல்ல பிராண வாயு கிடைக்கும்.
முதல் கால் மணி நேரம் மெதுவாகவும், அடுத்த
அரைமணி நேரம் வேகமாகவும் , கடைசி கால் மணி
நேரம் மெதுவாகவும் நடக்க வேண்டும்.முடியாதவர்கள்
வீட்டிலேயே சின்னச்சின்ன உடற்ப்பயிற்சிகள் செய்யலாம்.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு
மிகவும் நல்லது. நெல்லிக்காயை காய வைத்து பொடி
பண்ணி அதனுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிடலாம்.
நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் , கீரை வகைகள் , பயறு
வகைகள் உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
அசைவம் விரும்பினால் கடல் மீன்களில் சிறிய வகை
மீன்கள் , தோல் நீக்கிய கோழி இறைச்சி நிறைய சாப்பிடலாம்.
இவற்றில் புரதச் சத்து அதிக அளவில் கிடைக்கும்.
வயது 35 தாண்டியவர்கள் வருடம் ஒருமுறை மருத்துவரிடம்
சென்று உடல்நலத்தை பரிசோதித்து கொள்வது அவசியம்.
6 கருத்துகள்:
என்ன DR.மலர் MBBS-ஆ? ஆரோக்யத்துக்கு எவ்வளவு அக்கறை? சும்மா தூள் கிளப்புங்க....
நல்ல உபயோகமான அறிவுரைகள்..நன்றி..
புது வருடத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க நல்ல குறிப்புகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!
நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க. நன்றி.
அருமையான தொகுப்பு, அனைத்தும் கடைபிடிக்க வேண்டியவை. கடல் மீன்களில் கிடைக்கும் ஒமேகா ஆசிட் செயற்கையாக செய்ய முடியாது என படித்து இருக்கிறேன். வாழ்க வளமுடன்.
நல்ல படைப்பு. புத்தாண்டு வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக