சனி, 13 பிப்ரவரி, 2010

சின்னஞ்சிறு ஈமுக்கள்




படத்தில் நீங்கள் காணும்இந்த
பெரிய ஈமுக்கள்ஈன்ற


இந்த முட்டைகளிலிருந்து வந்தவை தான்




 இந்தகுட்டி ஈமுக்கள்.


காடுகளில்வாழும் ஈமுக்களில் பெண் ஈமு முட்டை இட்டதும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடும்.அதன் பின்பு ஆண் ஈமு அந்த முட்டையை மற்ற விலங்குகளிடமிருந்து காப்பாற்ற



 
படத்தில் உள்ளது போல் காய்ந்த சருகுகள் ,குச்சிகள் இப்படி அனைத்தையும் சேகரித்து முட்டை மேல் போட்டு மூடி வைக்கும்.முட்டைகள் சேர்ந்ததும் ஆண் ஈமு உட்கார்ந்து அடைகாக்கும்.இது காடுகளில் நடக்கும்.வழக்கம்.
ஆனால் நகரங்களில் பெண் ஈமு முட்டை இட்டதும் அதை சேகரித்து வைத்து பின்பு முட்டை அடைகாக்கும் இயந்திரத்தில் வைத்துவிடுவார்கள். 90 டிகிரி வெப்பத்தில் அந்த முட்டைகளை வைத்துவிடுவார்கள்.48 நாட்கள் முட்டைகள் இயந்திரத்தில் இருக்கும்.பிறகு வெளியே வரும்.மேலே உள்ள படத்தில் நீங்கள் காணும்இந்த குட்டி ஈமுக்கள் பிறந்து இருபத்தி ஓர் நாட்கள் ஆகின்றன.

இந்த ஈமுக்களுக்கு தானியங்களை துளாக்கி உணவாக கொடுக்கிறோம்.நன்கு ஆறவைத்த வெந்நீர் குடிக்கும்.தண்ணீர் மிகவும் அதிகமாக குடிக்கும்.கால்சியம் சத்து தேவை என்பதால் தண்ணீரில் அதையும் சேர்த்து கொடுக்கிறோம்.
தண்ணீர் அதிகமாக குடிப்பதால் இதன் வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும்.15 மாதத்தில் அது 6 அடி உயரம் வளர்ந்து விடும்.

குட்டி ஈமுக்கள் இயந்திரத்தை விட்டு வெளியே வந்தபிறகு குளிர் தாங்காது.ஆகவே அதை காற்று புகாத சிறிய அறையில் வைத்து விடவேண்டும்.பிறகு அதன் தலைக்கு மேலே 5 அல்லது 6 குண்டு பல்புகளை எரிய விடவேண்டும்.அந்த வெப்பத்தில் தான் அவை உயிர் வாழ முடியும்.இது போல் அவற்றை குறைந்தது ஒரு மாதத்திற்கு பாதுகாக்க வேண்டும்.
மேலும் கழுகு ,பருந்து போன்ற பறவைகளிடமிருந்தும் அவற்றை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.  

11 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

தகவல்களை எங்கு சேகரிக்கிறிங்க.. முக்கியமா புகைப்படங்களை.

புலவன் புலிகேசி சொன்னது…

முன்னர் ஒரு முறை ஈ.மு பத்தி சொல்லிருந்தீங்களே..அது போட்ட முட்டையா?

ராமலக்ஷ்மி சொன்னது…

தெரியாத தகவல்கள். அருமையான பகிர்வுங்க. நன்றி.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

தகவல்களுக்கும், படங்களுக்கும் நன்றி.

malarvizhi சொன்னது…

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே!

படத்தில் உள்ள ஈமுக்கள் அனைத்தும் எங்கள் வீட்டு தோட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வளர்க்கிறோம். படங்களும் நான் எடுத்தவை தான். நானே நேரடியாக கண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

படத்தில் உள்ள முட்டைகள் பெரிய ஈமுக்களின் முட்டைகளே.

ராமலக்ஷ்மி சொன்னது…

//இந்த ஈமுக்களுக்கு தானியங்களை துளாக்கி உணவாக கொடுக்கிறோம்.நன்கு ஆறவைத்த வெந்நீர் குடிக்கும்.தண்ணீர் மிகவும் அதிகமாக குடிக்கும்.கால்சியம் சத்து தேவை என்பதால் தண்ணீரில் அதையும் சேர்த்து கொடுக்கிறோம்.//

இவ்வரிகளிலே புரிந்து கொள்ள முடிந்தது சொந்த அனுபவப் பகிர்வென்பது. படங்களும் மிக அருமை.

சரவணன். ச சொன்னது…

வணக்கம் மலர்விழி
இது இனவிருத்தி மாதம் போல உங்க விட்டுல ஈமு கோழி முட்டையிட்டு குஞ்சுபொறிச்சத போல எங்க விட்டுல இரண்டு “Red Jewel” மீன் ஒரு 200 முட்டையிட்டு குஞ்சுபொறிச்சு ஒரே அழகா இருக்கு.

பேரன் பேத்தி எடுத்தது போல ஒரெ சந்தோஷம்.தினமுன் அதுங்களுக்கு உனவு அளிப்பது அதை அந்த குட்டீஸ் சாப்பிடுற அழகு பார்த்தாலே மனது லேசா அயிடுது.

எனக்கும் பறவைகள் வளர்க்கனும் ஆசை ஆனா விட்டில் இடபற்றாக்குறை. விரைவில் "Peacock Tail புறா வளர்க்களாம் என்று உள்ளேன், பார்ப்போம். முடிந்தால் ஆலோசனை பகிறவும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

சரவணன் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை வள்ளுவன் வாக்கு போல,
இசை என்பது இனிதானது. அதைவிட இனிமையானது தான் பெற்றெடுத்த பிள்ளையின் மழலை சொல்.

malarvizhi சொன்னது…

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி சரவணன். நீங்கள் கூறியது சரிதான். என் வீட்டிலும் மீன் குஞ்சு பொரித்துள்ளது. அதை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது. ஆனால் நீங்கள் கூறியது போல் 200 பொறிக்கவில்லை. 20 அல்லது 25 இருக்கும்.பராமரிப்பது கஷ்டமாக உள்ளது.சில இறந்து விட்டன.அது மனதுக்கு மிகவும் சங்கடமாக உள்ளது.

கருத்துக்கு நன்றி வாசன்.

கவி அழகன் சொன்னது…

ருமையான பகிர்வு

R.Gopi சொன்னது…

ஈ.மு.வளர்ப்பு!!????

பலே.... சொந்த அனுபவத்தில் நீங்கள் கூறிய விஷயங்கள் அனைத்தும் அருமை...

Pit