கொல்லி மலையின் எழில்மிகு காட்சிகள்
பச்சை போர்வை போர்த்திய மலைத்தொடர்கள்
பனிபடர்ந்த காலை நேரத்து கொல்லி மலை
இயற்கை அன்னையின் கருணையில் பசுமை சிறிதளவும் குறையாமல் .......
கொல்லி மலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் உள்ளது.அடிவாரத்திலிருந்து ஏறும்போது 70 கொண்டைஊசி வளைவுகள் வருகிறது.
கொல்லி மலை சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு அற்புதமான தளம்.மிகவும் அமைதியான சூழ்நிலை .நகரத்து இரைச்சல் எதுவும் அங்கு கிடையாது.
மிதமான குளிர் ,அதிக வெப்பமும் கிடையாது.அதிக குளிரும் கிடையாது.எங்கு திரும்பினாலும் பசுமை தான்.
இங்கு பலவிதமான மூலிகைகள் கொட்டிகிடப்பதாக அங்கு வசிப்பவர்கள் கூறுகிறார்கள்.
அங்கு வீசும் காற்றில் கூட மூலிகைகள் கலந்து வரும் என கிராமமக்கள் தெரிவிக்கிறார்கள்.
கொல்லி மலையில் அவசியம் பார்க்க வேண்டிய ஓர் அற்புதமான இடம் உண்டு. அது ஆகாச கங்கை என்னும் நீர்வீழ்ச்சி .மலையின் மேல் இருக்கும் அந்த நீர்வீழ்ச்சிக்கு ஆயிரம் படிகள் வழியாக இறங்கி போனால் தான் பார்க்க முடியும்.அருவியின் இரைச்சல் வெகு தூரத்திலிருந்து கேட்க்க முடிகிறது.அருகில் சென்றால் ஆகாயத்திலிருந்து அருவி கொட்டுவது போல் ஓர் அற்புதமான காட்சி நம் கண்முன்னே தோன்றுகிறது.சுமார் 500 மீட்டர் தூரத்திலேயே சாரல் வீசி நம்மை நிலைகுலைய செய்கிறது.அந்த அற்புதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
மேலும் இங்குள்ள அரபலீஸ்வரர் கோயில் மிகவும் பார்க்கவேண்டிய இடம் .
செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
சனி, 13 பிப்ரவரி, 2010
சின்னஞ்சிறு ஈமுக்கள்
படத்தில் நீங்கள் காணும்இந்த
பெரிய ஈமுக்கள்ஈன்ற
இந்த முட்டைகளிலிருந்து வந்தவை தான்
இந்தகுட்டி ஈமுக்கள்.
காடுகளில்வாழும் ஈமுக்களில் பெண் ஈமு முட்டை இட்டதும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடும்.அதன் பின்பு ஆண் ஈமு அந்த முட்டையை மற்ற விலங்குகளிடமிருந்து காப்பாற்ற
படத்தில் உள்ளது போல் காய்ந்த சருகுகள் ,குச்சிகள் இப்படி அனைத்தையும் சேகரித்து முட்டை மேல் போட்டு மூடி வைக்கும்.முட்டைகள் சேர்ந்ததும் ஆண் ஈமு உட்கார்ந்து அடைகாக்கும்.இது காடுகளில் நடக்கும்.வழக்கம்.
ஆனால் நகரங்களில் பெண் ஈமு முட்டை இட்டதும் அதை சேகரித்து வைத்து பின்பு முட்டை அடைகாக்கும் இயந்திரத்தில் வைத்துவிடுவார்கள். 90 டிகிரி வெப்பத்தில் அந்த முட்டைகளை வைத்துவிடுவார்கள்.48 நாட்கள் முட்டைகள் இயந்திரத்தில் இருக்கும்.பிறகு வெளியே வரும்.மேலே உள்ள படத்தில் நீங்கள் காணும்இந்த குட்டி ஈமுக்கள் பிறந்து இருபத்தி ஓர் நாட்கள் ஆகின்றன.
இந்த ஈமுக்களுக்கு தானியங்களை துளாக்கி உணவாக கொடுக்கிறோம்.நன்கு ஆறவைத்த வெந்நீர் குடிக்கும்.தண்ணீர் மிகவும் அதிகமாக குடிக்கும்.கால்சியம் சத்து தேவை என்பதால் தண்ணீரில் அதையும் சேர்த்து கொடுக்கிறோம்.
