சனி, 6 பிப்ரவரி, 2010
கங்கை கொண்ட சோழபுரம்
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்
கி .பி 1014 முதல் 1042 வரை ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தான். அவன் தன் தலைநகரை தஞ்சையிலிருந்து மாற்றினான். இப்பொழுது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரை உடைய
நகரை உண்டாக்கி அதையே தலைநகராகக் கொண்டான். அவன் காலத்திலும் ,
அவன் காலத்திற்கு பிறகு சோழர்களின் இறுதி வரை இந்நகரமே அவர்களின் தலைநகரமாக விளங்கியது.
அக்காலத்தில் இந்நகரம் நான்கு மைல் சதுர அமைப்புடன் இருந்ததாக தெரிகிறது.
கோயிலுக்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிரகதீசர் தீர்த்த குளம் இன்றும் உள்ளது. பரணைமேடு என்னும் , கோயிலுக்கு ஏழு மைல் தொலைவில் உள்ள சிற்றூரிலிருந்து பருத்தி மூட்டைகளை அடுக்கி பரணை கட்டி விமானக் கல் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. ராஜேந்திரன் தஞ்சை கோயிலை பின்பற்றியே இக்கோவிலைக் கட்டினான் . சுவாமியின் பெயர் பிரகதீசுரர் . அம்பிகையின் பெயர் பிரகநாயகி.
இக்கோவில் கும்பகோணம் , சிதம்பரம் இரண்டுக்கும் இடையில் உள்ளது.
இக்கோவில் ராஜேந்திரனின் வடநாட்டு வெற்றிகள் முடிந்ததும் கி. பி 1025 இல் தொடங்கப்பட்டது.
கோவிலின் திருமதில் 600 அடி நீளமுடையது. அகலம் 450 அடி. இரண்டு அடுக்கு திருச்சுற்று மாளிகையின் ஒரு பகுதி மட்டுமே இப்போது காணப்படுகிறது. கோவிலின் நீளம் 350 அடி. அகலம் 110 அடி .
இறைவன் சந்நிதியின் மேல் உள்ள விமானம் 186 அடி உயரமாகும். சுவாமியின் லிங்க திருமேனி மிகவும் பெரியதாகும். லிங்கத்தின் உயரம் 13 அடி. பீடம் 30 முழம் சுற்றளவுடையது.
இக்கோவில் சோழர்கால கோவில்கள் அனைத்திலும் , அழகிலும் , சிற்ப திறனிலும் தனி தன்மையுடன் விளங்கியதாக தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
14 கருத்துகள்:
தகவல்களுக்கு நன்றி.
நல்ல பதிவு. சிதம்பரத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் (சென்னையோடு ஒப்பிடும் போது...) கிட்டக்கத்தானே... இன்னும் நிறைய தகவல் தந்திருந்திங்கன்னா, எம் போன்ற ஆளுங்களுக்கு பயன் உள்ளதா இருந்திருக்கும்.
-தோழன் மபா
இன்னும் கொஞ்சம் போட்டா போடுங்க
புகைப்படம் ரெம்ப அழகுங்க.
இது எங்க ஏரியா..நான் படித்த கல்லூரிக்கு அருகிலிருப்பதால், எங்கள் பொழுது போக்கு இங்கேதான்
சமீபத்தில போனீங்களா?
புலிக்கு பிறந்தது பூனை இல்லை என்பதனை நிருபித்து காட்டியவன் இராஜேந்திர சோழன்.
எடுத்துகாட்டாய் இந்த கங்கை கொண்ட சோழபுரம், எங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையாக.
கருத்து கூறிய அனைவர்க்கும் நன்றி.
நிறைய படங்கள் எடுத்தேன் , அண்ணா. அனைத்திலும் குடும்பத்தினர் உள்ளனர் . அவர்கள் அனுமதி இல்லாமல் எப்படி போடுவது.?
புலிகேசி சார் எந்த ஊரில் படித்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?
சமீபத்தில் போகவில்லை , அம்மிணி . போய் இரண்டு வருடங்கள் இருக்கும். .
அன்புள்ள சகோதரிக்கு/தோழிக்கு,
மன்னிக்கவும். நீங்களும் தஞ்சை என்று தெரிந்திருந்தும் பிழையாக எங்கள் தஞ்சை என்று எழுதிவிட்டேன்.
(எங்கள் தஞ்சை - நம்தஞ்சையாக..)
தஞ்சைப் பெரியகோயில் சென்றிருக்கிறேன்.
கங்கைகொண்ட சோழபுரம் பார்க்கவில்லை.தகவல்களுக்கு நன்றி.
படங்களுடன் விளக்கமும் அருமை, ஒவ்வொரு வார்த்தைகளுக்கு அடுத்து ஒரு கட்டம் போல் தெரிகிறதே, எடிட்டிங் செய்ய வேண்டுமோ?
you wrote Gangaikonda cholapuram was in trichy dist, but actually its in ariyalur dist.im vijay near GKCpuram 6km Melakadambur(story ponniyin selvan begins here)My blog Kadamburtemple.blgspt.com,Kadambutemple.blgspt.com
அருமை... மிக அருமை....
இந்த இரண்டு வார்த்தைகள் மட்டுமே இந்த பதிவிற்கு போதாது என்பது எனக்கு தெரியும்...
இன்னும் கொஞ்சம் புகைப்படங்கள் சேர்த்தால், பதிவு இன்னும் நன்றாக இருக்கும்...
நான் தஞ்சை சுற்றுலா சென்றதை நினைவு படுத்தியது இந்த புகைப்படங்கள்...
வாழ்த்துக்கள் மலர்விழி...
கருத்துரையிடுக