1 .துறை தலைவர் - படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் தூங்கினா போதும்...!
மாணவன் - வீட்லையா , காலேஜிலையா சார்...
துறை தலைவர் - ??????
2.கிரிக்கெட் ஒரு பித்தலாட்ட விளையாட்டு ....
* கைல பால் வச்சிக்கிட்டு நோ பால்னு சொல்லுவாங்க .
* ஓவர்னு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போடுவாங்க.
*ஆல் அவுட்னு சொல்லுவாங்க .ஆனா பத்து பேருதான் அவுட் ஆகி இருப்பாங்க .
*ஒரு ஓவருக்கு ஆறு பால்னு சொல்லிட்டு ஒரு பால் தான் வச்சிருப்பாங்க .
*அம்பயர் ஒரு கைய தூக்கினா ஒரு விளையாட்டு வீரர் அவுட்டாம் .அப்ப ரெண்டு கைய தூக்கினா இருவர் தானே அவுட்.ஆனா சிக்ஸ்னு சொல்லுறாங்க.
என்ன விளையாட்டு இது....
3 . தி .மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏற்ப்பட போகும் மாற்றங்கள் ...
*தமிழ்நாடு 'கலைஞர் நாடு' என்று பெயரிடப்படும்.
*தமிழ்மொழி 'கனிமொழி' என்று மாறும்.
*மதுரை 'அழகிரி இல்லம்' என பெயர் மாற்றம் செய்யப்படும்.
*ஸ்டாலின் பிறந்த தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படும்.
சனி, 18 டிசம்பர், 2010
புதன், 15 செப்டம்பர், 2010
நம்பிக்கை மலர்கள்
"நம்பிக்கை "
என் இனிய நண்பர்களே !!!!
சிதம்பரதிலிருந்து பிச்சாவரம் செல்லும் வழியில் கிள்ளை என்றொரு சின்னஞ்சிறு கிராமத்தில் இந்த" நம்பிக்கை " இல்லம் இருக்கிறது.இது ஒரு பெண்குழந்தைகள் காப்பகம்.இங்கு 30 பெண்குழந்தைகள் உள்ளனர். 9 முதல் 16 வயது சிறுமிகள் இந்த காப்பகத்தில் உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் சுனாமியில் பெற்றோரை இழந்தவர்கள் .மற்றவர்களும் ஏதோ ஒருவகையில் ஆதரவற்ற நிலையில் அந்த காப்பகத்தில் உள்ளனர்.
ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்த சிறுமிகளை மூன்று வருடங்களுக்கு தத்து எடுத்து அவர்களுக்கு மூன்று வேலையும் உணவு கொடுத்து வந்தது.வருடத்திற்கு இரண்டு முறை உடுத்த ஆடையும் அளித்தது.அவர்கள் தங்குவதற்கு இரண்டு ஏக்கர் பரப்பளவில் இந்த நம்பிக்கை இல்லத்தை கட்டி கொடுத்தது.அந்த சிறுமிகள் சுனாமிக்கு முன் படித்த பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க வசதியும் செய்து கொடுத்தது.மூன்று வருடம் கழித்து அந்த நிறுவனம் தங்கள் சேவையை ரத்து செய்தபோது இல்லத்தின் காப்பாளர் கேட்டுகொண்டதற்கு இணங்கி அந்நிறுவனம் தங்கள் சேவையை மேலும் இரண்டு வருடங்கள் நீடித்தது.தற்போது அந்நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தி விட்டது.
தற்சமயம் அப்பிள்ளைகளின் மூன்று வேளை சாப்பாடு கேள்விக்குறியாக உள்ளது.
சென்ற முறை நான் அந்த காப்பகத்திற்கு சென்ற போது அப்பிள்ளைகளின் இந்த நிலை எனக்கு தெரிய வந்த போது மிகவும் வேதனை அடைந்தேன்.இல்ல காப்பாளரிடம் என்னால் முடிந்த உதவி செய்வதாக கூறிவிட்டு வந்தேன்.
என் நண்பர்களாகிய நீங்கள் ஏதாவது செய்ய நினைத்தால் அக்குழந்தைகளுக்கு உதவுங்கள்.
முகவரி:
"நம்பிக்கை",
கிள்ளை,
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம்.
நன்றி.

வியாழன், 8 ஜூலை, 2010
ஓர் புது வரவு
வணக்கம்,
என் அன்பு மகனின் புதிய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.உங்கள் அன்பான ஆதரவை தருமாறு கேட்டு கொள்கிறேன்.நன்றி,நண்பர்களே!!!!
http://rrkeasymoviedownload.blogspot.com
என் அன்பு மகனின் புதிய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.உங்கள் அன்பான ஆதரவை தருமாறு கேட்டு கொள்கிறேன்.நன்றி,நண்பர்களே!!!!
http://rrkeasymoviedownload.blogspot.com
சனி, 3 ஜூலை, 2010
பிச்சாவரம்
சிதம்பரம் அருகே இருக்கும் , இயற்கை அழகு கொட்டிகிடக்கும் வனப்பகுதி.சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய அற்புதமான இடம் இது.
சிதம்பரதிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.சாலைவசதி மேம்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கு எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல்,பயணம் எளிதாக உள்ளது.
பிச்சாவரம் ஒரு சதுப்பு நிலக் காடு. மூன்றாயிரம் ஏக்கர் நிலபரப்பில் பரவி உள்ளது. இங்கு சுரபுன்னை எனும் மாங்க்ரோவ் தாவரங்கள் நிறைந்துள்ளன.
இந்தியாவில் இரண்டே இடங்களில் தான் இவ்வகை காடுகள் உள்ளன.மற்றொரு இடம் கொல்கத்தா கடல் பகுதி ஆகும். இந்த சதுப்பு நிலம் கடலோடு இணைகிறது.
தண்ணீர் அதிக ஆழம் இல்லாமல் பல நூறு மைல்களுக்கு பரவி இருப்பதால் படகு பயணம் செல்ல அற்புதமான இடமாக உள்ளது .
பச்சை பசேலென்று காணப்படும் சுரபுன்னை காடுகளிடையே படகில் பயணிப்பது பரவசம் ஊட்டும் அற்புதமான அனுபவம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)