தண்ணீர் அதிகமாக குடிப்பதால் இதன் வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும்.15 மாதத்தில் அது 6 அடி உயரம் வளர்ந்து விடும்.
குட்டி ஈமுக்கள் இயந்திரத்தை விட்டு வெளியே வந்தபிறகு குளிர் தாங்காது.ஆகவே அதை காற்று புகாத சிறிய அறையில் வைத்து விடவேண்டும்.பிறகு அதன் தலைக்கு மேலே 5 அல்லது 6 குண்டு பல்புகளை எரிய விடவேண்டும்.அந்த வெப்பத்தில் தான் அவை உயிர் வாழ முடியும்.இது போல் அவற்றை குறைந்தது ஒரு மாதத்திற்கு பாதுகாக்க வேண்டும்.
மேலும் கழுகு ,பருந்து போன்ற பறவைகளிடமிருந்தும் அவற்றை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.
சனி, 6 பிப்ரவரி, 2010
கங்கை கொண்ட சோழபுரம்
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்
கி .பி 1014 முதல் 1042 வரை ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தான். அவன் தன் தலைநகரை தஞ்சையிலிருந்து மாற்றினான். இப்பொழுது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரை உடைய
நகரை உண்டாக்கி அதையே தலைநகராகக் கொண்டான். அவன் காலத்திலும் ,
அவன் காலத்திற்கு பிறகு சோழர்களின் இறுதி வரை இந்நகரமே அவர்களின் தலைநகரமாக விளங்கியது.
அக்காலத்தில் இந்நகரம் நான்கு மைல் சதுர அமைப்புடன் இருந்ததாக தெரிகிறது.
கோயிலுக்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிரகதீசர் தீர்த்த குளம் இன்றும் உள்ளது. பரணைமேடு என்னும் , கோயிலுக்கு ஏழு மைல் தொலைவில் உள்ள சிற்றூரிலிருந்து பருத்தி மூட்டைகளை அடுக்கி பரணை கட்டி விமானக் கல் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. ராஜேந்திரன் தஞ்சை கோயிலை பின்பற்றியே இக்கோவிலைக் கட்டினான் . சுவாமியின் பெயர் பிரகதீசுரர் . அம்பிகையின் பெயர் பிரகநாயகி.
இக்கோவில் கும்பகோணம் , சிதம்பரம் இரண்டுக்கும் இடையில் உள்ளது.
இக்கோவில் ராஜேந்திரனின் வடநாட்டு வெற்றிகள் முடிந்ததும் கி. பி 1025 இல் தொடங்கப்பட்டது.
கோவிலின் திருமதில் 600 அடி நீளமுடையது. அகலம் 450 அடி. இரண்டு அடுக்கு திருச்சுற்று மாளிகையின் ஒரு பகுதி மட்டுமே இப்போது காணப்படுகிறது. கோவிலின் நீளம் 350 அடி. அகலம் 110 அடி .
இறைவன் சந்நிதியின் மேல் உள்ள விமானம் 186 அடி உயரமாகும். சுவாமியின் லிங்க திருமேனி மிகவும் பெரியதாகும். லிங்கத்தின் உயரம் 13 அடி. பீடம் 30 முழம் சுற்றளவுடையது.
இக்கோவில் சோழர்கால கோவில்கள் அனைத்திலும் , அழகிலும் , சிற்ப திறனிலும் தனி தன்மையுடன் விளங்கியதாக தெரிகிறது.
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
நான் ரசித்தவை
கூர்க் - மழையை எதிர் நோக்கி ஒரு மதிய வேளை....
கூர்க் , தலைக்காவிரிக்கு அருகில் ....... கரை புரண்டு ஓடும் காவிரி நதி .......
கூர்க் -- புத்தர் கோயிலின் அழகிய தோற்றம்
கூர்க் , தலைக்காவிரிக்கு அருகில் ....... கரை புரண்டு ஓடும் காவிரி நதி .......
கூர்க் -- புத்தர் கோயிலின் அழகிய தோற்றம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)























