நான் ரசித்த sms சிரிப்புகள் ..
1. கேள்வி : சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிடிச்சது இட்லியா , தோசையா?
பதில் : தோசை .
ஏன் தெரியுமா ? "கண்ணா , இட்லி கும்பலா வேகும் .... தோசை
சிங்கிளா தான் வேகும் ."
(மொக்க தாங்க முடியலப்பா ..)
2. வடிவேல் : வணக்கம்பா .. உன் டிரஸ் சூப்பரா இருக்கே ?
தீபாவளிக்கு எடுத்ததா ?
பார்த்திபன் : இல்ல ...
வடிவேல் : அப்பறம் ?
பார்த்திபன் : எனக்கு எடுத்தது .
( போதும்பா நிறுத்திப்போம் . பூராத்தையும் நிறுத்திப்போம் ....... )
3. கல்லூரி கலாட்டா
வகுப்பறை -- அற்புத தீவு
சேர்மன் -- வசூல் ராஜா
பிரின்சிபால் -- இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி
ஹச் . ஓ . டி -- நான் கடவுள்
வாத்தியார் -- படிக்காதவன்
மாணவர்கள் -- போக்கிரி
கல்லூரி வளாகம் -- சிறைச்சாலை
பதிவேடு -- மௌனம் பேசியதே
கல்லூரி பேருந்து -- சுந்தரா ட்ராவல்ஸ்
உணவகம் -- ஈ
காவலாளி -- சாமி
பரீட்சை -- அறிந்தும் அறியாமலும்
(இப்படியே போயிட்டிருந்தா என்னா அர்த்தம் ... இதுக்கு ஒரு
முடிவே கிடையாதா ......)
ரிசல்ட் -- சம்திங் சம்திங்
அரியர் -- எனக்கு 20 உனக்கு 18
கேம்பஸ் இண்டர்வியு -- திருவிளையாடல் ஆரம்பம்
- தொடரும் ......
( தொடர்ர்றுமா ....அப்ப இன்னும் முடியலியா ,..அய்யய்யோ )
2 கருத்துகள்:
நல்லா சிரிப்பு வருது.. தொடர்ந்து எழுதுங்க.. ரொம்ப கானாம போய்டரீங்க..கமெண்ட் ஒரெ பக்கம் வர மாதிரி பன்னுங்க..
ரொம்ப நல்லா இருக்கு!!!
கருத்துரையிடுக